(இஸ்லாமிய மாதங்கள் பற்றி உலகளாவிய தீர்மானம் பற்றி வட அமெரிக்காவின் சட்டதிட்ட (ஃபிக்ஹ்) குழு எடுத்த முடிவு)
வட அமெரிக்காவின் இஸ்லாமிய சட்ட திட்டக்குழு (The Fiqh Councilof North America). வட அமெரிக்கா விலுள்ள தகுதி வாய்ந்த கல்வியாளர் களைக் கொண்டமைந்த ஒரு சுதந்திர மான அமைப்பாகும். வட அமெரிக்கா வில் இஸ்லாமிய வாழ்க்கை நெறிக்கு இன்றியமையாத சட்ட திட்டங்களுக்குத் தேவையானவை மற்றும் அந்த நெறி யின் பல அம்சங்கள் பற்றி ஆலோச னைகள் வழங்க இந்தக் குழு பல்வேறு நிபுணர்கள் மற்றும் ஆலோச கர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
இந்தக் குழு மிக உன்னிப்பாக ஆய்ந்தும், கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் நடத்தியும், சந்திரக் கணக்குப்படி இஸ்லாமிய மாதங்களை நிர்ணயிக்க ஒரு புதிய நிலைப் பாட்டை மேற்கொண்டுள்ளது. இந்த நிலைப்பாடு கீழ்வரும் இஸ்லாமிய சட்டதிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகும்.
அ ) ஹிலாலை – பிறையைப் பார்ப்பது (ருஃயாஹ்) அதனளவில் ஒரு வணக்க வழிபாடு (இபாதத்) அல்ல. மாறாக இஸ்லாமிய வணக்க வழிபாடுகளோடு சம்பந்தப்பட்ட புதிய மாதத்தின் தொடக்கத்தைத் திட்டவட்ட மாகக் கண்டு பிடிப்பதற்கு உரிய ஒரு வழிமுறையே ஆகும்.
ஆ ) ருஃயாஹ்-அன்று கண்ணால் பார்ப்பது-ஒரு வழிமுறையாகக் காட்ட ப்பட்டு நபி(ஸல்) அவர்களால் கடைப் பிடிக்கப்பட்டது. ஏனெனில் அன்னாரே கூறியதுபோல அந்தக் காலத்தில் உம் மத்தினர் கல்வி கற்றவர்களல்லர், எழுதவோ, (சிக்கல் நிறைந்த வானியல் விவரங்களைக்) கணக்கிட்டு அறிந்துகொள்ளவோ தெரியாதவர்கள்.
இ) உயர்நிலையிலுள்ள சில சட்ட நிபுணர்கள் இந்த கணிப்புகளை ஏற்றுக் கொள்ள சம்மதித்தார்கள்.
அந்த நிலையிலுள்ள வேறு சில சட்ட நிபுணர்கள் இந்த விவகாரத் தில் கணிப்புகளை ஏற்க மறுத்து விட்டார்கள்.ஏனெனில் அவர்களுடைய காலத்தில் வானியல் மற்றும் சோதிடம் தெளிவான அறிவியல் கூறுகளாகக் கருதப்படவில்லை. வானியல் முன்னறி விப்புகள் துல்லியமான அறிவியல் அடிப்படையில் அல்லாமல் வெறும் கற்பனை, ஊகம் மற்றும் மூட நம்பிக் கைகளை அடிப்படையாகக் கொண்ட வையே என்று ஐயம் கொண்டனர்.
கடந்த நூற்றாண்டில், பிறை பார்ப்பதைப் பற்றி வெளியாகும் தவறானக் கருத்துக்களை முறியடிக்க வானியல் கணக்கீடுகள் (Calculations) பயன்படுத்தப் பட வேண்டும் என்று கருத்துக் கூறிய முஸ்லிம் சட்ட நிபுணர்களின் எண்ணிக்கைப் பெருகியே வந்துள்ளது. வானியல் கணக்குகள் (Calculations) புதிய இஸ்லாமிய சந்திரக் கணக்குப்படி அமையும் மாதங்களை நிர்ணயிக்க ஐயத்திற்கு இடமற்ற ஒரு வழிமுறையாக பயன் படுத்தப்படலாம் என்று சில சட்ட நிபுணர்கள் அறிவித்துள்ளார்கள்.
உலகளாவிய அளவில் சந்திரக் கணக்குப்படி இஸ்லாமிய நாள் காட்டியை (Calendar) உருவாக்க, இன்றைய காலகட்டத்தில் பல முஸ்லிம் வானியல் வல்லுநர்கள் பல ஆண்டு களாக உழைத்து வருகிறார்கள். FCNA என்ற அழைக்கப்படும் மேலே குறிப்பிடப்பட்ட வட அமெரிக்கக் குழு, அதன் நிபுணர்களாகிய, Dr.இமா த்துத்தீன் அஹ்மத், Dr.காலித் சவுக்கத், Dr.முஹிப் துர்ரானி, மற்றும் Dr.அஹ்மத் ஸலாமாஹ் ஆகியோரின் முயற்சி களைக் குறிப்பாகப் பாராட்டியுள்ளது.
வட அமெரிக்காவின் சட்ட திட்டக் குழு கீழ்வரும் அம்சங்களைக் கவனத்தில் கொண்டு அதன் முடிவை எடுத்துள்ளது.
* இஸ்லாமியத் தேதிகளை நிர்ணயிக்க வானியல் கணக்குகளைப் (Calculation) பயன்படுத்துவது சுன்னத் திற்கு-நபி வழிக்கு முரணானது அல்ல.
* ரமழான் மாதம் மற்றும் இரு பெருநாட்கள் சம்பந்தப்பட்ட நாட்களை நிர்ணயிக்க உறுதியான அடிப்படையாக அமையக் கூடிய நம்பத்தகுந்த வானியல் ரீதியான வழிமுறைகள் இப்பொழுது உள்ளன.
* ஷரீஅத் (இஸ்லாமியச் சட்ட திட்டங்கள்) எளிதான அடிப்படையில் அமைந்து மளக்களின் வசதியைக் கருத்தில் கொண்டதாகும்.
* ரமழான் மாதத் தொடக்கத் திலும் இரு பெருநாட்களின் போதும் ஒவ்வோர் ஆண்டும் எழும் குழப்பங்களையும் குளறுபடிகளையும் இடர்ப் பாடுகளையும், அந்த நாட்கள் முன்னதாகவே கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டால் தவிர்த்துவிடலாம்.
* இஸ்லாமியத் தேதிகள் முன்ன தாக அறிவிக்கப்பட்டுவிட்டால், முஸ் லிம்கள் தங்கள் நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட்டு நிறைவேற்ற வும், அலுவலகத்திலிருந்து தாங்கள் விடுப்பு (Leave) பெறவும். பள்ளிக் கூடங்களிலிருந்து பிள்ளைகள் விடுப்பு பெறவும் உதவியாக இருக்கும். வேறு பல பலன்களும் இதன் மூலம் விளையும்.
* இந்தத் தேதிகள் முன்கூட்டியே அறிவிக்கப்படுவது வட அமெரிக்க முஸ்லிம் சமுதாய மக்கள் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்துக் கொள்ள உதவும் (யதார்த்தத்தில் இது உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் பொருந்தும்)
* அமெரிக்க முஸ்லிம்கள் இந்த இஸ்லாமிய விடுமுறை நாட்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப் பாடு படலாம். (இஃது அனைத்து நாட்டு முஸ்லிம்களுக்கும் பொருந்தும்)
* வடஅமெரிக்கா முஸ்லிம் சமுதாயம், ஒட்டு மொத்த முஸ்லிம் உலகிற்கே ஒருங்கிணைக்கப் பெற்ற இஸ்லாமிய நாள்காட்டியை (Calendar) உருவாக்க வழிகாட்டியாக அமையும்.
முஸ்லிம் சமுதாயங்களின் இமாம்களுடனும் அறிஞர்களுடனும் தொடர்ந்து உழைத்து இந்த விவகார த்தில் கருத்து ஒருமைப் பாட்டை உரு வாக்க இந்த சட்டதிட்டக் குழு, பாடுபடும். ஆனாலும், நம்மில் சிலர் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளா விட்டாலும் இந்த விவகாரத்தில் நிலவும் கருத்து வேறுபாட்டை (இக்திலாஃபை) நாம் அறிந்திருக்கிறோம். நியாயமான சட்டதிட்டம் பற்றிய கருத்து வேறுபாடுகள் நிலவி னாலும் உம்மத்(சமுதாயத்)தினர் யாவரும் சகோதரர்கள் என்ற நிலையில் ஒன்று பட்டாக வேண்டும்.
வட அமெரிக்க சட்டதிட்டக் குழு, இஸ்லாமிய சந்திரக் கணக்கு நாள்காட்டியை (Islamic Lunar Calendar) நிர்ணயிக்க எடுத்த முடிவு:
10. ஜூன் 2006 அன்று, விர்ஜினியா நகரில் வட அமெரிக்க சட்டதிட்டக் (ஃபிக்ஹ்) குழு நடத்திய ‘பிறை பார்த்தல்’ பற்றிய சிறப்பு மாநாட்டில், ஏராளமான சட்ட நிபுணர் களும், இமாம்களும், வானியல் வல்லுநர்களும், அக்கறை கொண்ட வேறுபல முஸ்லிம்களும் பங்கேற் றனர். இந்த விவாதப் பொருள் பற்றிய சட்ட நடைமுறை மற்றும் வானியல் அம்சங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டு அவை பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் உறுப்பினர்கள் மற்றும் நிபுணர்களுக் கிடையே தொலைக்காட்சி விவாதங் களும் கலந்துரையாடல்களும் நடத்தப் பெற்று கீழ்வரும் முடிவுகள் எடுக்கப் பட்டன.
* சந்திரக் கணக்குப்படி இஸ்லா மிய மாதங்களின் தொடக்கத்தை நிர்ணயிக்க வானியல் கணக்கீட்டை (Calculation) பயன்படுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. உலகில் எங்கா வது பிறை தென்படுவதற்குரிய சாத்தி யக் கூறு கவனத்தில் கொள்ளப்படும்.
* சந்திரக் கணக்குப்படி இஸ் லாமிய நாள்காட்டியை நிர்ணயிக்கும் போது ஒழுங்கு முறை மரபுப்படி மேற்கோளாகக் காட்ட ஓர் இடம் பயன்படுத்தப்பட வேண்டும். அகில உலக தேதி எல்லைக் கோடு (International Date Line) அல்லது கிரீன்விச் இடைநிலை நேரம் (Green wich Mean Time) பயன்படுத்தப் படலாம்.
விளக்கம் :*
தலைப்பிறை (நேர்கோட்டில் வரும் நேரம்) என்பது சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சூரியன் பூமி நேர்கோட்டைக் கடக்கும் நேரம் ஆகும். இந்த நேரம் வெகுத் துல்லியமாக வானியல் கணக்கீட்டின் (Calculation) மூலம் நிர்ணயிக்க முடியும்.
* நன்பகல் 12.00 (GMT) மணிக்கு முன் நேர்கோட்டில் சந்திரன் வருமானால் தலைப்பிறையை வட அமெரிக்காவில் இரவு கழியும் முன் (கால நிலை அனுமதிக்குமானால்) உலகில் ஏதேனும் ஓரிடத்தில் பார்ப்பதற்குப் போதிய அவகாசம் கிடைக்கும்.
நன்றி : MUSLIM INDIA Sept. 2006.
தமிழாக்கம் : H.அப்துஸ்ஸமத்
இஞ்சினீயர். சாத்தான்குளம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக