வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

முஸ்லிம்களே சுயமாகச் சிந்தீப்பீர்!

இப்னு ஹத்தாது.

“….(நீங்கள்) அமைதி பெற அவனே இரவையும், காலக் கணக்கினை அறிய சூரியனையும் , சந்திரனையும் படைத்தான்……” (6:96)

அவன் தான் சூரியனை பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான்; ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்……. (10 :5)

சூரியனும், சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட) காலக் கணக்கின்படியே இருக்கின்றன. (55 :5)

சூரியனும் சந்திரனும் இறைவனது அதிகாரத்திற்குள் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே சுழல்கின்றன. (13 :2)

“தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்துள்ளான்……..” (16 : 12)

“….. சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கிறான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலவரைப்படியே சுழல்கின்றன…..” (35: 13)

“…..சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் சுழல்கின்றன……” (39 : 5)

“பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்; அவை மக்களுக்குக் காலம் (வக்த்து) காட்டுபவையாகவும் , ஹஜ்ஜை அறிவிப்பவையாகவும் உள்ளன…..” (2 : 189)

“…..ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் (வக்த்து) தொழுகையை நிறைவேற்றுவது நம்பிக்கையாளர்களுக்கு விதியாக்கப்பட்டுள்ளது…..” (4 : 103)

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ (ருஃயத்) அவ்வாறே நீங்கள் தொழுங்கள். (மாலிக் பின் ஹுவைரிஸ்(ரழி) புகாரீ, முஸ்லீம்)

அதைக் கண்டு (ருஃயத்) நோன்பை ஆரம்பியுங்கள்; அதைக் கண்டு (ருஃயத்) நோன்பை முடியங்கள். (இப்னு உமர்(ரழி), அபூஹுரைரா(ரழி) புகாரீ)

மேலே எழுதியுள்ள அல்குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும், விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு ஆராய்கிறவர்கள், இறைவனிடமும், அவனது இறுதித் தூதரிடமும் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஒரே அளவுகோள் தான் இருக்கின்றது என்பதை அறிய முடியும். சூரியன் நேரக் கணக்கினைக் காட்டுவதாகவும், சந்திரன் நாள் கணக்கையும், மாதக் கணக்கையும் காட்டுவதாகவும் இறைவன் வரையறை செய்துள்ளதையும் அறிய முடியும்.

அல்லாஹ்வோ, அவனது தூதரோ சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் வேறுபாடு காட்டவில்லை என்பது மேலே காணப்படும் குர்ஆன் வசனங்களிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் திட்டமாகத் தெரிகிறது. ஆனால் இன்றைய தக்லீது, மவ்ஹீது மவ்லவி புரோகிதர்களோ சூரியனுக்கு ஒரு சட்டம்; சந்திரனுக்கு ஒரு சட்டம் என விதாண்டாவாதம் செய்து மக்களை வழிகெடுக்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்களது காலத்தில் நேரத்தை அறிய அன்றிருந்த ஒரே வழி வேறு மாற்று வழியே இல்லை, அது சூரியனைப் பார்த்து நேரத்தை (வக்த்தை) முடிவு செய்வதாகும். நேரத்தை அறிய புதிய மாற்று வழியான சூரியனைப் பார்ப்பதை (ருஃயத்) நேரத்தை (வக்த்தை) முடிவு செய்ய, முதன் முதலாக முற்பட்ட போதும் இந்த புரோகித மவ்லவிகள் இதே போல் பிடிவாதம் பிடிக்கவே செய்தனர். ஆனால் காலப்போக்கில் தங்களின் விதண்டாவாதத்தை விட்டு அவர்களும் கடிகாரத்தைப் பார்த்து (ருஃயத்) நேரத்தை (வக்த்தை) முடிவு செய்ய ஆரம்பித்து விட்டனர்.

சூரியனை, நபி(ஸல்) காலத்தில் கண்ணால் பார்த்து (ருஃயத்) நேரத்தை (வக்த்தை) முடிவு செய்ததற்கு மாறாக சுமார் 300 வருடங்களுக்கு முன்னர் விஞ்ஞான வளர்ச்சி காரணமாக சூரியனை கண்ணால் பார்ப்பதை விட்டு, கடிகாரத்தைப் பார்த்து (ருஃயத்) நேரத்தை (வக்த்தை) முடிவு செய்தது போல், இன்றைய விஞ்ஞான வளர்ச்சி காரணமாக கணினி கணக்கீட்டின் மூலம் சந்திரனை கண்ணால் பார்ப்பதை விட்டு, கணினி கணக்கீட்டை பார்த்து (ருஃயத்) மாதத்தை (வக்த்தை) (பார்க்க 2:189) முடிவு செய்யும் எளிதான வாய்ப்பு இருக்க, அதைப் புறக்கணித்து விட்டு, அவர்களை நம்பியுள்ள அப்பாவி முஸ்லிம்களை இந்த தக்லீது, தவ்ஹீது மவ்லவி புரோகிதர்கள் வழிகெடுத்து கடமையான முதல் இரு ரமழான் நோன்புகளை விடச் செய்தும், ஷவ்வால் பெருநாள் தினத்தில் ஹராமான முறையில் நோன்பு நோற்கச் செய்தும் வருகிறார்களே, முன்னைய நபிமார்களின் சமுதாயங்களில் புகுந்து கொண்டு அந்த மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளிய அந்தப் புரோகிதர்களுக்கும், இந்த முஸ்லிம் மதப் புரோகிதர்களுக்கும் வேறுபாடு உண்டா?

அவர்களைப் பற்றி அல்குர்ஆனில் அல்லாஹ் எச்சரித்துள்ள மிகக் கடுமையான எச்சரிக்கைகள் எல்லாம் இவர்களுக்கும் நூற்றுக்கு நூறு பொருந்துமா? இல்லையா? அவர்களை ஜானுக்கு ஜான் , முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தது பொய்யாகுமா? அப்பாவி முகல்லிது, செமி முகல்லிது முஸ்லிம்களே இந்த தக்லீது, தவ்ஹீது புரோகித மவ்லவிகளின் பிடியிலிருந்து விடுபட்டு, நீங்கள் குர்ஆன், ஹதீஸை நேரடியாக தன்னம்பிக்கையுடனும் படித்து விளங்கி அதன்படி நடக்க முன்வராத வரை உங்களுக்கு ஈடேற்றம் – வெற்றி இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக