வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

பிறை பற்றி

நிச்சயமாக நாம் அவருக்கு (துல்கர்னைன்) பூமியில் (ஆட்சி அமைத்திட) வசதியளித்தோம். இன்னும் ஒவ்வொரு பொருளிலிருந்தும் (தக்க பயனடையும்) வழியை அவருக்குக் (காண்பித்துக்) கொடுத்தோம்.

ஆகவே அவர் ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.

முடிவாக சூரியன் மறையும் இடத்தை அடைந்தபொழுது, அது கருப்பான சேற்றுக் கடலில் மறைவதைக் கண்டார்.

பின்னர் அவர்(வேறு) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.

முடிவாக சூரியன் உதயமாகும் இடத்தை அவர் அடைந்தபொழுது, அது ஒர சமூகத்தாரின் மீது உதயமாகி இருப்பதைக் கண்டார். அல்குர்ஆன் 18:84-86, 89,90

துல்கர்னைன், அவர்கள், இப்ராஹீம்(அலை) அவர்கள் காலத்தில் (காண்க:புஹாரி நான்காம் பாகம் பக்கம் 26) வாழ்ந்த பேரரசர். உலகின் நாலா பாகங்களிலும் இவரது ஆட்சி அதிகாரம் பரவி இருந்தது. அல்லாஹ்வை நம்பிக் கொண்டு, மக்களுக்கு தொண்டாற்றக் கூடிய விசால மனம் படைத்த செங்கோல் மன்னராக விளங்கினார்.

துல்கர்னைன், ஒரு அப்பாவி சமூகத்தாரை, யஃஜூஜ் மஃஜூஜ் என்ற கொடியவர்களிடமிருந்து காப்பாற்ற இரு மலைகளக்கிடையே இருந்த பள்ளத்தாக்கை, காய்ச்சிய இரும்பையும் செம்பையும் கொண்டு அடைத்து ஒரு தடுப்பை ஏற்படுத்தினார். அதனால் அக்கொடியவர்கள் அதன் மீது ஏறிவரவும் துளையிடவும் சக்தி பெறவில்லை.

இவ்வளவு பெரிய பணியை செய்துவிட்டு, அம்மக்கள் ஒரு தொகையை தர தயாராக இருந்தும், வேண்டாம் என்று வாங்க மறுத்து விட்டார்.

மேலும் “எனது ரப்பு எதில் எனக்கு வசதியளித்துள்ளானோ அது மிகச்சிறந்ததாகும்” என்று கூறினார்.

ஆனால் இன்றோ, எந்த துளியளவும் வேலை செய்யாமல், மார்க்கத்தைத் தன் சொந்த அபிப்பிராயப்படி கூறுவதற்கே வசூல் வசூல் என்று நவீன தக்லீது கூட்டத்தினர் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலையோ அலை என்று அலைகின்றனர். டிவியில் வாரி வாரி வழங்குங்கள் என்ற விளம்பரம் வேறு. பிழைப்புக்காக வளைகுடா நாடுகளுக்குச் சென்றுள்ளோரிடம் கையேந்துகின்றனர். அனைத்து நாடுகளிலும், வசூல் செய்யக் கிளைகள் உள்ளன என்று பீற்றிக் கொள்கின்றனர்.

ததஜவினருக்குள் அடிதடி ஏற்பட்டு, பிரிந்த போதும் சின்னத்திரை நாயகனுக்கு நடிப்பின் மீதும் தினமும் ஒளி பரப்புவதன் மீதும் இருந்த மோகம் தனியவில்லை. ஒரு டி.வி.யிலிருந்து கழட்டிவிடப்பட்டவுடன் அடுத்த டி.வி.யை நாடிச் சென்று விட்டார். நாயகன் இரவு 10 மணி முதல் டி.வி.யில் தோன்றி ஆக வேண்டுமே!

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வசனங்களின்படி துல்கர்னைன் அவர்கள் ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றுள்ளார் என்பது தெளிவு. அவ்வழியில் கடலில் சூரியன் மேற்கில் மறைவதையும், பின்பு கிழக்கில் உதயமாவதையும் கண்டுள்ளார்.

அவர் அவ்வாறு அல்லாஹ்வின் கட்டளைப்படி பின்பற்றிச் சென்றவழி, எந்த வழி?

சர்வதேச எல்லைக் கோடுதான் (Internatiional Date LIne)

எல்லோரும் கூறிக் கொண்டிருப்பது போல், இக்கோடு கற்பனைக் கோடு அல்ல. எல்லாம் வல்ல அல்லாஹ் போட்ட கோடு. 1884 ஆண்டு தான் ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவதெல்லாம் பழைய முறையை புதுப்பிப்பதுதான். உலகம் உருண்டைதான் என்பதையும் சர்வதேச எல்லைக் கோட்டிலிருந்து நாள் ஆரம்பம் ஆகிறது என்பதையும், துல்கர்னைன் அவர்கள் மூலம் அக்காலத்திலேயே அல்லாஹ் கற்றுக் கொடுத்து விட்டான். ஆனால் இவைகளை எல்லாம் முஸ்லிம்களாகிய நாம் நிலை நிறுத்தாமல் கோட்டை விட்டுவிட்டோம். அதனால் கலிலியோ பெயரைத் தட்டிச் சென்று விட்டார்.

மேலும், வல்ல அல்லாஹ் முதன் முதலாக ஆதம்(அலை) அவர்களுக்கே, இவைகளையெல்லாம் கற்றுக் கொடுத்துவிட்டான்.

வல்ல அல்லாஹ் கூறுவதைக் காணீர்!

மேலும் அவன் எல்லாப்(பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்குக் கற்றிக் கொடுத்தான். அல்குர்ஆன் 2:31

அல்லாஹ் தன் வாக்குப்படி, உலகம் உருண்டைதான் என்பதையும், பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது என்பதையும், அதனால் இரவு பகல் மாறி மாறி வருகிறது என்பதையும், கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். இன்னும் அல்லாஹ், பூமியைப் படைத்து, நாள் கணக்கு எங்கிருந்து துவங்குகிறது என்பதையும், அது தேதிக்கோட்டில் அடிப்படையில் அமைந்துள்ளது என்பதையும், கற்றுக் கொடுத்திருப்பான்.

எனவே அல்குர்ஆன் ஆதாரத்தின்படி ஆதம்(அலை) அவர்களுக்கு முதன்முதலாகவும் பின்பு துல்கர்னைன் அவர்களுக்கு இரண்டாவதாகவும் கற்றுக் கொடுத்துள்னான். இவைகளெல்லாம் தொடர்ந்து வந்த முஸ்லிம்கள் நிலைநிறுத்தாததால் மற்றவர்கள் பெயரைத் தட்டிச் சென்று விட்டனர். ததஜ போன்ற கோமாளிகள் எப்பொழுதுமே இருந்துள்ளதால், பிறைக் குழப்பங்கள் தொன்றுதொட்டு வந்துள்ளன.

அதேபோன்று, அல்லாஹ் துல்கர்னைன் அவர்கள் மூலம் கற்றுக்கொடுத்த உலோகவியல்((Metallurgy) அதாவது ஒரு உலோகம் மற்றொரு உலோகத்துடன் கலக்கும்போது கூடுதல் உறுதி (Tensile Strength) கிடைக்கிறது என்ற விசயத்தையும் மற்றவர்களுக்குத் தாரை வார்த்துவிட்டனர்.

பூமி தன்னைத்தானே, ஒரு சுற்று சுற்றிக் கொள்வதற்கு ஒரு நாள் ஆகிறது என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர். பூமி இடைவிடாது எந்நேரமும் சுற்றிக் கொண்டே இருப்பதால் ஊருக்கு ஊர் நேரங்களில் மாற்றம் உண்டு என்ற உண்மையும் யாவரும் அறிந்ததே. கிழக்கே சிங்கப்பூரில் முற்பட்டும், மேற்கே சவூதியில் பிற்பட்டும் இருக்கும் என்பதையும் பாமரன் கூட தெரிந்தே வைத்துள்ளான். அங்கங்கு நடப்பிலுள்ள தொழுகை நேரங்களைக் கடைப்பிடித்து தொழுது கொள்வார்கள். அதே போன்று ஹானலூலு, நியூசிலாந்து, வட, தென் துருவ பிரதேசங்களிலுள்ளவர்கள். ஏற்கனவே அங்குள்ள நடைமுறைப்படி தொழுது கொள்வார்கள்; நோன்பு நோற்றுக் கொள்வார்கள். இங்கே இருந்துகொண்டு அங்கே என்ன செய்வார்கள் என்று குழப்புவதெல்லாம் அண்ணன் தான் எடுத்த முடிவை நிலைநிறுத்தத்தான்.

ஜனவரி ஏகத்துவத்தில், அறிவியல் வளர்ச்சியைப் பற்றி ஜாக்கினரும், பிறை விசயத்தில் மட்டும் அவர்களுடன் ஒத்தக் கருத்தில் இருந்தவர்களும், வினாக்களை தொடுத்தனர் என்று எழுதியுள்ளனர்.

இந்த தக்லீது தலைவர் மட்டும், இன்றைய அறிவியல் வளர்ச்சியின் சுதங்களை தினமும் அனுபவிக்கவில்லையா? இன்றைய அறிவியல் வளர்ச்சியின் சாதனங்களை உபயோகிக்காமல் அண்ணனால் வாழ்ந்து காட்ட இயலுமா?

ஜனவரி ஏகத்துவத்திலும், பிறையைக் கண்டே தீர வேண்டும் என்று மறுபடியும் கூப்பாடு போட்டுக் கொண்டே தன் கருத்துக்கு மாற்றமாக காலண்டர் போட்டுள்ளார். பிறையைப் பார்த்த பின்பு, அரைகுறை மாதக் காலண்டர் தானே போடவேண்டும்? 29/30 என்று தெரியாத நிலையில் முழுமையான மாதக் காலண்டரே போட முடியாத நிலையில் எவ்வாறு வருடக் காலண்டர் போட்டார். ஏமாந்து திரியும் அவரின் பக்தர்களிடம் காசைக் கறக்கத்தாானே!

அவரின் பக்தர்கள் நிறைந்து காணப்படும் வளைகுடா நாடுகளுக்கு, காசை வசூல் பண்ணுவதற்கும் நடந்தோ, ஒட்டகத்திலோ தான் சென்று ஆகவேண்டும். ஏனெனில் நவீன கண்டுபிடிப்புகள் எதுவும் அவருக்கு ஆகாது. காசையும் அந்தக்கால முறையில் பண்டமாற்று முறையில் தான் பெற வேண்டும். இன்றைய புழக்கத்திலுள்ள நோட்டு முறை நவீன கண்டுபிடிப்பு ஆகும். இவைகளையெல்லாம் அனுபவித்து, ஆனந்த சுகம் அனுபவிக்கும் அவர் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளார்.

“கழிவு கெட்ட கணக்கு” என்று ஆணவத்தில் எழுதி,அல்லாஹ் கூறிய “கணக்கின்படி உள்ளன” என்ற வாக்கை கேலி செய்துள்ளனர்.

இந்த வருடம் மட்டும் சவூதியில் பிறை கணக்குக் காலண்டர்படி அரபாஃஹ் நாள் கொண்டாடப்படவில்லை என்பதற்காக, அவர் வெற்றி அடைந்துவிட்டது போல் இறுமாப்புக் கொண்டு அறியாமையில் அண்ணன் ஆட்டம் போடுகிறார்.

சவூதியில் ஹி.1429,1430 ஆண்டுகளில் பிறைக் கணக்குக் காலண்டர்படி, முதல் நோன்பை நோற்காமல், கோட்டைவிட்டுவிட்டு, இரண்டு ஆண்டுகளிலும் பெருநாட்களை பிறைக் கணக்கின்படி கொண்டாடியதை, தனக்குச் சாதகமாக இல்லாததால் மறந்து விட்டாரா?

ஆணவம், அடுத்தவர்களை சிறிதும் மதியாமை இவைகளுக்கெல்லாம் முடிவு கட்டும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

பாக்கர் கழண்டு கொண்டாரோ, கழட்டி விடப்பட்டாரோ! எப்படியோ கூடாரம் ஆட்டம் காண ஆரம்பமாகிவிட்டது. கூடாரம் முழுவதும் காலியாகிவிடுமோ என்ற பயம் வந்துவிட்டது. அதனால்தான், ஏற்கனவே கழட்டி விடப்பட்ட S.K. அண்ணனை இழுக்க நேசக் கரம் நீட்டுவது போல்,ஜனவரி ஏகத்துவத்தில் எழுதியுள்ளனர். பழைய பாசமா? அவரும் ஒரு புரோகிதர் என்பதாலா?

மென்மையான வழியைக் கடைபிடிக்காமல், “தலைக்கொழுப்பு”, கழிவுகெட்டகணக்கு”, அறிவிலி, என்று ஆணவத்தில் எழுதுவதெல்லாம் வசூல் குவிகிறது என்பதால்தானே? வல்ல அல்லாஹ் வசூலாவதை நிறுத்திவிட்டால் என்னாவீர்!

வல்லத்தில் 5/2008-ல் மற்றவர்களுக்குக் கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் நடத்தப்பட்ட கூத்து முடிந்து ஒரு வருடம் கூட முடியாத நிலையில், கூடாரம் கலைய ஆரம்பித்து விட்டது. இப்படியே போனால் தான் ஒருவன் மட்டும்தான் மிஞ்சுவோம் என்ற பயத்தில்தான். 1/2009 ஏகத்துவத்தில், “இவ்விரு அமைப்புகளுக்கும் மத்தியில் ஓர் இணக்கமான சூழ்நிலை ஏற்படுமமாயின் அதை நோக்கி முதன் முதலில் சமாதானக் கையை நீட்ட ததஜ தயங்காது”. என்று தூது விடுத்துள்ளார்.

ஓசிச் சோறு, வசூல் மழை என்று காலம் ஓட்டும் உங்களுக்கே “தலைக்கொழுப்பு” என்றால். சுயமாக உழைத்துச் சம்பாதிப்பவர்களுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்?

உங்கள் கொழுப்பு ஓசிக் கொழுப்பு! எங்கள் கொழுப்பு உழைப்புக் கொழுப்பு!

ஆகவே நாம் முதலில் எடுத்துக் காட்டியுள்ளபடி, வல்ல அல்லாஹ், முதன்முதலில் ஆதம்(அலை) அவர்களுக்கும், பின்பு துல்கர்னைன் அவர்களுக்கும் உலகம் உருண்டை, பூமி தன்னைத்ததானே சுற்றிக் கொள்கிறது. நாள் ஆரம்பம் ஆகும் இடம் போன்றவைகளை கற்றுக்கொடுத்துள்ளான் என்பது தெளிவாகிறது.

பூமி மேற்கிலிருந்து கிழக்காக, அதாவது இடமிருந்து வலமாகச் சுற்றிக் கொள்கிறது. புனித காஃபாவையும், பூமி சுற்றும் திசையிலேயே தவாஃபில் இடமிருந்து வலமாக நாம் சுற்றி வருவது, இங்கு குறிப்பிடத் தகுந்தது. அவ்வாறே சுற்றிவர வல்ல அல்லாஹ் ஏற்கனவே கற்றுத் தந்தும் உள்ளான்.

“பிறை ஓர் ஆய்வு” என்ற அவர்களின் உளறலில், சூரியன் சந்திரன் பற்றிய ஆயத்களைக் குறிப்பிட்டு, 1999ல் தான் இவ்வாயத்கள் தென்பட்டனவா என்று கேட்டுள்ளனர். வல்லோனின் வார்த்தையை “போன்ற” ஆயத்கள் என்று எழுதி சர்வ சாதாரணமாக்கியுள்ளனர். தாங்கள் ஒரு முடிவை எடுத்துக்கொண்டு, அதைத் தூக்கி நிறுத்துவதற்கு, அல்குர்ஆன் வசனங்களை உதாசீனப்படுத்தியுள்ளனர்.

ஹதீஸ்கலா வல்லுநர்களின் ஏகோபித்த முடிவின்படி, ஒரு பிரச்சனைக்கு புனித குர்ஆனில் தீர்வு உள்ளபோது, மற்ற ஆதாரங்கள் தேவை இல்லை என்பது எல்லோரும் அறிந்தது. இக்கொள்கையையும் ததஜவினர் தூக்கி எறிந்துவிட்டனர்.

மாற்றுமத சகோதரர்களுக்குள்ள ஞானம் கூட இந்த ததஜவினரிடம் இல்லை. எந்த இந்து மத சகோதரரும், “உங்கள் முதல் பிறை எங்களின் மூன்றாம் பிறை” என்றே கூறுவர். இவை ஓசிக்கொழுப்பு உள்ளவர்களுக்கு மண்டையில் ஏறாது.

இவ் ஓசிக் கொடுப்புக்காரர்கள், “பிறை ஓர் ஆய்வு” என்ற அபத்தத்தில், பக்கம் 91-ல் இப்போது சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சூரியன் மறைந்துவிட்டால், சனிக்கிழமை உதயமாகி விடுகிறது. என்று உளறிக் கொட்டியிருக்கின்றனர். சூரியன் மறைந்த உடனேயே உதயமும் ஆகிவிடும் என்று எந்த சர்வ முட்டாளும் கூறமாட்டான். இந்த ஒருவரியிலேயே இவர்கள் எப்பேர்ப்பட்ட உலகமகா அறிவாளிகள் என்பதை எவரும் உணரலாம். மேலும் சூரியன் மறைந்தவுடன் அடுத்த நாள் ஆரம்பமாகிவிடுகிறது என்ற அவர்களின் கொள்கைக்கு குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் எதையும் அவர்கள் எடுத்து வைக்கவில்லை.

புனித குர்ஆன், நபிமொழிகள் மூலம் சந்திர சுழற்சியின் அடிப்படையில் நாள் என்பது அதிகாலை ஃபஜ்ர் நேரத்திலிருந்து ஆரம்பித்து, முழு பகலையும் முடித்து தொடரும் இரவையும் முடித்து, அடுத்த அதிகாலை ஃபஜ்ர் உதயமாகும் போது முடிவடைகிறது என்ற உண்மை அவர்களுக்கு விளங்கினாலும் ஏற்றுக் கொள்ளும் பரந்த மன்பபான்மை அவர்களுக்கு இல்லை.

எனவே, கணிப்பின்படி செயல்பட எந்த வித தடையும் இல்லை. வல்ல அல்லாஹ் அனுமதித்தது தான் என்பது அறிவுள்ளவர்களுக்குப் புரியும்.

எல்லாம் வல்ல அல்லாஹ், உண்மையை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும், இயக்க வெறி, அமைப்பு வெறி, பிரிவு வெறி, பதவி வெறி, இன்றி குரோதத்தை மறந்து எல்லோரும் ஒன்றுபடும் பக்குவத்தை அனைவருக்கும் தந்து அருள்புரிவானாக!

எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவருக்கும் உண்மையான “தக்வா”வையும்,”தக்வா”வையும்.விளம்பரமில்லா தவ்ஹீதையும் தந்து அருள்புரிவானா!!

நாங்கள் தான் பட்டி தொட்டிகளெல்லாம் தவ்ஹீதை பரப்பினோம் என்று ஆணவப் படாமல், வல்லோனின் நாட்டமின்றி அணுவும் அசையாது என்று அல்லாஹ்வின் நம்பிக்கை வைக்க அல்லாஹ் அருள்புரிவானாக!!!

வேண்டும்போது ஒருவரை வைத்துக் கொண்டும், பின்பு படைபலம் சேர்ந்ததும் அவரை இழிவுபடுத்தி உதைத்து அனுப்புவது கொண்டும், பின்பு படைபலம் குறையத் தொடங்கியதும் இழிவுபடுத்தப்பட்டவரிடம் சென்று மன்றாடுவதையும் விடுத்து, மென்மையாக நடந்துகொள்ள முயற்சி மேற்கொள்வோமாக!

ஏதோ இந்த வருடம் மட்டும் அரபராஃஹ் நாள், பிறைகாலண்டர்படி வரவில்லை என்பதற்காக ஆனந்தக் கொண்டாட்டம் அடையாமல், நிரந்தர தீர்வு பற்றி சிந்திப்போமாக!

வல்ல அல்லாஹ் மிக நன்கறிந்தவன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக