இலங்கை திஹாரியிலிருந்து ஒரு சகோதரர் “பிறைநிலை 2005″ என்ற நூலின் சில பக்கங்களை அனுப்பியுள்ளார். இதில் “அந்நஜாத் அக்டோபர் 2004 இதழின் வெளிவந்த முஸ்லிம்களின் முதல் தேதி தலைப்பிறை என்ற தலைப்பிலான கட்டுரையின் சிலப் பகுதிகளை இங்கு மேற்கொள் காட்டுகிறேன். என்று பிறை நிலா நூலின் ஆசிரியர் டாக்டர் ஆகில் அஹ்மத் எழுதி, சில ஐயங்களைக் கிளப்பியுள்ளதை சுட்டிக் காட்டி விளக்கம் கேட்டுள்ளார்.
அவை வருமாறு :
(……..”அதைக் கண்டு நோன்பை ஆரம்பியுங்கள். அதைக் கண்டு நோன்பை விடுங்கள் என்ற இறைத் துதரின் கட்டளைப்படி அன்றுப் பிறையைப் புறக்கண்ணால் கண்டு நோன்பு நோற்றதற்கும், அடுத்தப் பிறையைக் கண்டு நோன்பை விட்டதற்கும் மாறாக சூரியன், பூமி, சந்திர ஒட்டகங்களை அறிவியல் கணிப்பீட்டின் மூலம் அறியும் இன்று பிறையின் தோற்றத்தையும் மறைவையும் அறிவியல் கணக்கீட்டீன் மூலம் அறிந்து நோன்பு நோற்பதையும் நோன்பு விடுவதையும் மறுக்காமல் ஏற்றுக் கொள்வதே அறிவார்ந்த செயலாகும். அன்று சூரிய ஓட்டத்தை கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இன்று அவ்வாறு பார்த்துக் கொண்டிருப்பதில்லை. அதேப் போல் அன்று சந்திர ஓட்டத்தை புறக்கண்ணல் பார்த்துக் கொண்டிருந்ததுப் போல் இன்றும் புறக்கண்ணர் பார்த்துக் கொண்டிருக்கும் கட்டாயம் இல்லை. அதற்கு மாறாகப் பிறையை புறக்கண்ணால் கணக்கிட்டே தீர்மானிக்க வேண்டும் எனக் கூறபவர்கள்.. கண்மூடிப் பின்பற்றுகின்றவர்களாகவே இருக்க முடியும் இல்லை தாங்கள் அறிவாளிகள் என்பது அவர்களின் வாதமாக இருந்தால் “ரஃயல் அய்ன்” புறக்கண்ணால் பார்த்து என்று கூறும் ஒரேயொரு ஆதாரப்பூர்வமான ஹதீஸையாவது காட்டட்டுமேப் பார்க்கலாம்..
தலைப்பிறை பிறக்கும் அந்தக் குறிப்பிட்ட தேதியை-கிழமையை ஒவ்வொரு நாடும் எப்போது அடைகின்றதோ அப்போது தான் அவர்கள் அதைத் தலைப்பிறையாக -முதல் தேதியாக எடுத்து செயல்படுவார்கள். அதேப் போல் அந்த முதல் பிறை தேதியின் அதிகாலையில் நோன்பை ஆரம்பித்து மாலையில் நோன்பை துறப்பார்கள்…)
இத்திட்டத்தில் எழும் சிக்கல்கள் வருமாறு…
1. இங்கு “தினம்”, தேதி” எனும் பதங்களும் கட்டுரையில் குறிப்பிடப்படும் திகதிகழும் நாட்காட்டி திட்டத்திற்கு அமைவனவாகவே உள்ளன. அவை நள்ளிரவு 12 மணியில் ஆரம்பித்து அடுத்த நள்ளிரவு 12 மணியில் முடிவடைகிறது. ஆனால் இஸ்லாமிய நாட்களானவை சூரிய அஸ்தமானத்தில் (மஃரிபு) ஆரம்பித்து அடுத்த சூரிய அஸ்த்தமானத்தில் முடிவடைகின்றன.
உதாரணமாக, ஹிஜ்ரி 1425 ஷவ்வல் தலைப் பிறையானது 02.11.2005 புதன் கிழமை மாலை தென்னமெரிக்க நாடுகளில் வெற்றுக் கண்களுக்கு தென்படும் என வானியலாளர்கள் கணித்திருக்கின்றனர்.
2. அவ்வாறாயின், குறித்த தினத்திலேயே உலகம் முழுவதும் புதியமாதம் ஆரம்பமாகும் என்றிருந்தால், 2ம் தேதியை ஈதுல் பித்ரை எதிர்ப்பார்த்திருந்த நியூசுலாந்து மக்கள் 2ம் திகதி ஷுபுஹ் தொழுகையின் பின்னர் ஈதுல் பித்ர் தொழுகையை முடித்திருப்பார்கள். அதாவது, உலகின் எந்தவொரு இடத்திற்கும் (இத்திறத்தவர்களின் பாஷையில்) பிறையானது பிறப்பதற்கு 15 மணித்தியாலங்களுக்கு முன்னரே ஈதுல் பித்ர் தொழுகையை முடித்திருப்பார்கள். எந்தவொரு இடத்திற்கும் தலைப்பிறை தென்பட்டு சுமார் 12 மணித்தியாலங்களுக்கு பின்னர் நிறைவேற்றப்பட வேண்டிய ஈதுல் பித்ர் தொழுகையானது தலைப்பிறை தென்படுவதற்கு 15 மணித்தியாலங்களுக்கு முன்னரே நிறைவேற்றப்படுவதானது ஏற்புடையதா?
3,2ம் திகதி புதன்கிழமை மாலை தலைப்பிறைக்காணப்பட்டால் 3ம் திகதியாகும் போதே புதிய மாதம் ஆரம்பிக்கும் எனக் கூறினால், தென்னமெரிக்க நாடுகளில் பிறைக் காணப்படும் போது (பி.ப 7 மணி) நியூஸிலாந்து மக்கள் அந்த நாளை (02.11.2005) ஏலவே முடித்து அடுத்த நாள் 03.11.2005 வியாழக்கிழமைக் காலை 10 மணியை அடைந்திருப்பார்கள். அம்மக்கள் ஈதுல் பித்ர் தொழுகையை எநநேரத்திற்கு தொழ வேண்டும்?
4. தென்னமெரிக்க நாடுகளில் ஷவ்வல் காணப்படும் போது (ப்ப. 7 மணி) நியூஸிலாந்து மக்கள் அந்த நாளை (02.11.2005) ஏலவே முடித்து அடுத்த நாள் 03.11.2005 வியழக்கிழமையை காலை பத்து மணியை அடைந்திருக்கும் நிலைமையில் கடைசியில் மஃரிபுடைய நேரத்திலிருந்து இஸ்லாமிய நாளிலிருந்து ஆரம்பித்து அவர்கள் கடந்து வந்த 12 மணித்தியாலங்களங்களை ரமழானுடைய நாளேட்டிலா சேர்த்துக் கொள்வது? ரமழானுடைய நாளேட்டிலெனில் இத்திறத்தாரின் கருத்துப்படி ஷவ்வால் மாதம் மஃரிபுடன் ஆரம்பித்திருக்குமே! ஷவ்வாலுடைய நாளேட்டிலெனில் அந்நேரத்தில் ஷவ்வால் தலைப்பிறை பிறந்திருக்கவில்லையே?
நன்றி: பிறை நிலா, 2005 பக். 19,30.
டாக்டர் ஆகில் அஹ்மத் அவர்களின் இந்த தடுமாற்றத்திற்கு காரணம் புரோகித முல்லாக்களின் கருத்தை ஏற்று இரண்டு பெரும் தவறுகளைச் செய்வதாகும். ஒன்று தலைப்பிறையைப் புறக்காண்ணால் கண்டே தீர்மானிக்க வேண்டும் என்ற புரோகித முல்லாக்களின் பிடிவாதம். இரண்டாவது நாள் காலை பஜ்ரில் முடிகிறது என்பதற்கு முரணாக நாள் மஃறிபில் ஆரம்பித்து அடுத்த மஃறிபில் முடிகிறது என்ற புரோகித முல்லாக்களின் பிடிவாதத்தை டாக்டர் அவர்களும் கண் மூடி ஏற்றுக் கொண்டிருப்பதாகும்.
டாக்டர் சுட்டிக்காட்டியுள்ள அந்நஜாத்தின் அந்தப் பகுதியிடிலேயே பிறையைப் புறக்கண்ணால் கண்டே தீர்மானிக்க வேண்டும் எனக் கூறுகிறவர்கள் புரோகித முல்லாக்களை கண்மூடி பின்பற்றுகிறவர்களாக இருக்க முடியும். இல்லை தாங்கள் அறிவாளிகள் என்பது அவர்களின் வாதமாக இருந்தால் “ரஃயல் அய்ன்-புறக்கண்ணால் பார்த்து” என்று கூறும் ஒரேயொரு ஆதாரப்புர்வமான ஹதீஸையாவது காட்டட்டுமே பார்க்கலாம்… என்று கேட்டிருப்பதை எடுத்து எழுதியுள்ளார்.
அப்படியானால் இந்த எமது அர்த்தமுள்ள கேள்வி டாக்டர் அவர்களின் கவனத்திற்கு வராமல் இல்லை. ஆயினும் புரோகிதமுல்லாக்களைப் போலவே, இது விஷயத்தில் டாக்டர்* அவர்களும் மெளனம் சாதித்துக் கொண்டு தமது கற்பனைகளை அவிழ்த்து விட்டுள்ளார்.
புறக்கண்ணால் பார்ப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல: பலகீனமான ஹதீஸ் அல்ல. இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் கூட இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். 1429 ஆண்டுகளுக்கு முன்னர் நபி(ஸல்) அவர்களது காலத்தில் புறக்கண்ணால் பார்த்து தலைப்பிறையைத் தீர்மானித்தது ஒன்றே இவர்களின் ஒரேயொரு ஆதாரம். பிறையை மட்டுமா புறக்கண்ணால் கண்டு தீர்மானித்தார்கள்? சூரியனை புறக்கண்ணால் கண்டே தொழுகை நேரங்களை தீர்மானித்தார்கள். அன்று தொலை தொடர்பு வசதியில்லாத வெளியூரில் மரணிக்கும் கணவனின் இறப்புச் செய்தி காலதாமதமாக கிடைத்து அதன் பின்னரே மனைவி இத்தா இருக்கும் நிலை இருந்தது. வாகன வசதிகள் இல்லாததால் அன்று தூரப் பகுதிகளிலிருந்து ஒட்டகத்தில் தான் ஹஜ்ஜுக்கு சென்றார்கள். அல்லாஹ்வும் அல்குர்ஆன் ஹஜ் 22:27ல் துாரப் பகுதிகளிலிருந்து மெலிந்த ஒட்டகங்களில் ஹஜ்ஜுக்கு வருவார்கள் என்று நேரடியாகவே கூறியுள்ளான்.
அதுதான் போகட்டும்; அல்குர்ஆன் அலிபகரா 2:187 ல் நோன்பு நோற்க ஆரம்பித்து முடிப்பதுப் பற்றி இன்னும் பஜ்ரு நேரம் வெள்றை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள். பருகுங்கள்; பின்னர் இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள். என்று நேரடியாக அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். இந்த நூல் கருப்பு நூல் என்ற இரவிலிருந்து வெள்ளை நூல் பிரிவதை புறக்கண்ணால் மட்டுமேக் காண முடியும். படைத்த எஜமானனின் இப்படிப்பட்ட நேரடிக் கட்டளையான புறக்கண்ணால் மெய் வெள்ளையை பார்ப்பதை நிராகரிக்கவிட்டு கடிகாரத்தைப் பார்த்து சஹர் நேரத்தையும், நோன்பு திறக்கும் நேரத்தையும் நோன்பு தீர்மானிப்பவன் அன்று சூரிய ஒளியைப் பார்த்து தொழுகை நேரங்களை தீர்மனித்ததை நிராகரித்து விட்டு இன்று கடிகாரத்தை பார்த்து (ருயஃத்) தொழுகை நேரடிங்களைத் தீர்மானிப்பவர்கள் 22:27 லுள்ள அல்லாஹ்வின் நேரடிக் கட்டளையான ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்கு செல்வதை நிராகரித்துவிட்டு விமானத்தில் ஹஜ்ஜுக்கு செல்கிறவர்கள், அன்று நேரடியாக வந்து செய்தி சொன்ன பின்னர் இத்தா இருப்பதை நிராகரித்துவிட்டு, தொலைபேசி தகவல் கிடைத்தவுடன் இத்தா இருக்க கட்டளையிடுகிறவர்கள் இப்படி எண்ணற்ற நபி(ஸல்)அவர்கள் காலத்து நடைமுறைகளைப் புறக்கணித்து, நவீன காலத்து நடைமுறைகளை ஏற்று நடக்கிறார்கள்.
ஆனால் அவர்களின் இந்த நடைமுறைகளுக்கு முரணாக கண்ணால், அறிவால் ஆய்வால் தகவலால் கணிப்பீட்டால் கணக்கீட்டால் போன்ற அனைத்து முறைகள் மூலம் பார்ப்பதையும் பொதுவாக குறிக்கும் “ருஃயத்” அரா” “தரா” போன்ற அரபிப் பதத்திற்கு இவர்களாக “ரஃயன் அய்ன்” புறக்கண்ணால் பார்ப்பது மட்டுமே என அடம் பிடிக்கிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன?
இதற்கு முரணாக மார்க்கக் கல்வியை மக்கள் அனைவரும் கற்றுக் கொள்வது கடமையாக இருக்கிறது. அவரவர் கட்டைக்கு அவரவர்கள் அறிந்து, தெரிந்து நடப்பது கடமையாக இருக்கிறது. இதில் ஒருவருடையப் பொருப்பை மற்றொருவர் ஏற்க முடியாது. மார்க்கத்தில் கோணல் வழிகளை நேர்வழியாக ஒருவர் போதித்தாலும் அதை நம்பிச் செயல்படுகிறவர்கள் அதன் முடிவை தங்கள் இவ்வுலக அனுபவத்தில் பார்க்க முடியாது. நாளை மறுமையில் தான் பார்க்க முடியும். எனவே மார்க்கத்தில் ஒருவரைப் படித்தவர், பட்டம் பெற்றவர், ஆலிம், அல்லாமா என நம்பி அவரைப் பின்பற்றுவதுக் கூடாது; அல்லாஹ் தடுத்துள்ளான். (பார்க்க 7:3, 33:36, 66, 67, 68)
உலகியல் துறைகளில் படித்துப் பட்டம் பெற்ற அவை கொண்டு சம்பளம், கூலி, கட்டணம் பெறலாம். மார்க்கத்தில் தடை இல்லை. ஆனால் மார்க்கத் துறையில் படித்துப் பட்டம் பெற்று அதுக் கொண்டு சம்பளம், கூலி, கட்டணம் பெறுவது கொடிய ஹராம். அல்குர்ஆனில் சுமார் 50 இடங்களில் பல கோணங்களில் அல்லாஹ் மிகக் கடுமையாகத் தடுத்துள்ளான்.
மார்க்கம் கொண்டு, கூலி, சம்பளம், கட்டணம் பெற்று அதுக் கொண்டு சாப்பிடுகிறவர்களின் உள்ளங்கள் சுருங்கி, இறுகி கற்பாறைகள் போல் ஆகி விடுகின்றன. அவர்கள் தங்களின் வயிற்றை நரக நெருப்பைக் கொண்டே நிரப்புகின்றனர். இன்னும் இவைப் போல் மிகமிகக் கடுமையான எச்சரிக்கைகளை அல்குர்ஆனில் பார்க்க முடியும் (பார்க்க 2:74, 78, 79, 174, 31:6………)
எனவே உலகியல் துறைகளில் படித்துப் பட்டம் பெற்று அவற்றைப் பிழைப்பாகக் கொண்டவர்கள், மார்க்கத் துறையும் அதுப் போன்ற ஒன்றுத் தான் என தப்புக் கணக்குப் போட்டு இந்தப் புரோகித முல்லாக்களின் சுய கற்பனைகளை இறைவாக்காக ஏற்று நம்பி செயல்படுவரைத் தவிர்ப்பார்களாக; இதுவே டாக்டர் ஆக்கில் அஹ்மதுக்கும் எனது பணிவான வேண்டுகோள்.
மாதாமாதம் தலைப்பிறையை புறக்கண்ணால் கண்டே தீர்மானிக்க வேண்டும் என்ற நிலை நீடித்தால் யுக முடிவு வரை முஸ்லிம்கள் ஹிஜ்ரி நாள்காட்டி தயாரிக்கவே முடியாது என்ற சாதாரண அறிவும் இந்த டாக்டர் போன்றவர்களுக்கு இல்லையா?
எனவே பிறையைப் புறக்கண்ணால் கண்டு மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என்ற மூடத்தனமான வாதத்தை கைவிடுவீராக சூரியனும் சந்திரனும் ஏகன் இறைவனது கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. அவற்றிற்கு விதிக்கப்பட்ட வட் வரைகளில் விதிக்கப்பட்ட வேதத்தில் சதா சுழன்றுக் கொண்டிருக்கின்றன. (பார்க்க 6:96, 10:5, 13:2, 14:33, 35:13, 39:5, 55:5) மனிதர்களின் கண்ணின் கட்டுப்பாட்டில் அவை இல்லை. சந்திரனின் ரிமோட் கன்ட்ரோல் மனிதர்களின் கண்கள் தான் என்பதை விட மடமை வேறொன்றும் இருக்க முடியாது. மனிதனின் கண்பட்டால் தான் சந்திரன் சுழலும்; மனிதனின் கண் படாதவரை சுழலாமல் நிற்கும்; அதனால் கண்ணில் பட்டால் தான் அது தலைப்பிறை என்பதை விட மடமையான வாதம இறைவனுக்கு இணை வைக்கும் வாதம் பிறிதொன்று இருக்க முடியுமா? சந்திரனின் சுழற்சி மனிதர்களின் கண்ணின் கட்டுப்பாட்டில் இருக்கிறது; இறைவனின் கட்டுப்பாட்டில் இல்லை என எண்ணுவது இறைவனுக்கு இணை வைக்கும் கொடிய செயலா? இல்லையா?
எனவே மனிதன் புறக்கண்ணால் பார்ப்பதே தலைப்பிறை என்ற மடமை வாதத்தை டாக்டர் அவர்கள் கைவடுவாராக. நூறு வருடங்களுக்குப் பின்னர் ரமழான், ஷவ்வால், துல்ஹஜ் தலைப்பிறை என்று தோன்றும் என்பதை இன்றே கணிணி கணக்கீட்டின் மூலம் பார்த்து (ருஃயத்) சொல்ல முடியும் என்பதை அறிவீராக.
எனவே டாக்டர் ஆக்கில் அஹ்மத் அவர்கள் சுமார் 02.11.2005 புதன்கிழமை மாலை தென்னமெரிக்க நாடுகளில் வெற்றுக் கண்களுக்கு தென்படும் என வானியலாளர்கள் கணித்திருக்கின்றனர் என்ற அடிப்படையில் தனது சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது பெருந்தவறு என்பதை உணர்வாராக. தலைப்பிறையைக் கண்ணால் பார்க்க வேண்டிய அவசியம் இன்று கடுகளவும் இல்லை என்பதை உணர்வாராக. சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்று கோள்களும் நேர்க் கோட்டிற்கு வந்து விட்டால் விஞ்ஞானிகளே சொல்வதுப் போல் முன்னைய மாதம் முடிந்து அடுத்த மாதம் ஆரம்பமாகி விட்டது ஆனால் விஞ்ஞானிகள் புதிய சந்திரன் என்று சொல்லும் அன்றைய தினம் (நமது நாட்டில் அமாவாசை என்கின்றனர்.) முன்னைய மாதத்தின் இறுதிப் பகுதியும் புதிய மாதத்தின் ஆரம்பப் பகுதியும் கலந்திருப்பதால் அதனை முழு நாளாக எடுக்க முடியாது. பிறை, நாள், கிழமை முழுமைப் பெற்ற முழுநாட்களாக 24 மணிகள் கொண்ட முழு நாளாக இருக்க வேண்டும். உலக முழுவதும் ஒரே நாளில் ஜும்ஆ தொழுகிறார்கள், என்றால் அது ஒரு நாளில் பாதியளவும் மறு நாளில் பாதியளவும் இருக்க முடியாது. ஒரு நாளாக இருக்க வேண்டும். என்பதை அவர்களும் மருக்க முடியாது
அதேப் போல் முஸ்லிம்களின் நாள்காட்டியான பிறையும் இரண்டு தினங்களோ, மூன்று தினங்களோ ஒரு போதும் இருக்க முடியாது. பிறை-1 நாள்-1 கிழமை 24 மணி நேரத்திற்குள் இருக்க முடியும்.
டோங்கா போன்ற கிழக்கு நாடுகளில் முதல் நாள்-முதல் பிறை ஆரம்பித்து 24 மணிநேரத்தில் தேதிக் கோட்டிற்கு சமீபமாக இருக்கும் (தேதிக் கோட்டிற்கு கிழக்கே) சமோவாப் போன்ற மேற்கு நாடுகளுடன் முடிவடைகிறது.
இந்த அடிப்படையில் கணக்கிட்டால் டாக்டர் ஆக்கில் அஹ்மத்தின் ஐயங்கார் அனைத்தும் பஞ்சாகப் பறந்துவிடும்.
டாக்டர் ஆக்கில் செய்துள்ள இரண்டாவது பெருந்தவறு முதல் பிறை- முதல் நாள் மஃறிபிலிருந்து ஆரம்பித்து மஃறிபில் முடிவடைகிறது.
பெருங்கொண்ட மக்களின் மனோ இச்சைக்கு ஏற்றவாறு அவர்களின் மழுங்கடிக்கப்பட்ட மூளையில் ஆரம்பித்து மஃறிபில் ஆரம்பித்து மஃறிபில் முடிவடைகிறது என்பது குருட்டுத் தனம்.
அவர்கள் கண்ணால் பார்க்கும் பிறை மஃறிபில் தானே தெரிகிறது; அதைத்தானே அறீவீனமானப் பிறை பிறந்துவிட்டது. என பிதற்றுகிறார்கள். இந்தப் பிதற்றலில்ப் பிறந்ததே நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற மூடத்தனமான நம்பிக்கை, உண்மையில் இவர்கள் பார்க்கும் பிறை காலையில் பிறந்து மாலையில் மறைகிறது. மறைகின்ற பிறையைப் பார்த்துவிட்டு தான் இந்த மவ்லவிகள் பிறை பிறந்துவிட்டது எ மூடத்தனமாகக் கூறுகின்றனர். இந்த மூட நம்பிக்கை மத்ஹபுகளைக் கற்பனை செய்து இஸ்லாத்தில் நுழைத்த 4-ம் நூற்றாண்டிலும் இருக்கவில்லை என்பதற்கு நோன்பு நிய்யத் என்று இவர்கள் இஷாவுக்குப் பிறகு சொல்லிக் கொடுக்கும் பித்அத்தான நிய்யத்தே போதிய ஆதாரமாக இருக்கிறது. இந்த வருடத்து ரமழான் மாதத்து பர்ழான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நிய்யத்துச் செய்கிறேன்” என்ஆற இன்றும் சொல்லிக் கொடுக்கிறார்கள். அவர்களின் மூடத்தனமான வாதப்படி நாளை மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற மடமை வாதம் ஹி.400-ல் இருந்திருக்குமானால், நோன்பு நிய்யத்தை எப்படிச் சொல்லி கொடுத்திருக்க வேண்டும்”. நாளைப் பிடிக்க” என்பதற்கு மாறாக “இன்றுப் பிடிக்க” என்றே சொல்லிக் கொடுத்திருப்பார்கள். எனவே மத்ஹபுகள் கற்பனை செய்யப்பட்ட ஹிஜ்ரி 400ல் நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற மூடநம்பிக்கை இருக்கவில்லை. பின்னரே இந்த மூட முல்லாக்களால் மாலையில் மறையும் பிறையை, பிறை பிறந்து விட்டதாக மூடத்தனமாக மக்களின் மனோ இச்சைக்கு ஏற்றவாறு சொல்லி மக்களை வழிக்கெடுத்திருக்கிறார்கள்; வழிக்கெடுத்து வருகிறார்கள்.
அதனால் ரமழான் இரவுத் தொழுகையை ஆரம்பிப்பது முடிப்பது ஒற்றைப்படை நாள்களில் லைலத்துல் கத்ரை அடைவதற்கு வழிபாடுகளில் ஈடுபடுவது இவை அனைத்திலும் தலைக் கீழாகச் செயல்படச் சொல்லி மக்களை வழிக் கெடுக்கிறார்கள். இவர்கள் மஃறிபில் மறையும் பிறையை பிறப்பதாக மூடத்தனமாக நம்பி, நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்று பிதற்றுகிறார்களே அல்லாமல் ஆதாரப்பூர்வமான ஒரு ஹதீஸையோ, குர்ஆன் வசனத்தையோ காட்ட முடியாது.
இந்த மவ்லவிகளின் வாதப்படி நாள் மஃறிபிலிருந்து என்பது சரியாக இருந்தால், அந்த கிராமத்தினரும் வாகனக் கூட்டத்தாரும் காலையிலும் மாலையிலும் வந்து சாட்சி கூறும் போது எப்படி கூறி இருக்க வேண்டும்? இன்று நாங்கள் பிறைப் பார்த்தோம் என்றல்லவா கூறியிருக்க வேண்டும். அவர்கள் தவறாக நேற்று என்று கூறி இருந்தால் உடனே நபி(ஸல்) அவர்கள் என்ன செய்திருப்பார்கள்? நேற்று என்று தவறாகக் கூறாதீர்கள். இன்று என்று சரியாகச் சொல்லுங்கள் என்று அவர்களைத் திருத்தி இருப்பார்களா? இல்லையா? மார்க்கத்தை சரியாகவும், முறையாகவும் நிலைநிறுத்தத்தானே அவர்கள் அல்லாஹ்வால் நபியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதை மவ்லவிகளால் மறுக்க முடியுமா? நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் அந்த இரு கூடடத்தாரும் “நேற்று நாங்கள் பிறைப் பார்த்தோம்” என்று கூறியிருப்பது, அவர்கள் பிறை பார்த்த நாள் பஜ்ருடன் முடிவடைந்து. புதிய நாள் பஜ்ரிலிருந்து ஆரம்பித்துவிட்டது என்பதை உள்ளங்கை நெல்லிக்கணியாக உணர்த்தவில்லையா?
இன்னும் பாருங்கள்: அல்குர்ஆன் பகரா 2:238-ல் தொழுகைகளை, நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள் என்றுத் தெளிவாகக் கூறுகிறது.
நடுத்தொழுகை அஸருடையத் தொழுகை தான் என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டு, அவர்களின் இரு மனைவியர் ஆயிஷா(ரழி), ஹஃப்ஸா(ரழி) உறுதிப்படுத்துவதுடன் அவர்கள் எழுதி வைத்திருந்த குர்ஆனிலும் அதைக் குறிப்பிட்டுள்ளனர். புகாரீ 2931, 4111 அலீ(ரழி) அறிவிக்கும் ஹதீஸ்களின் நடுத்தொழுகை அஸர் தொழுகைத் தான் என்பதை உறுதிப்படுத்துகின்றன. நாள் பஜ்ரில் ஆரம்பிப்பதாக இருந்தால் தான் நடுத்தொழுகை அஸராக இருக்க முடியும். நாள் மஃறீபிலிருந்து ஆரம்பித்தால் நடுத்தொழுகை அஸராக இருக்க முடியாது. அது பஜ்ராகவே இருக்க முடியும். இதிலிருந்தே நாள் மஃறிபிலிருந்து ஆரம்பிக்கிறது என்பது இந்த மூட முல்லாக்களின் வழித் தெடுக்கப்பட்டு மூளையில் உதித்த குருட்டு வாதம் என்பது புரியவில்லையா?
இதோ இன்னொரு ஆதாரம் அல்குர்ஆன் அல்கத்ர் 97:5 சாந்தி, அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும் என்று கூறியிருப்பதிலிருந்து கத்ருடைய நாள் பஜ்ரில் முடிவடைந்து அடுத்த நாள் ஆரம்பிக்கின்றது என்பதை உறுதிப்படுத்துகிறது. இங்கும் “லைலத்” என்பதை நாள் என்று மொழிப்பெயர்க்காமல் இரவு என்று மொழிப்பெயர்த்து தாங்களும் வழிகெட்டு மக்களையும் வழிகெடுப்பார்கள். அவர்கள் கூறுவதுப் போல் “லைலத்துல் கத்ர்” இரவாக இருந்தால் அது 12மணி நேரம் மட்டுமே இருக்க முடியும். அப்படியானால் அந்த மகத்தான புணிதமிக்க இரவு உலகின் ஒரு பாதி மக்களுக்கு மட்டுமேக் கிடைக்கும். அப்படியானால் அல்லாஹ்வை ஓரவஞ்சனை உடையவனாக இந்த முல்லாக்கள் சித்தரிக்கிறார்கள்(நவூது பில்லாஹ்) ஆனால் அல்லாஹ் நடுநிலையானவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக