வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

சர்வதேச தலைப்பிறை!

முதலில், இஸ்லாமிய நடைமுறையில் சந்திரன், பிறை இந்த இரண்டும் ஒன்றுதான் என்று மக்களின் எண்ணத்திற்கு மாறாக, சந்திரன் பூமியைச் சுற்றி வரும் ஒரு துணை கோளாகவும் அவ்வாறு அது சுற்றி வரும்போது அதன் ஒளி வளர்ந்து தேய்ந்து வருவதை பிறை என்றும் கொள்ள வேண்டும். இதைத் தான் அல்லாஹ் 36:39 இவ்வாறு கூறுகிறான்.

இன்னும் (உலர்ந்து வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தி இருக்கிறோம். (யாஸீன் 36:39)

இப்படி சந்திரன் வளர்ந்து தேய்வதற்கு 29 அல்லது 30 நாட்களை எடுக்கிறது. சந்திர மாதம் துல்லியமாக 29.53059… என்றிருக்க 29 அல்லது 30 என்று கணக்கிடுவது ஆங்கில தேதி, இதர தேதிகள், மற்றும் கிழமை ஒரு நாள் முழுமையாக 24 மணி நேரம் இருப்பதுபோல், முஸ்லிம்கள் கணக்கிடும் பிறை – ஒரு நாள் முழுமையாக 24 மணி நேரம் இருக்க வேண்டும் என்பதாலேயே! . அப்படியானால் தலைப்பிறை என்பது மாதத்தின் முதல் நாளையும், அப்படியே ஒவ்வொரு மன்ஸிலும்; (தங்குமிடம்) ஒரு முழு நாளைக் குறிப்பிடுகிறது என்பதை விளங்க முடியும். ஒரு முழு நாள் எனும்போது அதில் 24 மணி நேரம் மட்டுமே இருக்க முடியும். கிறித்தவ தேதி ஒரு முழுநாள் 24 மணி நேரம் இருப்பதுபோல், வாரத்தின் ஏழு கிழமைகளில் ஒரு கிழமை ஒரு முழு நாள் 24 மணி நேரம் இருப்பதுபோல், முஸ்லிம்களின் தேதியான பிறை, தலைப்பிறை முதற்கொண்டு ஒரு முழு நாள் 24 மணி நேரம் மட்டுமே இருக்க முடியும்.

அந்த அடிப்படையிலேயே முஸ்லிம்கள் உலகம் முழுவதும் ஒரு முழு நாளான வெள்ளிக்கிழமை 24 மணிக்குள் ஜும்ஆ தொழுகையை தொழுது முடித்து விடுகிறார்கள். ஜூம்ஆ தொழுகை வியாழன், வெள்ளி என இரு நாள் 48 மணியோ, வியாழன், வெள்ளி, சனி என மூன்று நாள் 72 மணியோ ஒரு போதும் ஆவதில்லை. அப்படியானால் ஒரே நாளில் நடந்து முடிய வேண்டிய பெருநாள் தொழுகைகள் மட்டும் எப்படி இரண்டு நாளோ, மூன்று நாளோ இடம் பெறுகிறது என்பதை முஸ்லிம்கள் புரோகிதர்களைப் புறம் தள்ளி சுயமாக சிந்தித்து விளங்கினால் அவர்களாலும் உண்மையைக் கண்டறிய முடியும்.

ரமழான் ஆரம்பம், இரண்டு பெருநாள்கள், இரண்டு நாள் மூன்று நாள் வரலாம், வர முடியும் என்பது புரோகிதர்களின் வாதம். இதற்கு எதை ஆதாரமாக வைக்கிறார்கள் என்றால் தலைப்பிறையை அந்தந்த பகுதி மக்கள் தங்களின் புறக் கண்ணால் பார்த்தே தீர்மானிக்க வேண்டும். இதுவே நபி(ஸல்) அவர்களின் கட்டளை என்கிறார்கள். நேரடியாகச் சொன்னால் சந்திரனின் சுழற்சி மனிதர்களின் கண்ணின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சந்திரனின் ரீமோட் கண்ட்ரோல் மனிதக் கண்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி இருப்பதாக மிகக் கொடுமையான ஒரு பழியை நபி(ஸல்) அவர்கள் மீது சுமத்துகிறார்கள்.

6:96, 7:54, 10:5, 13:2, 14:33, 16:12, 21:33, 29:61, 31:29, 35:13, 36:40, 39:5, 55:5, இந்த13 இறைவாக்குகளை நேரடியாகப் படித்து உணர்கிறவர்கள் சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அவற்றை அவனே வசப் படுத்தி வைத்துள்ளான். மனிதர்களின் கண்ணின் கட்டுப்பாட்டில் சந்திரன் இல்லை. இது நபி(ஸல்) அவர்கள் மீது இந்தப் புரோகித மவ்லவிகள் ஏற்படுத்தும் மிகவும் பயங்கரமான படு அவதூறாகும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

……..இன்னும் சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு-ஆட்சிக்குக் கீழ்ப்படிந்தவை யாக (படைத்தான்) படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா?… (அல்அஃராஃப் 7:54)

….சூரியனையும், சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கிறான். இவை அனைத்தும் குறிப்பிட்டக் காலக் கணக்கின் படியே சுழன்று வருகின்றன…. (அல்ஃபாத்திர் 35:13)

இவ்வளவு தெளிவாக, நேரடியாக அல்லாஹ் பல இடங்களில் கூறியிருக்க, அல்லாஹ்வின் இந்த நேரடிக் கட்டளைகளை நபி(ஸல்) அவர்கள் புறக்கணித்துவிட்டு, மனிதனின் கண் பார்வையின் கட்டுப்பாட்டில் சந்திரன் இருக்கிறது அதனால் பிறை புறக்கண்ணின் பார்வையில் பட்டால்தான் அது தலைப்பிறை என்று நபி(ஸல்;) அவர்கள் கூறி இருப்பதாக இந்த புரோகித மவ்லவிகள் படுபயங்கரமான பொய்யை கூறி வருகிறார்கள் என்றால், அவர் எந்த அளவு ஷைத்தானுக்கு அடிமைப்பட்டு அவனது நேரடி ஏஜண்டாகச் செயல்பட்டு, மக்களை நரகில் தள்ளுவார்கள் என்பதை இந்த இறைவாக்குகள் அனைத்தையும் படித்து உணர்கிறவர்கள் நிச்சயமாக அறிந்து கொள்ள முடியும்.

அவர்கள், பொதுவாகப் பார்த்து, கண்டு என்று கூறும் ஹதீஸ்களை எடுத்துக் காட்டாமல், புறக்கண்ணால், அதாவது மண்டைக் கண்ணால் பார்த்தே தலைப் பிறையைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறும் ஒரேயொரு ஹதீஸை எடுத்துக் காட்டி அவர்கள் உண்மையாளர்கள் என்று நிலை நாட்டட்டும். கடந்த 10 ஆண்டுகளாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்களால் அப்படியொரு ஹதீஸை காட்ட முடியவில்லை. அதுவே இப்புரோகித மவ்லவிகள் அண்டப் புளுகர்கள், ஆகாசப் பொய்யர்கள், அவதூறு பேர்வழிகள், தங்களின் அற்ப உலக ஆதாயங்களுக்காக முஸ்லிம் சமுதாயத்தைப் பலியிட்டு நரகில் தள்ளும் கொடும்பாவிகள், சமுதாய துரோகிகள் என்பதை நிலைநாட்டப் போதுமானதாக இருக்கிறது.

பிறை விஷயமாக ஹதீஸ்களில் வந்திருக்கும். ருஃயத், ரஅய்த்து, அரா, தரா போன்ற அரபி பதங்கள் பொதுவாக பார்த்து, கண்டு, கவனித்து, ஆய்ந்து பார்த்து போன்ற பொருள்களையே தருவன. அரபி அகராதியும் இப்படியே கூறுகின்றது. இதற்கெல்லாம் மேலாக அல்குர்ஆனில் பல திரிபுகளில் இப்பதம் சுமார் 300க்கும் மேலாக இடம் பெற்றிருக்கிறது. உதாரணமாக 2:243,246,258, 3:23, 4:44,49, 51,60,77, 14:19, 24,28, 19:83, 22:18, 22:63, 65, 24:41, 43, 25:45, 26:225, 31:29,31, 35:27, 37:102, 39:21, 40:69, 58:7,8,14, 59:11, 89:6, 105:1 இந்த இறைவாக்குகளை நேரடியாகப் படித்துப் பார்த்து நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

பின்(அம்மகன்) அவருடன் நடமாடக் கூடிய (வயதை அடைந்த)போது அவர் கூறினார்: என்னருமை மகனே! நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன்(அரா). இதைப் பற்றி உம் கருத்து (தரா) என்ன என்பதைச் சிந்திப்பீராக. (அஸ்ஸாஃப்ஃபாத் 37:102)

பிறை சம்பந்தமாக வந்துள்ள ஹதீஸ்கள் அனைத்தையும் முறையாக ஆய்வு செய்வீர்களானால், அவற்றில் பொதுவாக பார்த்து, கண்டு என்று வரும் பதங்கள் கண்ணால் கண்டு- பார்த்து, தகவலால் கண்டு-பார்த்து, ஆய்வால் கண்டு-பார்த்து, கணிப்பால் கண்டு-பார்த்து, கணக்கீட்டால் கண்டு-பார்த்து, கணினியை கண்டு-பார்த்து என்று இடத்திற்கேற்றவாறு பொருள் கொள்ளும் வாய்ப்புள்ள நிலையில் இருப்பதை நடுநிலையாளர் கள் உணர முடியும்.

அப்படியானால் இந்தப் புரோகித மவ்லவிகள் இதில் ஏன் இப்படி வீண் பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? அங்குதான் இரகசியமே இருக்கிறது. அவர்கள் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முற்றிலும் முரணாக மார்க்கத்தை மதமாக்கி ஹராமான வழியில் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்து வரும் இந்த முறை தவறிய செயலை நன்கு அறிந்த நிலையில்தான் செய்து வருகிறார்கள் என்பதை அல்லாஹ் அல்குர்ஆன் 2:75, 146, 6:20-ல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறான். எனவே அவர்களின் உள் மனம் அவர்களை எச்சரித்துக் கொண்டே இருக்கிறது. அதாவது தங்களின் தில்லுமுல்லுகள் அம்பலப்பட்டுப் போய் விடுமோ என அஞ்சுகிறார்கள்.

அல்குர்ஆன் அல்லாஹ்வின் கலாமாக-சொல்லாக இருப்பது போல், நிரூபிக்கப்பட்ட விஞ்ஞானம் அல்லாஹ்வின் ஃபிஅல்-செயலாக இருக்கிறது. எனவே அல்குர்ஆனை பொது மக்களிடமிருந்து மறைத்து வைத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் தீய செயல் விஞ்ஞானம் மூலம் வெளிப்பட்டு விடுமோ என அஞ்சிக் கொண்டே இருக்கிறார்கள். அதனால்தான் விஞ்;ஞான கண்டு பிடிப்புகள் வெளிவரும் போதெல்லாம் அஞ்சி குலை நடுங்குகிறார்கள். அக்கண்டுபிடிப்புகளைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

நேரம் அறிய கடிகாரம் கண்டுபிடிப்பதற்கு முன்னர் முஸ்லிம்கள் சூரியனின் சுழற்சியைப் பார்த்தே ஐங்கால தொழுகையின் நேரத்தை முடிவு செய்து தொழுது வந்தனர். நேரம் அறியும் கருவியான கடிகாரம் கண்டுபிடித்தவுடன் சூரியனின் சுழற்சியைப் பார்க்காமல், கடிகாரம் மூலம் நேரத்தை அறிந்து தொழ ஆரம்பிக்கும் போதும் இப்படித்தான் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் சூரியனின் சுழற்சியைப் புறக் கண்ணால் பார்த்தே நேரத்தை அறிந்து தொழுதார்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அப்படியே தொழுங்கள் என்று கட்டளையும் இட்டிருக்கிறார்கள். எனவே கடிகாரத்தைப் பார்த்து அதன்படி தொழுவது ஹராம் என்றுதான் அன்று ஃபத்வா கொடுக்கும் நிலையில் இருந்திருப்பார்கள். காலமே அவர்களை மாற்றி இன்று ஒவ்வொரு பள்ளியிலும் தொழுகை நேர அட்டவணை மாட்டி இருக்கிறார்கள்.

இந்த எமது கூற்றை உண்மைப் படுத்தும் வகையில் இப்புரோகிதர்களின் சமீப கால ஃபத்வாக்கள் இருந்திருப்பதை நீங்களும் அறிந்திருக்கிறீர்கள். புதிதாக மின்சாரம் கண்டுபிடித்த போது, அது பயன்படுத்தப்படுவதைத் தடுத்தார்கள். புதிதாக ஒலிபெருக்கி கண்டுபிடித்தபோது அதில் பாங்கு சொல்வதைத் தடுத்தார்கள். புதிதாக தொலைபேசி கண்டுபிடித்தபோது அதில் ஷைத்தான் பேசுகிறான். அந்த தகவலை ஏற்க முடியாது என்றார்கள். இப்படி ஒவ்வொரு விஞ்ஞான கண்டுபிடிப்பின்போதும் ;அது எங்கே தங்களின் ஹராமான புரோகிதத் தொழிலுக்கு வேட்டு வைத்து விடுமோ என்ற அச்சத்தில் நடுங்கி, நிரூபிக்கப் பட்ட புதிய விஞ்ஞான உண்மைகளைக் கடுமையாக எதிர்ப்பதே புரோகிதர்களின் கொள்கையாக இருக்கிறது. அதே வரிசையில் தான் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மையான தலைப்பிறையை யும் கண்ணால் பார்த்தே தீர்மானிக்க வேண்டும் என விதண்டா வாதம் செய்கின்றனர்.

இதோ ததஜ தலைமைப் புரோகிதர் கூறுகிறார் படித்துப் பாருங்கள்.

இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். வானியல் கணிப்பை ஏற்று, முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். வானியல் நிபுணர்களால் கணிக்கவே முடியாது என்று நாம் வாதிடுவதாகக் கருதக் கூடாது.

பல நூறு வருடங்களுக்குப் பின்னால் சென்னையில் தோன்றக் கூடிய சந்திர கிரகணத்தை இன்றைக்கே அவர்களால் கணித்துச் சொல்ல முடியும். எத்தனை மணி, எத்தனை நிமிடத்தில் தோன்றும் என்று கணிக்கிறார்களோ அதில் எந்த மாற்றமுமின்றி அது நடந்தேறும். அந்த அளவு வானியல் வளர்ந்துவிட்டது என்பதை நாம் ஏற்றுக் கொள்வோம்.

இன்று இந்தப் பகுதியில் பிறை தென்படும் வகையில் இருக்கும் என்று கணித்துக் கூறினால் அந்தப் பகுதியினர் காணும் வகையில் ஆகாயத்தில் நிச்சயம் இருக்கும். ஏனெனில் அந்த அளவுக்குத் துல்லியமாகக் கணிக்க இயலும். மேகம் மற்றும் புறக் காரணங்களால் நமது பார்வைக்குத் தெரியாமல் போகவும் கூடும்.

அவர்களது கணிப்பு சரியானது தான் என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே சமயத்தில் தலைப்பிறையைத் தீர்மானிக்க அதை அளவுகோலாகக் கொள்ளக் கூடாது என்பதுதான் நமது வாதம். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் மாதத்தின் முதல் தினத்தைத் தீர்மானிப்பதற்குக் கண்ணால் பார்க்க வேண்டும் என்று வரையறுத்துவிட்டனர். (ஏகத்துவம் ஏப்ரல் 2009 பக்.31,32)

ததஜ தலைமைப் பூசாரி சொல்வதைக் கவனித்தீர்களா? அறிவியல் கண்டு பிடிப்பை இன்றைய காலத்தில் அவரால் மறுக்க முடியாது. காரணம் அது துல்லியமாக இருப்பதால், அதை மறுத்தால் அவரது ஆதரவாளர்களே அவரை நிராகரித்து விடுவார்கள். அதற்கு மாறாக நபி(ஸல்) அவர்கள் தலைப்பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று கட்டளையிட்டி ருக்கிறார்கள் என்று அவர் கூறும்போது அதன் உண்மை நிலையை அறியும் ஆற்றல் அவரது பக்தர்களுக்கு இல்லை. அதனால் துணிந்து நபி(ஸல்) அவர்கள் பெயராலேயே இட்டுக் கட்டிப் பொய் கூறுகிறார். நபி(ஸல்) அவர்கள் பெயரால் வேண்டுமென்று இட்டுக்கட்டிப் பொய் கூறுகிறவர்கள் தங்களுடைய இருப்பிடத்தை நரகில் தேடிக்கொள்ளட்டும் என்ற பல நபிதோழர்கள் அறிவிக்கும் மிகமிக ஆதாரபூர்வமான ஹதீஸ் அவரது உள்ளத்தைத் தொடாது. காரணம் ஹராமான புரோகிதத் தொழில் மூலம் அதுவும், நான் கூலி வாங்கவில்லை என்று பொய் கூறி கூலி வாங்கிச் சாப்பிடுவதால் 2:74, 5:13, 6:125 இறை வாக்குகளில் கூறி இருப்பது. போல், அவரது உள்ளம் சுருங்கி இறுகி கற்பாறை போல் ஆகிவிட்டது.

அதனால்தான் தனது அந்தஸ்து நபி(ஸல்) அவர்கள், கலீஃபாக்கள், நபி தோழர்கள், தாபியீன்கள், தபவுதாபியீன்கள் அனைவரது அந்தஸ்துகளை விட உயர்வானது என நினைக்கிறார். அந்த மேல் எண்ணத்தில் தான் அவர்கள் அனைவரது கருத்துக்களும் மார்க்கம் ஆகாது ஆனால் தனது சுய கருத்து மார்க்கம் ஆகும் என பீற்றிக் கொண்டு, தனது குர்ஆன் மொழியாக்கம், மற்றும் விரிவுரையின் பெரும் பகுதிகளில் தனது சுய கருத்தைக் கொண்டு நிரப்பி இருக்கிறார்.

அல்குர்ஆன் 3:7 இறைவாக்கில் இரண்டு வகை வசனங்கள் உண்டு. அல்குர்ஆனின் அடிப்படையான எடுத்துச் செயல்படுத்த வேண்டிய முஹ்க்கமாத் வசனங்கள் குறிப்பாக ஒரே பொருளைத் தருபவை. அவற்றில் இரண்டாவது கருத்துக்கு இடமே இல்லை. அதற்கு மாறாக முத்தஷாபிஹாத் வசனங்கள் ஒன்றுக்கு மேல் பொருள் தருபவை. உள்ளத்தில் நோய் ஏற்பட்டு வழிகேட்டில் செல்பவர்களே அந்த பல பொருள் தரும் வசனங்களை முஹ்க்கமாத் வசனங்களாக்கி அதாவது முத்தஷாபிஹாத் வசனங்களை முஹ்க்கமாத் வசனங்களாக – முடிவான பொருள் தரும் வசனங்களாக்கி அவற்றைப் பின்பற்றி அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவார்கள் என்று தௌளத் தெளிவாகக் கூறி இருக்கும் நிலையில்,

ததஜ தலைமைப் புரோகிதர் இந்த 3:7-ல் காணப்படும் தஃவீலுக்கு முடிவு என்ற பொருளைத்தராமல் விளக்கம் என்ற பொருளைத்; தந்து, சர்வ வல்லமை மிக்க முக்காலமும் அறிந்த அல்லாஹ்வை மனிதனைப் போல் விளங்கும் கீழ் நிலைக்கு இறக்குகிறார். அதற்கு மாறாக தன்னை அறிவில் சிறந்தவராக அவரே சுயமாக கற்பனை செய்து கொண்டு, அறிவில் சிறந்தவர்களை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்தி, அல்லாஹ்வும், அறிவில் சிறந்தவர்களும் முத்தஷாபிஹாத் வசனங்களை விளங்குவார்கள் என ஆணவத்துடன் மொழி பெயர்த்துள்ளார். (அவரது குர்ஆன் மொழி யாக்கத்தில் 3:7 வசனத்தைப் பார்க்கவும்)

அதே போல் 2:102-ல் இரண்டு மலக்குகள் ஹாரூத், மாரூத் என்று அல்லாஹ் நேரடியாக, தெளிவாகக் கூறி இருக்கும் நிலையில், அந்த இரண்டு மலக்குகளையும் ஷைத்தான்கள் என மொழிபெயர்த்து 42:21, 49:16-ல் அல்லாஹ்வின் கட்டளை களைப் புறக்கணித்து, நிராகரித்து, முதுகுக்குப் பின்னால் போட்டுவிட்டு, அல்லாஹ் விதிக்காக பல சட்டங்களை விதித்து அல்லாஹ்வுக்கு இணையாளர் ஆகி இருக்கிறார். அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக்கொடுக்கிறார். ‘அனரப்புக்குமுல் அஃலா’ நானே ரப்புகளுக்கெல்லாம் மேலான ரப்பு என்று ஆணவத்துடன் பீற்றிய ஃபிர்அவ்னின் வாரிசாக முற்பட்டுள்ளார் ததஜ தலைமைப் பூசாரி.

அல்லாஹ் 20:118-ல் நேரடியாக ‘நிச்சயமாக நீர் இதில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்க மாட்டீர் என்று கூறி இருப்பதை, தனது குர்ஆன் மொழியாக்கத்தில் மிகச் சரியாக இங்கே உமக்குப் பசிக்காது நிர்வாணமாக மாட்டீர் என்று எழுதி இருக்கும் நிலையில், 29.3.09 தொண்டி விவாதத்தில், தான் விவாதத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற ஷைத்தானிய குறுகிய எண்ணத்தில், ஆதம்(அலை) அவர்களும் அவரது மனைவியும், தடுக்கப்பட்ட மரத்தை நெருங்கும் வரை பாலுணர்வோ, இனக் கவர்ச்சியோ இல்லாமலும், மானத்தை மறைக்கும் ஆடை இல்லாமலும் நிர்வாணமாகவே இருந்தார்கள் என பிடிவாதமாக வாதிட்;டார். அப்போது இந்த 20:118 வசனம் ஓதிக்காட்டப்பட்ட போது அது தக்வாவுடைய ஆடை என மனமுரணாக வாதிட்டார்.

அதே போல் 2:30-ல் நான் பூமியில் (எனது) பிரதிநிதியைப் படைக்கப் போகிறேன் என்று தெளிவாக சொல்லியிருக்கும் நிலையில், அதற்கு ஆதாரமாக கலீஃபத்துல்லாஹ் அல்லாஹ்வின் பிரதிநிதி என்று ஹதீஸ்கள் இருக்கும்போது, ஒருவர் செத்தால் தான் அவருக்கு பிரதிநிதி ஏற்பட முடியும்: அல்லாஹ் சாவதில்லை. எனவே அவனுக்கு பிரதிநிதி இருக்க முடியாது என இவரே மூடத்தனமாகக் கற்பனை செய்து கொண்டு, இவரது மொழியாக்கத்தில் பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன் என்று அறிவீனமாக மொழிபெயர்த்துள்ளார்.

நமது நாடு சுதந்திரமடைய முன், இங்கிலாந்து அரசர் உயிரோடு இருக்கும் நிலையிலேயே அவருடைய பிரதிநிதி நமது நாட்டை ஆண்டதையும், இன்றும் பலர் உயிரோடிருக்கும் நிலையிலேயே, தங்களின் சொத்துக்களை நிர்வகிக்க பிரதி நிதிகளை ஏற்படுத்திக் கொள்வதையும் அறியாத பெரும் மூடராக இருக்கிறார் ததஜ தலைப் புரோகிதர்.

இப்படி அவரது அறிவீனத்தை அடுக்கிக் கொண்டே போகலாம். இப்படிப்பட்டவர்தான், தலைப்பிறையைக் கண்ணால் பார்த்தே தீர்மானிக்க வேண்டும் என்று நபி(ஸல்) கட்டளையிட்டுள்ளபடி, புறக் கண்ணால் பார்த்தே தீர்மானிக்க வேண்டும். அறிவியல் கணக்கீடு மாதம் பிறந்துவிட்டதைத் துல்லியமாகக் கூறினாலும் அது 100% சரியாக இருந்தாலும் அதை ஏற்கக் கூடாது, என புத்தி பேதலித்து உளறுகிறார். குடிகாரனின் உளறலை எப்படி ஆதாரமாக எடுக்க முடியாதோ அதே போல் ததஜ தலைமைப் பூசாரியின் உளறலையும் ஏற்க முடியாது.

பிறையைப் புறக்க கண்ணால் பார்த்தே தீர்மானிக்க வேண்டும் என்ற இவர்களின் பொருளற்ற உளறலுக்கு ஒரேயொரு ஹதீஸ் ஆதாரமும் இல்லாத நிலையில், இவர்கள் எவற்றை ஆதாரங்களாகத் தருகிறார்கள் தெரியுமா? 1430 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவியல் முன்னேற்றம் அறவே இல்லாத காலத்தில் அன்று நிர்பந்த நிலையில் கடைபிடிக்கப்பட்டவைகளையே ஆதாரமாகத் தருகிறார்கள்.

இப்புரோகிதர்களின் தில்லுமுல்லுகளை சிறிது சிந்தித்தாலும் விளங்க முடியும். மார்க்கக் கடமைகளின் சட்டதிட்டங்கள் கடந்த 1430 ஆண்டுகளாக மாற்றமில்லாமல் ஒன்றாகவே இருக்க முடியும். ஒன்றை நிலைநாட்ட ஒரு குர்ஆன் வசனத்தையோ, ஒரு ஹதீஸையோ கொடுத்தால் அதையே மீண்டும் மீண்டும் கொடுக்க முடியும். புதிய, புதிய ஆதாரங்ளைத் தர முடியாது. ஆனால் அதற்கு மாறாக இப்புரோகித மவ்லவிகள் காலத்திற்குக் காலம் வெவ்வேறு குர்ஆன் வசனங்களையோ, ஹதீஸையோ தந்து அதற்கு தங்களின் சுயவிளக்கத்தைத் தந்து தங்களின் வழிகெட்டக்; கொள்கையை நிலைநாட்ட முற்படுவர்.

உதாரணமாக இந்த தலைப்பிறை விஷயத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். வாகனக் கூட்டத்தார் பற்றிய ஹதீஸை திரித்து, வளைத்து எடுத்து வைத்து மூக்கறுபட்டபின் பல்ட்டி அடித்து ருஃயத், ரஅய்த்து, அரா, தரா போன்ற பதங்கள் புறக்கண்ணால் பார்பப்தையே சொல்கின்றன என்றார்கள். அது தவறு அவை பொதுவாக கண்டு, பார்த்து என்ற பொருளையே தருகின்றன என்று குர்ஆன் வசனங்கள். அரபி அகராதி கொண்டு நிலைநாட்டியவுடன், அதிலிருந்து பல்ட்டி அடித்து 29-ல் பிறை பாருங்கள். மேகமூட்டமாக இருந்தால் 30 ஆக பூர்த்தி செய்யுங்கள் என்று அன்றைய மக்களிடம் எழுந்த சர்ச்சையை முடிவு கட்டும் விதமாக சொன்ன ஹதீஸைக் காட்டி இது கண்ணால் பார்ப்பதற்கு ஆதாரமில்லையா? என்று கேட்டனர். அன்று பிறையைக் கண்ணால் பார்த்து மாதத்தைத் தீர்மானித்தது போல், அன்று நேரத்தைத் தீர்மானிக்க சூரியனைக் கண்ணால் பார்த்தார்களே! இன்று நீங்கள் ஏன் கடிகாரத்தைப் பார்த்து நேரத்தைத் தீர்மானிக்கிறீர்கள் என்று கேட்டவுடன் வாயடைத்துப் போய், அதிலிருந்தும் பல்ட்டி அடித்து, இரண்டாம் பிறை, மூன்றாம் பிறை என சர்ச்சையிட்டுக் கொண்டு தீர்வு நாடி இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் வந்தபோது, அவர்கள் என்றைய தினம் பார்த்தீர்களோ அன்றைய தினத்தின் பிறை எனப் பொதுவாகக் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டி பிறையைக் கண்ணால் பார்ப்பதற்கு இதுவே ஆதாரம் என்றார்கள்.

கணினி கணக்கீடு இல்லாத அக்காலத்தில் கண்ணால் பார்த்து சர்ச்சையிட்டுக் கொண்டதை முடிவுக்குக் கொண்டு வந்தார்களே அல்லாமல் பிறையைப் புறக் கண்ணால் மட்டுமே பார்த்துத் தீர்மானிக்க வேண்டும் என்பதற்கு இது ஆதாரமாகாது என்று கூறியவுடன், அதிலிருந்து பல்ட்டி அடித்து சிரியா தேசத்தில் ரமழான் பிறை பார்த்து நோன்பை ஆரம்பித்தவர், ரமழான் இறுதியில் ஷவ்வால் பிறை பார்க்க வேண்டிய கட்டத்தில் கொண்டு வந்த தகவலை இப்னு அப்பாஸ்(ரழி) நிராகரித்ததைப் பெரிய ஆதாரமாக எடுத்து வைத்தனர்.

அன்று ;காலம் மிகமிக தாழ்ந்து ரமழான் இறுதியில் வந்த தகவலை இப்னு அப்பாஸ்(ரழி) ஏற்றிருந்தால், அன்று மதீனாவாசிகளிடையே பெரும் சர்ச்சையே ஏற்பட்டிருக்கும் என்பதை உணர முடியாத மூடர்கள் அல்ல இந்த மவ்லவி புரோகிதர்கள். அறிந்த நிலையிலேயே அற்ப உலக ஆதாயத்தைக் குறிக்கோளாகக் கொண்டு மக்களை வழி கெடுத்து நரகில் தள்ளுகின்றனர்.

ஆம்! கழுதை உழவுக்கு வந்தாலும் புரோகித மவ்லவிகள் நேர்வழிக்கு வரமாட்டார்கள் என்று நாம் அடிக்கடிக் கூறி வருவதை உண்மைப்படுத்தி வருகிறார்கள். எனவே தௌ;ளத் தெளிவான நேரடியான குர்ஆன் வசனங்களையோ, ஆதாரபூர்வமான ஹதீஸ்களையோ அவற்றில் உள்ளது உள்ளபடி ஒரு போதும் ஏற்க மாட்டார்கள் இப்புரோகித மவ்லவிகள். ஷைத்தானின் நேரடி ஏஜண்டாக இருக்கும் அவர்கள் அவற்றிற்கு சுய விளக்கம் கொடுத்து அவர்களும் வழிகெட்டு, மக்களையும் வழிகெடுப்பார்கள் என்பதை 2:159 முதல் 162 வரையுள்ள குர்ஆன் வசனங்களைப் படித்து விளங்குகிறவர்கள் உணர முடியும். அவர்களே இப்புரோகித மவ்லவிகளின் பிடியிலிருந்து விடுபடுவார்கள். நேர்வழி பெறுவார்கள்.

இந்தப் புரோகித மவ்லவிகளுக்குள்ள சாதகமான சூழ்நிலை – பிளஸ்பாயிண்ட் என்ன தெரியுமா? அல்குர்ஆனின் எண்ணற்ற வசனங்களின்படி மக்களில் மிகப் பெரும்பான்மையினர் இப்புரோகித மவ்லவிகள் பின்னால் சென்று நரகில் விழக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள். இப்புரோகித மவ்லவிகளுக்கு அப்பெரும்பான்மை மக்களைக் கொண்டு உலகியல் ஆதாயங்கள் நிறையவே கிடைக்கின்றன. எனவே நாளை மறுமையில் அப்புரோகித மவ்லவிகளும் அவர்கள் பின்னால் செல்லும் பெருங்கொண்ட மக்களும் அடையப்போகும் இழி நிலை, நரக வேதனை இவை பற்றி அவர்கள் உணர்வதாக இல்லை. இப்புரோகித மவ்லவிகளின் வசீகர, உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு நேரடியாக குர்ஆன், ஹதீஸைப் பார்த்து விளங்கி அதன்படி நடப்பவர்களே பாக்கியசாலிகள். அவர்கள் மிகமிக சொற்பமானவர்களே!

அன்று நபி(ஸல்) அவர்கள் பிறையைப் பார்த்துத்தானே முடிவெடுக்கச் சொன்னார்கள். மேகமூட்டமாக இருந்தால் 30ஆக பூர்த்தி செய்யச் சொன்னது கண்ணால் பார்ப்பதற்கு ஆதாரமில்லையா? என பிதற்றுவார்கள். இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் 2-ம் பிறை 3-ம் பிறை என சண்டையிட்டுக் கொண்டு வந்தவர்களிடம் என்று பார்த்தீர்களோ அன்றைய நாளின் பிறை என அவர்கள் சொன்னது கண்ணால் பார்ப்பதற்கு ஆதாரமில்லையா? சிரியா தேசத்தில் பிறை கண்ட செய்தி ரமழான் இறுதியில் ஷவ்வால் மாதம் பிறக்க இருக்கும் சமயம் மதீனா வந்து சொன்ன தகவலை இப்னு அப்பாஸ்(ரழி) ஏற்க மறுத்த செய்தி இப்படியான தகவல்களைத்தான் மிகப் பெரிய ஆதாரமாகத் தருகிறார்கள்.

இன்று போல்; அன்றும் அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டு சூரிய, சந்திர சுழற்சிகள் துல்லியமாகத் தெரிந்த நிலையில்தான் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து தீர்மானிக்கக் காத்திருந்ததாகச் சொல்கிறாரா? இதைவிட அறிவீனம் ஒன்றுண்டா? அன்று பிறையை மட்டுமா கண்ணால் பார்த்து மாத ஆரம்பத்தைத் தீர்மானித்தார்கள்? அன்று சூரிய சுழற்சியைக் கண்ணால் பார்த்து தொழுதார்களா? இன்றுபோல் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்து தொழுதார்களா? அன்று வைகறையையும், சூரிய மறைவையும் கண்ணால் பார்த்து நோன்பை ஆரம்பித்து முடித்தார்களா? இன்று போல் கடிகாரத்தைப் பார்த்து நோன்பை ஆரம்பித்து நோன்பை முடித்தார்களா?

அன்று தூரத்து இறப்புச் செய்தி காலம் தாழ்ந்து நேரடியாக வந்தவர்கள் தகவல் சொல்லி இறந்தவரது மனைவி இத்தா இருந்தாளா? அல்லது இன்று போல் இறப்புச் செய்தி தொலைத் தொடர்பு மூலம் உடனடியாகக் கிடைத்து அவரது மனைவி உடனடியாக இத்தாவை ஆரம்பித்தாளா? அன்று தொலை தூரத்திலிருந்து 22:27-ல் அல்லாஹ் சொல்வது போல் ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்குப் போனார்களா? அல்லது இன்று போல் விமானத்தில் ஹஜ்ஜுக்குப் போனார்களா? இவை அனைத்தையும் அறிய முடியாத மக்கு மண்டூகங்களா இவர்கள்? இல்லை, அல்லாஹ் 2:42, 75, 146, 6:20 நான்கு இடங்களில் சொல்வது போல் நன்கு அறிந்த நிலையில்தான் மக்களை வழிகேட்டில் இட்டுச் செல்கிறார்கள். புரோகித மவ்லவிகள் அற்ப உலக ஆதாயங்களுக்காக மக்களை வழிகேட்டில் இழுத்துச் சென்று நரகில் தள்ளும் துணிச்சல் மிக்கவர்கள்.

அன்றையை விட இன்றைக்கு மாதம் பிறந்ததையும், சூரிய உதய, மறைவையும் மிகத் துல்லியமாகக் கணக்கிட முடியும் என்பதை உணர்த்தும் ஆதாரபூர்வமான ஹதீஸ் இதோ: அஸ்மாபின்த் அபீபக்கர்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பை நிறைவு செய்த பின்னர் அதாவது துறந்த பின்னர் சூரியன் தென்பட்டது. (புகாரீ ர.அ. 1959)

ஜாக் தலைமைப் புரோகிதரை எடுத்துக் கொள்ளுங்கள். விஞ்ஞான கணினி கணக்கீட்டை ஏற்பது குர்ஆன், ஹதீஸுக்கு உட்பட்டதே என அவரின் கீழ் செயல்படும் S.செய்யித் அலி பைஸி என்பவர் மூலம் பிரசுரம் வெளியிட்டவர்தான்.

இதோ அப்பிரசுரம்:

பிறை விஷயத்தில்

விஞ்ஞானக் கணிப்பை ஏற்பது குர்ஆன், ஹதீஸுக்கு எதிரானதா?

S. செய்யித் அலி பைஸி இமாம், அல்மஸ்ஜித் அஷ்ரப், இளங்கடை, நாகர்கோவில்.

ஒவ்வொரு ரமழான் மற்றும் அதையடுத்து வரும் பெருநாளின்போது மாதத்தின் முதல் நாளை தீர்மானிப்பதில் பலத்த சர்ச்சைகள் எழுவது வழமையாகி வருகிறது. அறியாமை, பிடிவாதம், மனோ இச்சையைப் பின்பற்றுதல், கௌரவம் பார்ப்பது போன்றவை இந்த சர்ச்சைகளுக்கு முக்கிய காரணங்களாகும். எனவே தான் உண்மையை உரக்கச் சொன்னாலும் உறைக்காமல் போய்விடுகிறது.

ஒரே இறைவன் ஒரே இறுதி இறைத்தூதர், ஒரே கிப்லா ஆகியவற்றால் ஒன்றுபட்டுள்ள முஸ்லிம் சமுதாயம் தனது மகிழ்ச்சிக்குரிய நாள் எது என தீர்மானிப்பதில் குழம்பி நிற்பது நமது ஈமானின் பலவீனத்தையே காட்டுகிறது. உலகிற்கே வழிகாட்ட வந்த மார்க்கத்தை பின்பற்றி வரும் ஒரு மிகப்பெரும் பொறுப்புள்ள சமுதாயம் இது விஷயத்தில் – நவீன யுகத்திலும் – தடுமாற்றம் கொண்டிருப்பது மாற்று சமயத்தவர் மத்தியில் இஸ்லாமைப் பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் செயலாகும்.

அவரவர் பகுதியில் பிறையை புறக்கண்ணால் பார்த்து தான் மாதத்தின் முதல் நாளை தீர்மானிக்க வேண்டும் என்று ஒரு சாராரும் பிறையை புறக்கண்ணால் பார்த்தோ அல்லது பிறை பார்த்த தகவலை அறிந்தோ அதை தீர்மானித்துக் கொள்ளலாம் என்று மற்றொரு சாராரும் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

பிறிதொரு சாரார் பிறையை புறக்கண்ணால் பார்க்கவோ அல்லது பிறையை பார்த்த தகவல் அறியவோ வேண்டிய அவசியமில்லை. விஞ்ஞானக் கணிப்பின் மூலம் முற்கூட்டியே மாதத்தின் முதல் நாளை முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.

இந்த மூன்றாவது சாராரின் கருத்து குர்ஆன் ஹதீஸுக்கு எதிரானதா என்பதை அலசுவதே இங்கு நோக்கம். முந்திய இரண்டு சாராரும் மூன்றாவது சாராரின் கருத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். அதற்கு அவர்கள் எடுத்து வைக்கும் முக்கியமான ஆதாரம். பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்ற பிரபலமான ஹதீஸாகும்.

நோன்பை துவக்கவும் பெருநாள் கொண்டாடவும் பிறை பார்ப்பது அவசியம் என்று ஹதீஸ் சொல்லும்போது விஞ்ஞானக் கணிப்பின் மூலம் முடிவு செய்வது இந்த ஹதீஸுக்கு மாற்றமான செயலாகும், மேலும் ஹதீஸை புறந்தள்ளுவதுமாகும் என்று வாதிடுகின்றனர். இவர்களின் இந்த வாதம் சரிதானா என்று பார்ப்போம்.

சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் இரு பிரம்மாண்டமான படைப்புகளாகும்; கால நேரங்களையும், நாட்களையும் கணக்கிட்டுக் கொள்ளவே இவற்றை படைத்திருப்பதாக திருக்குர்ஆனில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இறைவன் கூறுகிறான். இவ்வசனங்களில் இந்த இரண்டு கோள்களும் இணைத்தே சொல்லப்படுகின்றன (பார்க்க. அல்குர்ஆன் 6:96, 10:05, 13:02, 21:33, 36:38-40, 55:05, 2:189)

நாம் அன்றாடம் செய்யும் வழிபாடுகளில் சில, Solar சிஸ்டத்துடனும், மேலும் சில Lunar சிஸ்டத்துடனும் சம்பந்தப்பட்டவையாகும்.

1. ஐவேளைத் தொழுகை ஜும்ஆ மற்றும் பெருநாள் தொழுகை, ஸஹர் முடிவு, இஃப்தார் துவக்கம் போன்றவற்றை Solar சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டே நிறைவேற்றி வருகிறோம்.

2. நோன்பு ஹஜ் பெருநாள் தினம் ஆகியவற்றை Lunar சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டே நிறைவேற்றி வருகிறோம்.

இக்கடமைகளை இவ்வாறே நிறைவேற்ற வேண்டுமென்பது மார்க்கத்தின் கட்டளையாகும்.

ஐவேளைத் தொழுகைகளின் நேரத்தைப் பற்றி நபி(ஸல்) கூறும்போது.

கிழக்கு அடிவானத்தில் வைகறை புலர்வது பஜ்;ரு தொழுகையின் நேரத்தையும், சூரியன் உச்சி சாய்வது லுஹர் நேரத்தையும், ஒரு மனிதனின் நிழல் அவன் உயரத்தின் அளவுக்கு வருவது அஸர் நேரத்தையும், சூரியன் மறைவது மஃரிப் நேரத்தையும், வானில் செம்மேகம் மறைவது இஷா நேரத்தையும் அறிவிக்கிறது என கூறினார்கள் (முஸ்லிம்-ஹதீஸ் சுருக்கம்)

ஸஹர் நேர முடிவைப் பற்றி குர்ஆன் கூறும்போது கறுப்பு ரேகை விலகி வெள்ளை ரேகை வெளிப்படும் வரை (அதாவது வைகறை புலரும் வரை) உண்ணுங்கள் பருகுங்கள் என்று கூறுகிறது. (2:187)

மேலே கண்ட வழிமுறையைத் தான் தொழுகை நேரம் மற்றும் ஸஹர் நேர முடிவை தெரிந்து கொள்ள நபி(ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்கள். விஞ்ஞானம் வளர்ச்சியடையாத அன்றைய சூழலில் அவர்களால் இந்த வழி முறையைத் தான் பின்பற்ற முடிந்தது. இன்றிருப்பதுபோல் நேரத்தை துல்லியமாக முன்கூட்டியே கணித்துச் சொல்லும் வசதியை அவர்கள் பெற்றிருக்கவில்லை. குர்ஆனும் இதை உறுதி செய்கிறது.

(இரவு பகல்) நேரத்தை நீங்கள் துல்லியமாக கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதை அவன் (அல்லாஹ்) அறிகிறான் (73:20)

எனினும் விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த காலத்தில் வாழும் நாம் நபி(ஸல்) அவர்கள் பின்பற்றிய மேற்கண்ட வழிமுறையை பின்பற்றாமல் நவீன யுகத்தின் விஞ்ஞான கணிப்பின் மூலம் வகுத்துத் தரப்பட்டுள்ள புதிய வழிமுறையைத்தான் பயன்படுத்துகிறோம். லுஹர் தொழுகைக்காக தயாராகும் ஒருவர் சூரியன் உச்சி சாய்ந்து விட்டதா என்று பார்த்து அறிந்து தொழுவதில்லை; ஏற்கனவே கணித்து வைக்கப்பட்டுள்ள நேரத்தை பார்த்தே தொழுகைக்குத் தயாராகிறார்.

இப்படிச் செய்வதால் நபி(ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாற்றம் செய்து விட்டதாக, நம்மில் யாரும் யாரையும் குறை காண்பதில்லை. காரணம், நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கேற்ப அவர்;கள் செயல்பட்டார்கள். நாம் நமது காலத்திற்கேற்ப செயல்படுகிறோம். இரண்டு செயல்பாடுகளுமே Solar சிஸ்டத்திற்கு உட்பட்டவைதான்! என்பதேயாகும்.

இனி Lunar சிஸ்டத்திற்கு வருவோம்.

நோன்பு, பெருநாள் தினம் உள்ளிட்டவைகளை Lunar சிஸ்டத்தின் அடிப்படையில் தான் நிறைவேற்ற வேண்டும்.

ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை பார்த்து நோன்பை விடுங்கள் (புகாரி, முஸ்லிம்)

விஞ்ஞானம் வளர்ச்சியடையாத காலத்தில் மாதத்தின் முதல் நாளை அறிந்து கொள்ள அப்போதிருந்த ஒரே வழி புறக்கண்ணால் பிறையைப் பார்த்து தீர்மானிப்பது ஒன்றுதான்! முன்கூட்டியே துல்லியமாக கணித்துச் சொல்லும் வசதி அவர்கள் காலத்தில் இல்லாததுவே இதற்கு காரணம். இவ்வுண்மையை நபி(ஸல்) அவர்களே தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்.

நாம் துல்லியமாகக் கணித்துக் கூறவும், எழுதவும் அறியாத வர்களாக இருக்கிறோம். ஒரு மாதம் இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம். (அதாவது 29-கவோ அல்லது 30-கவோ இருக்கலாம்) அறிவிப்பாளர்: இப்னுஉமர்(ரழி) நூல்கள்:புகாரி, முஸ்லிம்.

இந்த ஹதீஸிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகிறது.

1. Lunar சிஸ்டத்தின்படி ஒரு மாதம் எத்தனை நாட்களைக் கொண்டது என்பதை முற்கூட்டியே கணித்துச் சொல்லும் ஆற்றல் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை.

2. கணித்துச் சொல்லும் ஆற்றல் பெற்றவர்கள் அவ்வசதியை பயன்படுத்திக் கொண்டு தீர்மானிப்பதில் தவறில்லை.

எனவே பிறையை புறக்கண்ணால் பார்த்து மாதத்தின் முதல் நாளை தெரிந்து கொள்ளும் பழைய வழிமுறையை விட்டுவிட்டு புதிய வழிமுறையாகிய விஞ்ஞானக் கணிப்பை ஏற்றுச் செயல்படுவது ஒருபோதும் சுன்னத்துக்கு மாற்றமான செயலாகாது. ஏனெனில் இரண்டுமே Lunar சிஸ்டத்திற்கு உட்பட்டவைதான்.

Lunar சிஸ்டத்தின் பழைய மற்றும் புதிய இரண்டு முறை களையும் பொதிந்தேதான் நோன்பு தொடர்பாக வரும் குர்ஆன் வசனமும் அமைந்துள்ளது. உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்க வேண்டும் (2:185)

இவ்வசனத்தில் உங்களில் எவர் பிறை பார்க்கிறாரோ என்றோ அல்லது எவர் கணிக்கிறாரோ என்றோ குறிப்பிட்டுச் செல்லாமல் எக்காலத்திற்கும் ஏற்ற வகையில் பொதுவாக எவர் அடைகிறாரோ என்றே கூறப்பட்டுள்ளது.

இவற்றிற்கு பிறகும் இக்கருத்தை மறுப்பவர்கள் தொழுகை விஷயத்தில் நாம் பயன்படுத்தி வரும் ளுழுடுயுசு சிஸ்டத்தின் விஞ்ஞானக் கணிப்பையும் தவறு என்று கூறவேண்டியது வரும், கூறுவார்களா?

ஆகவே பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்று கூறியது அறிவியல் வளர்ச்சியில்லாத காலத்தை கருத்தில் கொண்டேயாகும் என்பது தெளிவாகிறது.

தொழுகைக்குரிய நேரத்தை அறிவதற்கு SOLAR சிஸ்டத்தின் புதிய விஞ்ஞான கணிப்பு முறையை ஏற்பவர்கள் நோன்பை துவக்குவதற்கு LUNAR சிஸ்டத்தின் அதே புதிய விஞ்ஞான கணிப்பு முறையை நிராகரிப்பது முரண்பாடான நிலையாகும்.

சூரியன் சந்திரன் இரண்டுமே நேர காலங்களை அறிவதற்காக படைக்கப்பட்டிருக்கும்போது, அவற்றில் ஒன்றை மட்டும் துல்லியமான விஞ்ஞான கணிப்பிற்கு உட்படுத்தி விட்டு மற்றொன்றை அதற்கு உட்படுத்தாமல் இரண்டு படைப்புகளுக்கு மிடையில் இத்தகைய வேறுபாட்டை ஏற்படுத்த எந்த ஆதாரமும் இல்லை.

எனவே,

ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றுவதற்கு

சூரிய சந்திர கிரகணத் தொழுகை குறித்த அறிவிப்பை முன்கூட்டியே செய்வதற்கு

ஸஹர் நேர முடிவை தெரிந்து கொள்வதற்கு

இஃப்தார் ஆரம்ப நேரத்தை அறிந்து கொள்வதற்கு

இன்னும் பலவற்றிற்கு

நவீன விஞ்ஞான கணிப்பை ஏற்றுச் செயல்படுபவர்கள் மாதத்தின் முதல் நாளை அறிந்து கொள்;ள டுருNயுசு சிஸ்டத்தின் அதே ரீதியான விஞ்ஞானக் கணிப்பை ஏற்றுக் கொள்வதே யதார்த்தமானது நியாயமானது.

அனைத்து முஸ்லிம்களும் ஒரே நாளில் நோன்பை துவக்கி ஒரே நாளில் பெருநாள் கொண்டாடி மகிழ்ந்து ஒற்றுமையுடன் செயல்பட இதுவே உகந்த வழி முறையாகும்.

செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. (ஹதீஸ்) அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

SOLAR சிஸ்டம் சூரியக் கணக்கு, LUNAR சிஸ்டம் சந்திரக்; கணக்கு.

அல்ஜன்னத் மாத இதழிலும் இதே உண்மைக் கருத்தை எழுதியவர்தான், இப்போது தனது தலைமைப் பதவிக்கும், உலக ஆதாயத்திற்கும் ஆபத்து வருகிறது என்றவுடன் அப்படியே அந்தர் பல்ட்டி அடித்து பிறையைப் புறக்கண்ணால் பார்த்த தகவல் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம் என்ற கீழ்; நிலைக்கு இறங்கி இருக்கிறார். ஆம்! தங்களின் உலகின் பட்டம், பதவி, வருமானம் இவற்றிற்கு ஆபத்து என்றால் குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக ஃபத்வா கொடுக்கத் தயங்கமாட்டார்கள் இப்புரோகித மவ்லவிகள்.

அல்ஜன்னத் மே 2009 பக்கம் 28-ல்

மிம்பர் ஏறத் தெரிந்தவர்களெல்லாம் அறிஞர்களா?

என்ற தலைப்பில்

சில ஆலிம்கள் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் ஓடுகிறார்கள். அவர்களது அராஜகங்களை நியாயப்படுத்தும் வகையில் இவர்களது பத்வா அமைந்து விடுகின்றன. மற்றும் சிலர் வெவ்வேறு பாத்திரங்களிலுள்ள தண்ணீரைப் போன்று பாத்திரங்களின் அமைப்புக்கேற்ப தண்ணீரும் அதன் உருவை மாற்றுவது போன்று சூழலுக்குச் சாதகமாக தமது கருத்துக்களை அடிக்கடி மாற்றிக் கொள்கிறார்கள். இதுவே பிரச்சனைக்கான காரணமாகும் என்று ஒரு பிரபல அறிஞர் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்ததாக எழுதியுள்ளனர்.

கணினி கணக்கீட்டின்படி தலைப்பிறையை ஏற்கலாம் என்று முன்னேறி வந்த ஜாக் தலைமைப் புரோகிதர்; இப்போது ஜாக் தலைமைப் பதவிக்கும், வாங்கும் சம்பளத்திற்கும் அடிமைப்பட்டு அந்தர் பல்ட்டி அடித்து கீழ் இறங்கி பிறையைப் புறக்கண்ணால் பார்த்த தகவலை வைத்தே தலைப்பிறையைத் தீர்மானிக்க வேண்டும் என்று சொல்லி வருவதைக் கண்டித்தே அந்த அறிஞர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆம்! கூலி-சம்பளத்திற்காக மார்க்கப் பணிபுரியும் புரோகித மவ்லவிகள் அனைவரின் நிலையும், மேலே அந்த பிரபல அறிஞர் விமர்சித்துள்ள கேவலமான இழி நிலையிலேயே இருக்கின்றது.

இதே போல் ததஜ தலைமைப் புரோகிதரும் பெரும் ஆய்வுகளுக்குப் பிறகு சர்வதேச ஒரே தலைப்பிறையை ஏற்று 1997 நவம்பர் அல்ஜன்னத் இதழில் எழுதியவர்தான். பின்னர் உலக ஆதாயம் கருதி பெரும்பான்மை முஸ்;லிம்களைத் திருப்திப்படுத்த அந்தர் பல்ட்டி அடித்து தத்தம் பகுதி தலைப்பிறை என பிதற்ற ஆரம்பித்தார். அதற்கு அவர் கூறிய காரணம் நமக்குச் சிரிப்பையே ஏற்படுத்தியது.

வாகனக் கூட்டத்தார் 30-ம் நாள் மாலையில் கொண்டு வந்த முதல்நாள் பிறை பார்த்த செய்தியை ஏற்ற நபி(ஸல்) அவர்கள் நபிதோழர்களுக்கு நோன்பை விடச் சொல்லி கட்டளை யிட்டுள்ளதாக தவறாக விளங்கியதாகவும், உண்மையில் அது வாகனக் கூட்டத்தாருக்கு இட்ட கட்டளை நபிதோழர்களுக்கு அல்ல என்று சரியாக விளங்கி தன்னுடைய முன்னைய ஃபத்வாவை(?) திரும்பப் பெற்றதாகவும் அறிவித்தார். 1997க்கு முன்னரும் பலமுறை வாகனக் கூட்டத்தார் பற்றிய ஹதீஸை விளக்கும்போது, அவர்கள் பிறையைப் பார்த்தார்கள் நோன்பை விட்டார்கள். அடுத்த நாள் காலையில் பெருநாள் தொழுகை தொழுது பண்டிகை கொண்டாடினார்கள். பின்னர் சாவகாசமாக மாலையில் நபி(ஸல்) அவர்களை சந்திக்க வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களும், நபி தோழர்களும் 30-ம் நாள் நோன்பை நோற்றவர்களாக இருக்கக் கண்டார்கள். தாங்கள் பிறை பார்த்ததற்கு சாட்சி சொன்னார்கள். நபி(ஸல்) அவர்கள் அதை ஏற்று நபி தோழர்களுக்கு நோன்பை விடும்படியும் அடுத்த நாள் காலையில் தொழும் திடலுக்கு வரும்படியும் கட்டளையிட்டார்கள் என்று சரியாகத் தெளிவாகப் பேசி அவை ஆடியோ கேசட்டு களிலும் பதிவாகி பலர் கேட்டும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அந்தர் பல்ட்டி அடித்து அக்கட்டளை நபிதோழர்களுக்கு அல்ல வந்த வாகனக் கூட்டத்தாருக்கே! அவர்கள் சட்டம் தெரியாமல் நபி(ஸல்) அவர்களிடம் சட்டம் கேட்க வந்தார்கள் என பிதற்றினார். சட்டம் கேட்க வந்தவர்கள் ஷஹிதூ – சாட்சி சொன்னார்கள் என்று எப்படி ஹதீஸில் வரும் என்றும் இன்னும் அவரது மடமைவாதத்தால் ஏற்பட்ட சுமார் 10 கேள்விகளை எழுப்பி இருந்தோம். அந்நஜாத்திலும் பல முறை அக்கேள்விகளை மீண்டும், மீண்டும் பதிவு செய்தோம்.

10 ஆண்டுகளாக அக்கேள்விகளுக்கு பதில் அளிக்க வக்கற்றவர் தான், மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார். ஆக இப்புரோகிதர்கள் தங்களின் அற்ப சுய நலனுக்காக, முழுச் சமுதாய நலனையும் பலியிடும் சமுதாய துரோகிகள் என்பதை முஸ்லிம்கள் என்று உணர்ந்து அவர்களைப் புறக்கணித்துவிட்டு நேரடியாக குர்ஆன், ஹதீஸை படித்துச் சிந்திக்க ஆரம்பிக்கிறார்களோ அன்றுதான் முஸ்லிம் சமுதாயத்தில் மீண்டும் எழுச்சி ஏற்படும். சமுதாய மறுமலர்ச்சி ஏற்படும் அதற்கு மாறாக,

அவர்களை நம்பி அவர்கள் பின்னால் செல்வது மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கிய கதைதான். அழிவும், நாசமும் இவ்வுலகில் ஏற்படுவதோடு, நாளை மறுமையிலோ நிரந்தர நரகம் என்பதை 7:3, 33:21,36,66,67,68, 59:7 இவற்றை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் அறிய முடியும்.

இந்த ஜாக், ததஜ புரோகித மவ்லவிகள் குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்றுகிறோம் என்று தார்ப்பாயில் வடித்தெடுத்த பொய்யையே கூறி வருகின்றனர். அவர்கள் குர்ஆன், ஹதீஸை மட்டும் பின்பற்றினால் 21:92, 23:52, 3:103, 105, 6:153,159, 30:32, 42:13,14 இத்தனை இறைவாக்குகளுக்கு லாஜிக், பாலிசி என சுய கருத்தைக் கூறி ஜாக், ததஜ என சமுதாயத்தைப் பிளவு படுத்த முடியாது சுமார் 50 இறைக் கட்டளைகளை நிராகரித்துப் புறக்கணித்து விட்டு கூலிக்கு-சம்பளத்திற்கு மார்க்கப்பணி செய்ய முடியாது என்பதை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மேற்படி குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து விளங்கினால் நிச்சயம் எமது இந்த கூற்றை ஏற்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக