-
கிரகணத் தொழுகை
அடுத்து கிரகணத் தொழுகையை தலைப் பிறையோடு சம்பந்தப்படுத்தி மூன்று பக்கங்களை நிரப்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு கிரகணங்களைப் பற்றிய தெளிவான ஞானம் இல்லாததால் இவ்வாறு எழுதியுள்ளார்களோ என்று எண்ணவும் முடியவில்லை. காரணம் அவர்களது ஆய்வில் வானியல அறிஞர்களும் (?) இடம் பெற்றதாக அறிவித்துள்ளார்கள். கிரகணங்கள் சூரியன், சந்திரன், பூமி இந்த மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது ஏற்படுவதாகும். சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ அதிகபட்சம் சில மணித்துளிகளே நீடித்து இருக்கும். அமாவாசையை கிரகணங்களுடன் ஒப்பிட்டு இருந்தாலும் சிறிதாவது பொருத்தமாக இருக்கும். பிறை அப்படியல்ல.
தலைப் பிறை வெளியானதிலிருந்து 29 நாட்களுக்குப் பின்னரே பிறை மறைந்து மீண்டும் அமாவாசை ஏற்படும். எனவே ஒரு சில மணித் துளிகள் இடம் பெறும் கிரகணத்தோடு ஒரு மாதத்திற்கு நிலைத்து நிற்கும் சந்திரனை எந்த எண்ணத்தோடும் ஒப்பீடு செய்தார்களோ தெரியவில்லை. ஒரு சில மணித்துளிகளே இடம் பெறும் கிரகணம் எந்த நாட்டில் காணப்படுகிறதோ அங்கு மட்டுமே கிரகணத் தொழுகை தொழ வேண்டும். மற்ற பகுதிகளில் கிரகணம் தெரியவும் செய்யாது. அப்பகுதிளில் தொழ வேண்டியதுமில்லை.
ஆனால் தலைப் பிறைக்கும் கிரகணத் தொழுகை சட்டத்தைச் சொன்னது மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது என்று சொல்வார்களே, அது போன்றதாகும். தலைப்பிறையை கிரகணத்தோடு ஒப்பிட்டு இவர்களோடு இருக்கும் வானியல் அறிஞர்கள்(?) தவிர வேறு வானியல் அறிஞர்கள் ஒருபோதும் கூறமாட்டார்கள். உதாரணமாக சவூதியில் 6.30 மணிக்கு பிறைப் பார்த்ததாக வைத்துக் கொள்வோம். அப்போது இந்தியாவில் இரவு 9 மணி சவூதிக்காரர்கள் 6.30 மணிக்கு பிறைப் பார்த்ததாக வைத்துக் கொள்வோம். அப்போது இந்தியாவில் இரவு 9 மணி. சவூதிக்காரர்கள் 6.30 மணிக்கே பிறையைக் கண்ட ரமழான் மாதத்தை அடைந்துள்ளதை அறிகிறார்கள். ஆனால் இந்தியாவில் உள்ள நாம் மாலை 6.30 மணிக்கு இரவில் நுழைந்தாலும் பிறை தெரியாததால் ரமழான் மாதத்தை அடைந்து விட்டோம் என்பதை அறியாமலேயே அந்த ரமழான் இரவில் நுழைகிறோம். இரவு 9 மணிக்கு சவூதியில் பிறை கண்ட தகவல் கிடைத்தவுடன், நாமும் அந்த ரமழான் மாதத்தின் முதல் இரவில் இருப்பதை உணர முடியும். காரணம் அமாவாசையாக இருந்து 2.30 மணி நேரத்தில் திடீரென்று பிறை பிறந்து விடவில்லை. பிறை பிறந்து கண்ணுக்கு தெரியாமலிருந்து பின்னரே கண்ணுக்கு தெரிய வருகிறது.
எனவே இந்தியாவில் 6.30 மணிக்கு பிறை பிறந்துள்ளதை பார்க்க முடியாமல் அந்த இரவில் நுழைந்து விட்டோமே அல்லாமல், பிறை பிறக்காத நிலையில் நுழையவில்லை. அந்த இரவின் சுபுஹு சாதிக் கரை சஞ்சரித்துக் கொண்டிருக்கும் எல்லா நாடுகளும், அவர்கள் பிறையை பார்க்காவிட்டாலும் ரமழானின் முதல் இரவில் இருப்பதை சவூதியிலிருந்து பிறை தகவல் கிடைத்தவுடன் அறிந்து கொள்கிறார்கள். இப்போது இந்த மாலை 6.30 மணிக்கும் சுபுஹு சாதிக் நேரத்திற்கும் இடைப்பட்ட நாடுகளிலுள்ள மக்கள் அனைவரும் ரமழானின் முதல் இரவில் இருந்தாலும் அவர்கள் சஹர் செய்து நோன்பு ஆரம்பிக்கும் நேரம் மாறுபடவே செய்யும்.
சுபுஹு சாதிக் நேரத்திற்கு மிகச் சமீபமாக இருப்பவர்கள் உடனடியாக சஹர் செய்வார்கள். அதிலிருந்து தொடர்ந்து ஒரு மாதத்திற்கு சஹர் செய்யும் நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கும். அவர்கள் சஹர் செய்யும் போது இந்தியருக்கு இரவு 9 மணி . சவூதிகாராகளுக்கு மாலை 6.30 மணி. அதை அடுத்து அடுத்து சமீபமாக இருப்பவர்கள் சஹர் செய்வார்கள். இந்த வரிசைப்படி இந்தியர்கள் 71\2 மணிநேரத்திற்குப் பின் சஹர் செய்வார்கள். சவூதிக் காரர்கள் சஹர் செய்வது 10 மணி நேரத்திற்கு பிறகு இடம் பெறும். இதே வரிசையில் ஷஃபானின் கடைசிப் பகுதியில் இருந்தவர்கள் ரமழான் முதல் இரவில் நுழைந்து சஞ்சரித்து சஹர் நேரத்தை அடையும்போது அவர்கள் சஹர் செய்வார்கள்.
ஆக ரமழான் பிறை தெரிந்ததிலிருந்து சஹர் செய்வது 24 மணி நேரமும் தொடர்ந்து நடைபெற ஆரம்பிக்கும் . முதலில் சஹர் செய்தவர்கள் +131\4 மணி நேரம் கழித்து நோன்பு திறப்பார்கள். அதிலிருந்து நோன்பு திறப்பதும் ஒரு மாதத்திற்கு தொடர் நிகழ்ச்சியாக இருக்கும். ஆக ரமழான் முழுவதும் இந்த தொடர் ஓட்டம் இடம் பெற்றுக் கொண்டே இருக்கும். இந்த நிலையில் முதல் பிறையை கிரகணங்களோடு போய் ஒப்பிடடு தாங்களும் குழம்பி மக்களையும் குழப்பியிருக்கிறார்களே இது இறையச்சம் உடைய செயல்தானா?
இஸ்லாமிய மாதக் கணக்குப்படி மாதத்தின் முதல் நாளின் ஆரம்பம் இரவாகவும், நாளின் பிற்பகுதியே பகலாகவும் இருக்கும், என்ற சாராதண அறிவு கூட இந்த தவ்ஹீத் மவ்லவிகளுக்கு இல்லையே. அல்குர்ஆனின் எண்ணற்ற வசனங்கள் இரவை முற்படுத்தியும் பகலை பிற்படுத்தியும் (லைலிவன்னஹார்) குறிப்பிடுவதை இந்த தவ்ஹீத் மவ்லவிகள் அறியாதவர்களா? (பார்க்க : 2:164,274, 3:27,190, 6:13, 7:54, 10:6,67, 13:3,10, 14:33, 16:12, 17:12, 20:130, 21:20,33,42, 22:61, 23:80, 24:44, 25:62, 30:23) அந்தோ கைசேதம்!
ரமழான் பிறை கண்ட செய்தி கிடைத்தவுடன் ஷஃபான் இறுதிப் பகலில் இருக்கும் லண்டனிலும், அங்காரா (அமெரிக்கா)விலும் நோன்பு நோற்க ஆரம்பிக்க வேண்டும் என்று கற்பனை செய்துள்ளார்களே? ரமழான் தலைப் பிறை பிறந்தவுடனேயே ரமழானின் பகல் எப்படி ஏற்படமுடியும் என்ற சாதாரண பாமர அறிவு கூட இல்லாமலா இவ்வளவு பெரிய ஹிமாலய ஆய்வை மேற்கொண்டார்கள்? இந்த நிலையில் உலகம் முழுவதும் ஒரே நாளில்பிறை என்றால் சிலருக்கு 28 நாட்களே நோன்பு கிடைக்கும் என்று வேறு அதிகப் பிரசங்கிததனமாக மக்களை குழப்பி இருக்கிறார்கள். உண்மையை உணர்ந்து அவர்கள் வாக்களித்தது போல் சத்தியத்தை ஏற்பார்கள் என்றே எதிர் பார்க்கின்றொம்.
அரஃபா நோன்பு
பூமியின் சுழற்சியின் ஞானத்தை அறியாமலேயே அரஃபா நோன்பையும் போட்டுக் குழப்பி இருக்கிறார்கள். ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் இருக்கும் அந்த நேரநநதந்திலேயே உலகில் மற்றப் பகுதிகளில் இருப்பவர்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று யாரும் சொன்னார்களோ? அல்லது இவர்களாக கற்பனை செய்து கொண்டார்களோ? நாம் அறியோம்.
ஆனால் துல்ஹஜ் 9-ல் உலகில் அஃரபா அல்லாத பகுதிகளில் இருப்பவர்கள் அரஃபா நோன்பு நோற்பது சுன்னத்து என்பதே நாம் அறிந்த உண்மையாகும். இந்த தவ்ஹீத் மவ்லவிகளின் கணிப்புப்படி இந்தியாவில் இருப்பவர்கள் துல்ஹஜ் 10-ல் தான் அரஃபா நோன்பு நோற்பார்கள். இது தவறு என்று தான் சுட்டிக்காட்டி இருக்க முடியும். உண்மையும் அதுதூன். மற்படி உலகின் மற்ற பகுதிகளில் இருப்பவர்கள் பிறை 9-ல்இயற்கையாகவே அவர்களுடைய சஹர் நேரத்தில் நோன்பை திறப்பார்கள்.
உதாரணமாக இந்தியாவில் அரஃபா நோன்பிற்காகக அதிகாலை 4.30-க்கு சஹர் செய்யும் போது.ஹாஜிகள் அரபிய நேரப்படி இரவு 2-மணிக்கு மினாவில் இருப்பார்கள். இந்தியர்கள்ள நோன்ப திறக்கும்பொழுது ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் மாலை 3.30 மணியளவில் இருப்பார்கள். இதே போல் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களுடைய நேரப்படி அரஃபா நோன்பை நோற்பார்கள்.
ஆக நேர வித்தியாசம் இருக்குமே அல்லாமல் உலகில் உள்ள அனைவரும் ஒரே நாளில் துல்ஹஜ் பிறை 9-ல் தான் நோன்பு நோற்பார்கள். இவர்களின் தவறான ஆய்வுக் கணிப்பின்படியே துல்ஹஜ் 10-ல் நோன்பு நோற்க ஹராமான நாளில் அரஃபா நோன்பை நோற்று, துல்ஹஜ் 11-ல் பெருநாள் கொண்டாடும் பரிதாப நிலை ஏற்படும் என்பதை உணர்வார்களாக. அன்றைய காலத்தில் மதீனாவில் இருந்தவர்கள், மக்காவில் என்றைக்கு அரஃபா என அறிந்து கொண்டு நோன்பு இருக்கவில்லை. தாங்களாக பிறைப் பார்த்து தீர்மானித்தார்கள் என்பது உண்மைதான், அதுமட்டுமல்ல, அன்று மக்காவில் என்றைக்கு அரஃபா என்று உடனடியாக சுடச்சுட அறிந்து கொள்ளும் வாய்ப்பும் இருக்கவில்லை என்பதை இந்த தவ்ஹீத் மவ்லவிகள் உணர வேண்டும். இன்று உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் அரஃபா நிகழ்ச்சியையும், அதன் தினத்தையும் தங்கள் வீடுகளிலிருந்து கொண்டே தொலைக்காட்சிப்பெட்டியில் பார்த்து உடனடியாக அறிந்துக் கொள்கிறார்களே! இதற்கு என்ன சட்டம்? அன்றைக்கு இருந்ததுபோல் ஹஜ்ஜுக்கு கணவருடன் சென்றவர்கள் திரும்பி வந்து தனது கணவர் இறந்துவிட்ட செய்தியை சொன்ன பின்னரே “இத்தா” இருப்பேன் என அடம்பிடிக்கும் பெண்ணைப் போல் இந்த தவ்ஹீத் மவ்லவிகளும் அடம் பிடிக்கிறார்களா?
இத்தனை மவ்லவிகளும் வானியல் அறிஞர்களும்(?) பல தினங்கள் செலவிட்டு செய்த ஆய்வில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற போக்குத்தான் காணப்படுகிறது. எழுதும் விஷயத்தின் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொண்டு ஆய்வு செய்ததாக தெரியவில்லை. பக்கம் 59-ல் “அஃரபா நோன்பு” என்ற தலைப்பில் “சுபுஹு” தொழுத பின் முஜ்தலிபாவிலிருந்து புறப்பட்டு அரஃபாவிற்கு வருவார்கள் என்று எழுதியிருக்கிறார்கள். அண்ணன் சொன்னால் அதுவே வேதவாக்கு என்று நம்பிச் செயல்படும் தம்பிமார்களும் அதிகமாகவே இருக்கிறார்கள். அவர்கள் ஹஜ்ஜுக்குப்போகும் வாய்ப்புக் கிடைத்தால் பிறை 8-ல் மினாவில் தங்கி பிறை 9 அதிகாலை மினாவிலிருந்து அரஃபா மைதானம் போவதை மறுத்து, அண்ணன் இவ்வாறுதான் எழுதியுள்ளனர், அதுதான் சரி; எனவே அண்ணன் எழுதியுள்ளதைப் போல் முஜ்தலிபாவில் பிறை 8-ல் தங்கி அங்கிருந்து சுபுஹு தொழுத பின் புறப்பட்டு அரஃபாவுக்கு வோவதே உண்மையான மார்க்கம் என்று கூறி செயல்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
நாமே தீர்மானிக்கலாமா?
இந்தத் தலைப்பில் கீழ்க்கண்ட ஹதீஸை எடுத்து எழுதி விளக்கம் அளித்துள்ளார்கள்.
நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாளில் தான் நோன்பு, நீங்கள் முடிவு செய்யும் நாளில் தான் நோன்புப் பெருநாள்; நீங்கள் முடிவு செய்யும் நாளில் தான் ஹஜ்ஜுப் பெருநாள் என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல் : திர்மிதி.
சென்ற ஆண்டு வாகனக் காரர்களின் ஹதீஸை சரியாக நேராக விளங்கியிருந்த இந்த மவ்லவிகள் இந்த ஹதீஸை மட்டும் ஆதாரமாக வைத்துத்தான் அதனடிப்படையில் அந்த அந்தப் பகுதி மக்கள் அவர்கள் விரும்பிய தினத்தில் நோன்புப் பெருநாள்; நீங்கள் முடிவு செய்யும் நாளில் தான் ஹஜ்ஜுப் பெருநாள் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி) நூல்: திர்மிதி.
சென்ற ஆண்டு வாகனக் காரர்களின் ஹதீஸை சரியாக நேராக விளங்கியிருந்த இந்த மவ்லவிகள் இந்த ஹதீஸை மட்டும் ஆதாரமாக வைத்துத்தான் அதனடிப்படையில் அந்த அந்தப் பகுதி மக்கள் அவர்கள் விரும்பிய தினத்தில் நோன்பு ஆரம்பிக்கலாம், பெருநாள் கொண்டாடலாம் என்று வேறுபட்ட நாட்களில் செயல்படுவதை நியாயப் படுத்தி எழுதி பிரசுரம் வெளியிட்டிருந்தனர். ஆனால் வாகனக்காரர்கள் பற்றிய ஹதீஸில் புதிய தலைகீழ்க் கண்டுபிடிப்பை கண்டு பிடித்தவுடன், இந்த ஹதீஸிற்கு தற்போது புது விளக்கம் கொடுத்துள்ளனர். இதன் மூலம் இவர்கள் ஏதோ ஒரு குறிக்கோளுடன் செயல்படுவதை வெளிப்படுத்துகின்றனர். ஆயினும் அன்றும் தவறான விளக்கத்தையே தந்தனர். இன்றும் தவறான விளக்கத்தையே தந்திருக்கின்றனர். உண்மையில் இந்த ஹதீஸ் கூறும் கருத்து இப்படி இருந்தால்தான் குர்ஆன் , ஹதீஸிற்கு முரண்படாது என நாங்கள் கருதுகிறோம்.
பிறை விஷயத்தில் ஆளுக்கு ஆள், ஊருக்கு ஊர் போட்டுக் குழப்பிக்கொண்டு சர்ச்சையில் ஈடுபட்டு கருத்து வேறுபாடு கொண்டு சிதறுண்டு விடாதீர்கள். பிறையைப் பார்த்து தீர்மானிப்பதாக இருந்தாலும், கணித்துத் தீர்மானிப்பதாக இருந்தாலும், வெளியிலிருந்து கிடைக்கும் செய்தி கொண்டு தீர்மானிப்பதாக இருந்தாலும், அப்படி முடிவு செய்யும் உரிமை உங்களுக்கு உண்டு. வீண் சண்டை சச்சரவை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றே விளங்க முடிகிறது.
அல்முபீன்: அப்படித் தீர்மானிப்பதில் “நீங்கள் தீர்மானிக்கும் நாள்” என்பது ஒட்டு மொத்த சமுதாயமும் சேர்ந்து தீர்மானிப்பது என்று விசித்திரமான விளக்கமும் தரப்படுகிறது.
பிறை சம்பந்தமாக ஒட்டு மொத்தமாகத் தீர்மானிக்க முடியாது. நோன்பை விட வேண்டும் (28 நோன்பு வரும்) என்பது முன்னரே நிரூபிக்கப்பட்டுள்ளது என்று பக்கம் 66ல் குறிப்பிட்டுள்ளனர்.
அந் நஜாத்: ஆனால் அவர்கள் ஹிமாலய முயற்சி எடுத்து ஆய்வு செய்து நிரூபித்தது தரைமட்டமாக்கி விட்டது என்பதை உணர்ந்திருப்பார்கள். ஷஃபானின் இறுதிப் பகலை ரமழானின் முதல் பகலாக தவறாக கணித்ததின் பேரில்தான் 28 நாட்கள் நோன்பும் என்றும், அகில உலகமும் ஒரே நாளில் நோன்பு சாத்தியமில்லை என்றும் தீர்மானித்தார்கள். இப்போது அகில உலகமும் ஒரே நாளில் ஓர் இரவு, ஒரு பகலுக்குள் வந்துவிடும் என்பதை உணர்ந்திருப்பார்கள். எனவே “நீங்கள் தீர்மானிப்பது” என்று நபி(ஸல்) கூறியிருப்பது ஒட்டு மொத்த சமுதாயம் சேர்ந்து தீர்மானிப்பதுதான் என்பதை விளங்கியிருப்பார்கள்.
ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தில் யாருடைய முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவது என்ற கேள்வி இங்கு எழுகிறது. பிறை பற்றிய ஆய்வில் வருடம் சுமார் 355 நாளும், ஒவ்வொரு மாதத்தின் தலைப் பிறையையும் ஆக 12 மாதங்களின் தலைப்பிறையையும் முறையாக அவதானித்து வருவது யார்? கணித்து வருவது யார்? என்று பார்த்தால் இன்று சவூதி அரேபியாவில் அந்த முயற்சிகள் நடைபெற்று வருவதை அறிகிறோம். அது மட்டுமல்ல. ஹஜ் கடமையை நிறைவேற்ற உலகின் முஸ்லிம்கள் அனைவரும் அங்குதான் செல்ல வேண்டியுள்ளது. அவர்கள் ஒரு வேளை பிறையைத் தவறாக கணித்திருந்தாலும் கூட அவர்கள் கணிப்பின்படி தான். ஹஜ் கிரியைகளை நிறைவேற்றும் நிலை உலகின் அனைத்து முஸ்லிம்களுக்கும் உள்ளது. மற்ற பகுதிகளிலுள்ள முஸ்லிம்கள் அதில் எவ்வித மாற்றமும் செய்ய முடியாமல் தான் இருக்கிறார்கள்.
சவூதியில் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட சில அம்சங்கள் காணப்பட்டாலும், மற்ற முஸ்லிம் நாடுகளை விட அதிகமாக ஷரீஅத் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதை யாராலும் மறுக்க முடியாது. எனவே இந்த பிறை விஷயத்தில் அவர்களது முடிவை ஹஜ் கிரியைகளுக்கு உலக முஸ்லிம்கள் ஏற்று நடப்பது போல், ரமழான் பிறை விஷயத்திலும் அவர்களது முடிவை ஏற்று நடப்பதில் தவ்ஹீத் மவ்லவிகள் என்ன குற்றத்தைக் கண்டார்கள் என்பதை விளக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
அல்முபீன்: நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்!
இந்த தலைப்பில் கீழ்க்கண்ட ஹதீஸை எழுதி, மேலும் தங்கள் விளக்கத்தைக் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளனர்.
நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு நாட்களும் நோன்பு நோன்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி) , ஆயிஷா(ரழி), அபூஸயீத்(ரழி), நூல் : முஸ்லிம்.
“உலகமெங்கும் ஒரே பிறை என்று வாதிடுபவர்கள் இந்த ஹதீஸை எடுத்துக் கொண்டு உலகத்தில் ஏதோ ஒரு பகுதியில் பெருநாளாக இருந்தால் உலகம் முழுவதும் நோன்பு வைப்பது ஹராம்” என்று கூறுகிறார்கள்.
உதாரணமாக சவூதியில் பெருநாள் அறிவித்து விட்டால் அதை வைத்துக் கொண்டு இங்குள்ள மக்களிடம் பெருநாள் வந்து விட்டது; பெருநாளில் நோன்பு வைப்பது ஹராம்” என்று கூறி பீதியை ஏற்படுத்துகின்றனர். நமது பகுதியில் பிறையைப் பார்த்துத்தான் நோன்பை விட வேண்டும் என்று உறுதியாக இருப்பவர்கள் கூட இந்த ஹதீஸைக் கேட்டவுடன் ஒரு ஹராமைச் செய்து அல்லாஹ்விடத்தில் குற்றவாளியாகி விடக் கூடாதே என்று தடுமாற ஆரம்பித்து விடுகிறார்கள்.
உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் என்று கூறுவது மார்க்க அடிப்படையிலும், அறிவியல் அடிப்படையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத அபத்தமான வாதம் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளோம்…….
……. அது நாம் இதுவரை எடுத்துக் காட்டிய குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுக்கு மாற்றமானதாக அமைவதுடன் , நாம் ஏற்கனவே கூறியபடி 28 நோன்பு ஏற்படுவதற்கும், கால் நோன்பு, அரை நோன்பு போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கும் வழி வகுத்துவிடும் என்ற அந்த இதழின் 67,68 பக்கங்களில் எழுதியுள்ளனர்.
அந் நஜாத்: அபத்தமான வாதம் யாருடைய வாதம், ரமழான் பிறை தெரிந்தவுடனேயே ரமழான் பகல் தோன்றிய அபத்தம் யாருடையது; ஷஃபானின் கடைசிப் பகலை ரமழான் தலைப்பிறையின் முதல் பகலாக தவறாகக் கணித்துக் குழம்பியது யார்? மக்களைக் குழப்பியது யார்? என்பதை எல்லாம் எங்களின் ஆதாரப்பூர்வமான விளக்கங்களை ஏற்று இப்போது தவ்ஹீது மவ்லவிகள் மக்களிடம் மன்னிப்புக் கேட்க முன் வருவார்கள் என நம்புகிறோம்.
ரமழான் முடிந்து ஷவ்வால் பிறை உலகின் எப்பகுதியில் காணப்பட்டாலும் அதைத் தெரிந்து கொண்ட பின்னர், விடியும் பகலில் உலகின் எப்பகுதியில் நோன்பு நோற்றாலும் இந்த ஹதீஸின்படி தவறுதான்; ஹராம்தான். அதில் அணுவளவும் சந்தேகம் இல்லை. ஆனால் பிறை தகவல் வரும் போது ரமழானின் இறுதிப் பகலில் நோன்பு நோற்ற நிலையில் இருப்பவர்கள், அந்த நோன்பைத் தொடர்ந்து அவர்களுடைய மஃரிபுடைய நேரத்தில் திறக்க வேண்டும் .அவர்கள் இப்போது தான் ரமழானின் இறுதிப் பகலை முடித்து ஷவ்வாலின் முதல் பிறை இரவை அடைகிறார்கள். அந்த இரவு முடிந்து விடியும் காலை அவர்களுக்குப் பெருநாளாகும்.
தகவல் தொடர்பு அதிகரித்து உலகின் எப்பகுதியிலிருந்தாவது பிறைச் செய்தி கிடைத்த பின்னரும் எங்கள் பகுதியில் பிறை கண்டால் தான் நோன்பை விடுவோம், என்று ஷவ்வால் முதல் நாள் நோன்பு நோற்பவர்கள், ஹஜ்ஜுக்கு கணவனுடன் சென்றவர்கள் திரும்பி வந்து தனது கணவர் இறந்த செய்தியை அறிவித்தால் தான் அதை ஏற்று “இத்தா” இருப்பேன்; இந்த ஃபோன் செய்தியை ஏற்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் பெண்ணின் நிலையிலேயே இருக்கிறார்கள். முகல்லிது மவ்லவிகள் “ஜும்ஆ (குத்பா) பிரசங்கத்தை தமிழ் பேசும் மக்களுக்கு மத்தியிலும் அரபியில்தான் படிப்போம்” (அரபியில் பிரசங்கம் செய்வதற்குத்தான் அவர்களுக்குத் தெரியாதே) அன்று போல் இன்றும் வாளையோ, தடிக்கம்பையோ, பிடித்துக் கொண்டு தான் அரபியில் என்றோ எழுதி வைத்துள்ளதை பார்த்துப் படிப்போம் என்று பிடிவாதம் பிடிப்பதைப் போல், இந்த பிறை விஷயத்தில் இந்த தவ்ஹீத் மவ்லவிகள் பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்பதே உண்மையாகும். நாம் முன்பே குறிப்பிட்டது போல் எப்படி ஐயருக்காக அமாவாசை காத்திருக்காதோ, அதே போல் இந்த மவ்லவிகளுக்காக ஷவ்வால் பிறை காத்திருக்காது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்களாக.
அறிவியல் முடிவு தீர்வாகுமா? என்ற வினாவுடன் கீழ்வரும் ஹதீஸை எடுத்து எழுதியுள்ளனர்.
நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம். வானியலையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும். அதாவது சிலவேளைளள 29 நாட்களாகவும், சில வேளை 30 நாட்களாகவும் இருக்கும். (புகாரீ)
இந்த ஹதீஸில் “வானவியலை அறியமாட்டோம்” என்று மொழி பெயர்த்திருப்பது தவறு என்பதை நிரூபிக்க “வலாநஹ்ஸுபு” என்பதின் பொருளை விளக்க எண்ணற்ற குர்ஆன் வசனங்களை எழுத்து எழுதியுள்ளார்கள். ஓரிடத்தில் கூட வானவியலைப் பற்றி வரவில்லை. நபி(ஸல்)காலத்தில் வானவியலைப் பற்றிய பேச்சுக்கெ இடமில்லை என வாதிட்டுள்ளனர். தங்கள் வாதத்தை நிலைநாட்ட துப்பாக்கி, நடத்துனர் என்றெல்லாம் எழுதி விளக்கம் அளித்துள்ளனர்.
2:185 வசனத்தில் “எனவே உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ” என்ற பதம் ஏன் இடம் பெற்றுள்ளது? அது இல்லாமலும் பொருள் வருகிறதே என்றெல்லாம் எழுதி பக்கம் பக்கமாக ஆய்வு நடத்தித் தங்களின் வாதத்தை நிலை நாட்டியவர்கள், இங்கு பிறையைப் பற்றி நபி(ஸல்) சொல்லும் போது, ஏன் நாம் உம்மி சமுதாயம்; நாம் எழுதுவதை அறியமாட்டோம்; நமக்கு கணக்கும் தெரியாது என்ற இந்த மூன்று குறைபாடுகளையும் குறிப்பிட வேண்டும். இவற்றை குறிப்பிடாவிட்டாலும் மாதம் சில வேளை 29 சில வேளை 30 என்ற பொருள் பூரணமாக வரத்தானே செய்கிறது என்று விரிவாக முறையாக ஏன் ஆய்வு நடத்தவில்லை என்பதுதான் நமது கேள்வி.
இங்கும் அவர்கள் அதுபோல் முறையாக ஆய்வு நடத்தி இருந்தால் ஒரு வேளை அவர்களுக்கும் உண்மை புலப்பட்டிருக்கும். பொதுவாக எந்த மொழியிலும் விஞ்ஞான வளர்ச்சி ஏற்படுவதற்கு முன்னர் ஹிஸாப் – கணக்கு – என்ற பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்று கம்ப்யூட்டர், தொழில் நுட்ப, விஞ்ஞான, வானியல் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி இருந்தாலும் தமிழில் அதற்கு கணினி – கணக்கிடும் கருவி என்றே குறிப்பிடுகின்றனர்.
நபி(ஸல்) அவர்கள் பிறையைப் பற்றி குறிப்பிடும்போது அதாவது அதன் எண்ணிக்கை பற்றி
குறிப்பிடும் போது இவற்றைக் கூறி இருப்பதால் நிச்சயமாக அது பற்றிய அறிவைப் பற்றித்தான் குறிப்பிட்டிருக்க முடியும். மற்றபடி அவர்கள் எடுத்து எழுதியுள்ள எது பற்றியும் அந்த இடத்தில் நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருக்க முடியாது. நபி(ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் எக்கருத்தை வெளியிட இந்த மூன்று குறைபாடுகளைப் பயன்படுத்தியுள்ளார்களோ அதுவே இன்று பிறைப் பற்றிய வானியல் என்று அறியப்படுகிறது. மாதத்தின் எண்ணிக்கைப் பற்றிய இந்த ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் “இன்னா உம்மதுன் உம்மியத்துன்”, “லா நக்துபு” “வலா நஹ்ஸுபு” என்ற மூன்று அரபி சொற்றொடர்களையும் ஏன் பயன்படுத்தினார்கள். அந்த மூன்று சொற்றொடர்களையும் ஏன் பயன்படுத்தினார்கள்? அந்த மூன்று சொற்றொடர்கள் இல்லாவிட்டாலும் மாதத்தில் 29 நாட்களும் சில வேளை 30 நாட்களும் இருக்கும் என்ற பொருள் அவர்களின் கை சைகை மூலமாகவே பூரணமாக வெளிப்படுகிறதே? என்பதை 2:185-ஐப் ஆராய்ந்து பார்க்கட்டும். அப்போது பின்னால் வளரவிருக்கும் வானியல் அறிவைப் பற்றித்தான் நபி(ஸல்) அங்கு குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பதை அவர்களும் புரிந்து கொள்ள முடியும். அல்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இது போன்ற பல முன் அறிவிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. இது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. முறையாக இவர்கள் ஆய்வு செய்ய தவறியதால்தான் அந்த உண்மை இவர்களுக்குப் புலப்படவில்லை. அல்லது அவர்கள் ஏற்கனவே முடிவு செய்த வைத்திருந்த கருத்தை ஆய்வு என்ற பெயரில் மக்களிடம் திணிக்க எண்ணி இருந்தால் 2:185 ஆய்வு செய்தது போல் இந்த சொற்றொடர்களையும் ஆய்வு செய்தால் அது தங்கள் திட்டத்திற்குப் பாதகமாக முடியும் என்ற எண்ணத்தில் தவிர்த்திருக்கலாம்.
அவர்கள் “இன்னா உம்மத்துன் உம்மியத்துன்” “வாநக்துபு” “வலாநஹ்ஸுபு” என்ற மூன்று சொற்றொடர்களையும் அவர்களது கண்ணோட்டத்தில் ஆய்வு செய்திருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால் ஏற்கத்தக்க விதத்தில் அவர்களது ஆய்வு இல்லை. மாதம் 29-லும் முடியும், 30-லும் முடியும். இதை அந்த உம்மி மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அவர்கள் உம்மி – எழுதப்படிக்கத் தெரியாது – கணக்கும் தெரியாது என்பது அந்த மக்களுக்கே நன்கு தெரியும். இந்த நிலையில் அதை சொல்லிக் காட்டி அவர்களைச் சிறுமைப்படுத்தி, மாதம் 29-லும் முடியும். 30-லும் முடியும் என்று போதிக்க அவசியம் என்ன வந்தது? அதிலும் கை சைகை மூலமே புரிய வைத்த பின் இந்த குத்தல் பேச்சின் அவசியம் என்ன? ஒரு நொண்டி இருக்கிறார். அவரை ஓரிடத்திற்கு அனுப்பி வைக்கிறோம் என்று வைத்துக் கொள்வொம். எப்படிச் சொல்லி அனுப்பி வைப்போம்? நீ நொண்டி; அதனால் ஒரு ரிக்ஷாவை வைத்துக் கொண்டு போய் வா” என்று சொல்வோமா? அல்லது “ஒரு ரிக்ஷாவை வைத்துக் கொண்டு போய்வா” என்று சொல்வோமா? ‘நொண்டி’ என்று சொல்வது அவரது உள்ளத்தை நோகச் செய்யும், அவரை அவமரியாதைப் படுத்தும் சொல் இல்லையா? அதே போல் ஒரு குருடர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். “நீ குருடு; அதனால் இப்படி நட” என்பது மனிதாபிமான பேச்சா? அல்லது பொதுவாக “நீ இப்படி நட” என்று நா நயமாக பேசுவது அழகா? நபி தோழர்களின் தற்குறி நிலையை நபி(ஸல்) தேவையில்லாமல் அவர்களை இழிவுபடுத்தும் வகையில் சுட்டிக் காட்டி இருப்பார்களா? இது அவர்களின் தூதுத்துவ பணிக்கு அழகாக இருக்க முடியுமா? இப்படி ஆய்வு செய்வது நபி(ஸல்) அவர்களையும், நபி தோழர்களையும் அவமரியாதை செய்யும் செயல் என்பதை எப்படி இந்த தவ்ஹீத் மவ்லவிகளால் புரிய முடியாமல் போனது? எனவே நிச்சயமாக அவர்கள் ஆய்வு செய்திருப்பது போல் நபிதோழர்களின் பாமரத் தன்மையை அனாவசியமாக சுட்டிக் காட்டி இருக்க முடியாது. அது அவர்களுக்குத் தகுமானதுமல்ல. எனவே நமது நிலை இன்று இதுதான்; இப்படித்தான் நம்மால் செயல்பட முடியும். எழுதப் படிக்கத் தெரிந்த (கணினி போன்று) கணக்கிடத் தெரிந்த சமுதாயம் உருவாகும் போது அதற்கேற்ப அவர்கள் நடந்து கொள்ள முடியும் என்ற கருத்தில்தான் நபி(ஸல்) அவர்கள் அந்த மூன்று சொற்றொடர்களையும் உபயோகித்திருக்க முடியும் என்று எண்ணுவதே நபி(ஸல்) அவர்களையும், அவர்களது தோழர்களையும் கண்ணியப்படுத்தும் அழகிய ஆய்வாகும். அவர்களின் ஆய்வுக்குழுவில் இடம் பெற்ற ஒருவரை ஆசிரியராகக் கொண்ட மாத இதழின் நவம்பர் 1999 இதழின் 2-ம் பக்கத்தின் இதே ஹதீஸ் இடம் பெற்றுள்ளது; அது வருமாறு:
“நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம். விண்கலையும், அறிய மாட்டோம். எனவே மாதம் என்பது இப்படியும், அப்படியும் இருக்கும். அதாவது சில வேலை 29 நாட்களாக சில வேளை 30 நாட்களாக இருக்கும். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம்.
ஆய்வுக் குழுவினரின் ஆய்வுக்கும், அதில் இடம் பெற்ற ஒருவரின் ஆய்வுக்கும் ஏனிற்த முரண்பாடு? இதிலிருந்தே ஹதீஸ்களை தங்கள் நோக்கத்திற்காக வளைக்க முற்பட்டிருக்கிறார்களோ? என ஐயமுற வேண்டி இருக்கிறதே! மேலும் ‘விண்கலையையும்’ என சரியாக மொழி பெயர்த்துள்ள அந்த மாத இதழின் இன்னொரு வினோதம் பாருங்கள். பூமி தட்டையாக இருந்தால் உலகில் எங்கு பிறை பார்த்தாலும் அதே நாளில் ஏற்றுக் கொள்ளலாம் என்று ஓர் அதிஅற்புத கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர். பாவம்! பூமி தட்டையாக இருந்தால் இரவு பகலே ஏற்படாது. இவர்கள் எப்படி பிறை பார்ப்பார்கள்? எப்படி நோன்பு நோற்பார்கள்? சிறிதும் சிந்திக்காமலேயே தங்களது ஆய்வுகளை வெளிப்படுத்துகிறார்களே?
இன்றைய இந்த நவீன யுகத்தில் மனிதன் சந்திரனுக்கு நேரடியாகச் சென்று திரும்பிய பின்னர், வேறு கோள்களுக்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில், சந்திரனின் சுழற்சி பற்றி மிகத்துல்லியமாக தீர்மானிக்க முடியாமலிருக்கிறான் என்று எண்ணுவதே தவறாகும். எதிர் வரும் ஒரு நூற்றாண்டில் எத்தனை சூரிய கிரகணங்களள் எந்தெந்த தேதியல் சம்பவிக்கும், சந்திர கிரகணங்கள் எந்தெந்த தேதியில் சம்பவிக்கும், அவை எவ்வளவு நேரம் நீடிக்கும், எந்தெந்த நாடுகளில் அவற்றைப் பார்க்க முடியும்? என்பதை எல்லாம் மிகத்துல்லியமாக கணக்கிடும் காலக்கட்டத்தில், அதாவது சூரிய ஓட்டம், சந்திர ஓட்டம், பூமியின் ஓட்டம் இந்த மூன்றையும் துல்லியமாக கணக்கிடும் இந்தக் காலங்கட்டத்தில் சந்திர ஓட்டத்தை கணித்து அறிவிப்பதை ஏற்க முடியாது என்று கூறுவது 21-ம் நூற்றாண்டின் மிகப் பெரிய ஜோக்காகத்தான் இருக்க முடியும் . ஆனால் சந்தோசம். ஆரம்பத்தில் பிறை சம்பந்தப்பட்ட விவாதங்களில் வானியல் மூலம் சந்திர ஓட்டத்தை துல்லியமாகக் கணக்கிட முடியாது என்று கூறியவர்கள், இன்று துல்லியமாகக் கணக்கிட முடியும் என்று ஒப்புக் கொள்வதில் தான் தவறான கருத்தில் இருக்கிறார்கள். இந்த ஆய்வை நடுநிலையோடு பார்த்தால் அதையும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பிக்கை வைக்கிறோம்.
சூரிய, சந்திர, பூமி இம்மூன்றின் ஒட்டங்களும் அல்லாஹ் நிர்ணயித்தபடி அதனதன் வட்ட வரைகளில் கன கச்சிதமாக சென்று கொண்டிருக்கின்றன. எவரது பார்வையும், அல்லது பார்வையற்ற நிலையும் அவற்றின்ன ஓட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது. இவர்கள் பிறையைப் பார்க்காததால் அது தனது ஓட்டத்தை நிறுத்திவிடப் போவதில்லை. அதைத்தான் அன்றே ஐயருக்காக அமாவாசை காத்திருக்காது என்று கூறி இருக்கிறார்கள். இன்று நாம் இந்த தவ்ஹீது மவ்லவிகளுக்காக தலைப் பிறை காத்திருக்காது என்று கூறுகிறோம்.
நபி(ஸல்) அவர்களின் பிறை சம்பந்தப்பட்ட ஹதீஸில் “மேக மூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக பூர்த்தியாக்குங்கள்” என்ற பகுதியை எடுத்து சிறிது ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். அன்றைய தினம் தலைப்பிறை தோன்றி இருந்தாலும் மேக மூட்டமாக இருப்பதால் பார்க்க முடியாது. அந்த மேக மூட்டம் இல்லை என்றால் மிகத் தெளிவாகப் பார்க்க முடியும். இந்த நிலையிலேயே நபி(ஸல்) அவர்கள் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யச் சொல்கிறார்கள். ஆக மக்களிடையே வீண் சண்டை, சர்ச்சைகள் தோன்றுவதை தவிர்ப்பதற்கே இவ்வாறு உபதேசித்திருக்கிறார்கள். அதாவது ஆகாயத்தில் பிறை இருக்கிறதோ இல்லையோ அது பெரிய விவகாரம் இல்லை. ஆனால் அது கொண்டு மக்களிடையே வீண் பிரச்சினைகளும், சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில்தான் நபி(ஸல்) அவர்கள் எச்சரிக்கையாக இருந்திருக்கிறார்கள். மக்கள் சுமுகமாக இருக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் விஞ்ஞான, வானியல் அறிவு மிகைத்து மிகமிகத் துள்ளியமாக பிறை பிறந்துள்ளதை அறிந்த பின்னரும், அதையும் இந்த தவ்ஹீது மவ்லவிகள் நூற்றுக்கு நூறு சரி என்று ஏற்றுக் கொண்டதன் பின்னரும், அந்தந்த ஊரில் பிறை பார்த்துத்தான் நோன்பை விடுவோம்; பிறை கணிப்பு நூற்றுக்கு நூறு எவ்வித சந்தேகமும் இல்லாமல் சரியாக இருந்த போதிலும் சரியே ஏற்கமாட்டோம் என்று விதண்டாவாதம் செய்வது எவ்வகையைச் சார்ந்தது என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும். இதுதான் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி நடக்கும் முறையா? என்பதையும் சிந்திக்க வேண்டும். இதன் மூலம் சமுதாயத்தில் சண்டை சச்சரவுகளும், பிளவும் ஏற்பட வழி வகுப்பது நபி வழியா? மேக மூட்டத்தில் பிறை மறைந்திருந்தாலும் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்யுங்கள்; சச்சரவு இடாதீர்கள்; பிறை 2-ம், 3-ம் பிறையாக மிகப் பெரியதாக தெரிந்தாலும் அதைக் கொண்டு சச்சரவிடாதீர்கள். அதை தலைப்பிறையாக ஏற்று ஒன்றுபடுங்கள் என்று போதித்த நபி(ஸல்) அவர்கள், இன்று அதி நவீன அறிவுத்திறன் கொண்டு நூற்றுக்கு நூறு சரியாக பிறை பிறந்துள்ளதை கணித்தறிந்த பின்னரும் அதை ஏற்காதீர்கள்; கண்ணால் பார்த்தே செயல்படுங்கள்; அதன் மூலம் சண்டை சச்சரவு வழிவகுங்கள் என்று போதித்திருக்க முடியுமா? சிந்தியுங்கள்.
பிறை இருக்கிறதோ இல்லையோ அதுவல்ல பிரச்சினை, உங்களுக்குள் சச்சரவிட்டுப் பிளவுபடாதீர்கள் என்ற நோக்கில் “நீங்கள் தீர்மானித்தபடி தான் நோன்பு, நீங்கள் தீர்மானித்தபடிதான் நோன்புப் பெருநாள், நீங்கள் தீர்மானித்தபடி தான் ஹஜ்ஜுப் பெருநாள்” என்று கூறிய நபி(ஸல்) அவர்கள் பிறையைக் கண்ணால் பார்த்துத்தான் முடிவு செய்ய வேண்டும், துல்லியமாக கணக்கிட்டு மிகச்சரியாக பிறை பிறந்துள்ளதை அறிந்து கொண்டாலும் அதை ஏற்கக் கூடாது என்ற கருத்தில் வலியுறுத்தி இருக்க முடியுமா? தவ்ஹீத் மவ்லவிகள் முறையாக சிந்திக்க வேண்டும்.
சமுதாய ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு இஸ்லாத்தில் – முஸ்லிம்களில் பிளவுகள் – பிரிவுகள் இல்லை; அனைவரும் முஸ்லிம் என்ற நிலையில் ஓரணியில் ஓரே தலைமையில்தான் செயல்பட வேண்டும்; காட்டுக்குப் போய் மர வேர்களைச் சாப்பிட்டு மரணிக்கும் நிலை ஏற்பட்டாலும் தனித்தனிப் பிரிவுகளில் கண்டிப்பாக இருக்கக் கூடாது என்று நபி(ஸல்) போதித்துள்ளதை நாம் போதித்தால், அதற்கு முரணாக நபி(ஸல்) அவர்களின் போதனைக்கு சுயவிளக்கம் கொடுத்து தனித்தனி பிரிவுகளை நியாயப்படுத்தி வருகிறார்கள் இந்த தவ்ஹீத் மவ்லவிகள். அதே போல சமுதாய ஒற்றுமையைக் குறிக்கோளாகக் கொண்டு பிறை ஓர் இரவு மற்றும் ஒரு பகல் ஆக ஒரு நாளுக்குள்தான் இருக்க முடியும். அதாவது உலகம் முழவதும் ஓரே பிறைதான் என்று நாம் கூறினால், நபி(ஸல்) அவர்கள் அனைறைய கால சூழ்நிலையில் இருந்த ஒரே வழியான பிறை பார்த்து முடிவு செய்யச் சொன்னதை தவறாகப் புரிந்துக் கொண்டு, இன்றும் நவீன கண்டுபிடிப்புகளை புறம் தள்ளி கண்ணால் கண்டே கணக்கிட்டு ஊருக்கு ஊர் வேறுபட்டு பிரிந்து நின்று சச்சரவிட்டுக் கொள்ள வேண்டும் என்று இந்த தவ்ஹீத் மவ்லவிகள் போதிக்கின்றனரே? குர்ஆனும், ஹதீஸும் மக்கள் வேறுபட்டு சண்டை சச்சரவிட்டு, முட்டி மோதிக் கொண்டு காலமெல்லாம் பல பிரிவினர்களாக வீழ்ச்சியின் அதலபாதாளத்தில் என்று இந்த தவ்ஹீத் மவ்லவிகள் கூறுகிறார்களா? அதையாவது தெளிவாக நேரடியாகச் சொல்லட்டும்.
கணித்துக் கொள்ளுமாறு நபி(ஸல்) கூறினார்களா? என்ற கேள்வியை எழுப்பி மயக்கத்தை உண்டாக்கி இருக்கிறார்கள். கணிப்பதற்குரிய கருவிகளும், தொழில் நட்பமும் அன்றில்லாத காலத்தில் நிச்சயமாக நபி(ஸல்) கணித்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்க முடியாதுதான். இது கேள்வியே அல்ல. ஆனால் விஞ்ஞானம், தொழில் நுட்பம், வானியல் அறிவு இவை நிறைந்துள்ள இக்காலக் கட்டத்தில் கணிப்பதை தடை செய்துள்ளார்களா? என்றே சிந்திக்க வேண்டும். நிச்சயமாக அல்லாஹ்வும் தடை செய்ததற்குரிய ஆதாரத்தைத் தர முடியாது; நபி(ஸல்) அவர்களும் தடை செய்த ஆதாரத்தை இவர்களால் தர முடியாது. 2:185 ஆயத்துக்கு தவறான விளக்கம் கொடுத்திருப்பது போல், இவர்களாக சுய விளக்கம் கொடுத்துள்ள ஆதாரங்களை மட்டுமே தர முடியும். அவற்றை ஏற்க வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இல்லை.
கணித்துக் கொள்ளுமாறு நபி(ஸல்) கூறினார்களா? என்ற கேள்வியை எழுப்பி மயக்கத்தை உண்டாக்கி இருக்கிறார்கள். கணிப்பதற்குரிய கருவிகளும், தொழில் நுட்பமும், அன்றில்லாத காலத்தில் நிச்சயமாக நபி(ஸல்) கணித்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்க முடியாதுதான். இது கேள்வியே அல்ல. ஆனால் விஞ்ஞானம், தொழில் நுட்பம், வானியல் அறிவு இவை நிறைந்துள்ள இக்காலக்கட்டத்தில் கணிப்பதை தடை செய்துள்ளார்களா? என்றே சிந்திக்கவேண்டும். நிச்சயமாக அல்லாஹ்வும் தடை செய்ததற்குரிய ஆதாரத்தைத் தர முடியாது; நபி(ஸல்) அவர்களும் தடை செய்த ஆதாரத்தை இவர்களால் தர முடியாது. 2:185 ஆயத்துக்கு தவறான விளக்கம் கொடுத்திருப்பது போல், இவர்களாக சுய விளக்கம் கொடுத்துள்ள ஆதாரங்களை மட்டுமே தர முடியும். அவற்றை ஏற்க வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இல்லை.
அல் முபீன்: சந்திரன் காலம் காட்டி என்று அல்லாஹ் கூறுவது உண்மைதான். இதில் யாருக்கும் இரண்டாவது கருத்து இல்லை. 1999 முதல் தான் சந்திரன் காலத்தை காட்ட ஆரம்பித்துள்ளதா? அல்லது சந்திரனை அல்லாஹ் படைத்தது முதல் காலம் காட்டுகிறதா? என்று சிந்தித்தாலே வானியல் முடிவுப்படி நாட்களைக் கணித்தால்தானே அது காலம் காட்டியாக இருக்க முடியும்! என்ற வாதத்தின் பலவீனத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்று 82-ம் பக்கத்தில் எழுதியுள்ளனர்.
அந் நஜாத்: அல்லாஹ் சந்திரனை படைத்த நாள் முதல் காலம் காட்டியாக இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அது சமயம் ஒரு காலத்தில் மக்கள் அதை அறியாமல் இருந்த காலமும் உண்டு. அதன்பின்னர் அது காலம் காட்டி என்று அறிந்து கொண்ட பின்னரும் துல்லியமாக கணக்கிட முடியாமல் தோராயமாக அல்லது கண்ணால் பார்த்து நாட்களை முடிவு செய்த காலமும் இருந்தது. மேக மூட்டமாக இருந்தால் 30 ஆக பூர்த்தி செய்யுங்கள். பிறை பெரிதாக இருப்பதை வைத்து 2-ம் பிறை 3-ம் பிறை என தர்க்கிக்காதீர்கள்; அது நீங்கள் பார்த்த இரவுக்குரிய பிறைதான் என்றெல்லாம் நபி(ஸல்) அவர்கள் மக்களிடையே எழும் சச்சரவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பது, கணக்கிடுவதில் அன்று மனிதனுக்கிருந்த பலவீனத்தையே காட்டுகிறது.
ஆனால் விஞ்ஞான, வானியல் அறிவின் முன்னேற்றம் ஒரு வினாடி கூட முன்பின் இல்லாமல் அவ்வளவு துல்லியமாக பிறை பிறப்பதை முன்கூட்டியே கணித்துக் கூறும் அளவுக்கு மனிதனை முன்னேறச் செய்துள்ளது. இந்த நிலையில் மிகத் துல்லியமாக உள்ளதை விட்டு விட்டு குறையுடைய மனிதக் கண்ணின் பார்வைப் படியுள்ளதையே முதல் பிறையாக ஏற்க வேண்டும் என்ற வாதம் பத்தாம் பசலி வாதம் என்றே அறிவுள்ள மக்கள் முடிவு செய்வார்கள். நபி(ஸல்) அவர்கள் இப்படிப்பட்ட கருத்தில் பார்த்து வையுங்கள்; பார்த்து விடுங்கள் என்று கட்டளையிடவில்லை என்பதை இந்த தவ்ஹீத் மவ்லவிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இன்னொரு மிக முக்கியமாக விவாதம் கவனிப்பீர்!
அல்முபீன்: வானியல் வாதம் புரிவோரின் கருத்துப்படி பிறையைப் பார்த்து நோன்பைத் தீர்மானிப்பது பாவமான காரியம் அல்ல. பிறை பார்த்து நோன்பு நோற்பது குற்றம் என்று அவர்களால் கூற முடியாது. அதற்கு ஆதாரம் காட்டவும் முடியாது.
பிறையைப் பார்த்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர்களின் பார்வையில் பிறை பார்க்காமல் கணித்து முடிவு செய்வது குற்றமாகும். ஏராளமான நபி மொழிகளுக்குக எதிரானதாகும்.
அதாவது இரண்டு சாராரின் கருத்துப்படியும் பிறை பார்த்து நோன்பைத் தீர்மானிப்பது குற்றச் செயல் அல்ல.
ஆனால் பிறை பார்க்காமல் கணித்து நோன்பு நோற்பது ஒரு சாரார் பார்வையில் குற்றச் செயலாகும்.
மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்ட ஒரு முஸ்லிம், இரு சாராரின் கருத்துப்படியும் எது குற்றமற்றதோ, எவரது கருத்துப் படியும் எது குற்றமில்லையோ அதைத்தான் செய்வார். செய்ய வேண்டும். (அல்முபீன் நவ – டிச. 99, பக்கம் 87)
அந் நஜாத்: அவர்களது வாதத்தில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லாத நிலையில்தான் இந்த மிக முக்கியமான வாதத்தை எடுத்து வைத்துள்ளனர். பிறை விஷயத்தில் இந்த வாதத்திலுள்ள கோளாறுகளை ஆராயப் போகுமுன் நாங்கள் ஒன்றைக் கேட்கிறோம். அவர்களே ஒப்புக் கொண்டுள்ள இந்த கோட்பாட்டின்படி அவர்க் நடக்கத்தயாரா? அதுவும் மிகமிகச் சரியான, இன்றைய காலக் கட்டத்தில் மிகமிக அத்தியாவச்யமான விஷயத்தில் இக்கோட்பாடடின்படி தங்கள் தவறை ஒப்புக்கொண்டு திருந்தத் தயாரா?
அல்லாஹ்வை அஞ்சிய நிலையில் மனட்சாட்சியுடன் கூடிய பதிலை அவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். விஷயம் வருமாறு:
‘அல்குர்ஆனின் எண்ணற்ற வசனங்கள் ஓரே சமுதாயம், நடு நிலைச் சமுதாயம், சாட்சிச் சொல்லும் சமுதாயம், பிரிவுகளற்ற சமுதாயம், பிளவு படக்கூடாது என்று தெளிவாக நேரடியாகக் கூறிக் கொண்டிருக்கின்றன. இந்த வசனங்களின் கருத்தை அப்படியே ஏற்று இந்த சமுதாயம், முஸ்லிம் என்ற நிலையில் ஓரணியில், ஒரே தலைமையில் ஒன்றுபட்டு மட்டுமே இருக்க முடியும். இவர்களே நாளை மறுமையில் வெற்றி பெற முடியும். பல பிரிவுகளாக, பல தனித்தனி தலைமைகளில் செயல்படுகிறவர்கள் வழிகேட்டில் இருக்கிறார்கள். நாளை நரகை அடைய நேரிடும் என்று மிகமிகக் கடுமையான நாங்கள் ஆரம்பத்திலிருந்தே எச்சரித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு மாறாக இந்த தவ்ஹீத் மவ்லவிகள் இந்த குர்ஆன் வசனங்களுக்கு எல்லாம் சுய விளக்கம் கொடுத்து தனித்தனிப் பெயர்களில் தனித்தனி தலைமைகளில் செயல்படுவது கூடும்; வழிகேடு அல்ல. அதுவும் ஆட்சி அதிகாரம் உள்ள அமீருக்கே கட்டுப்பட்டு நடக்க வேண்டும் ; ஆட்சி அதிகாரம் இல்லாத தலைவர்கள் அமீர்கள் அல்ல. அவர்களுக்குக் கட்டுபட்டு நடக்க வேண்டும் என்ற கண்டிப்பும் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
அதே நேரம் சமுதாயம் “முஸ்லிம்” என்ற பெயரில் ஓரே தலைமையில் ஒன்றுபடுவது குற்றம்; கூடாது, நாளை நரகை அடைய நேரிடும் என்று அவர்கள் சொல்லவுமில்லை. சொல்லவும் முடியாது. இப்போது நாங்கள் இரண்டு சாரார் இருக்கிறோம். அவர்கள் எடுத்து வைத்துள்ள அதி முக்கிய கோட்பாட்டின்படி முஸ்லிம் என்ற நிலையில் முஸ்லிம்கள் ஓரணியில் ஒரே தலைமையில் ஒன்றுபட்டு செயல்படுவதை இரண்டு சாராரும் சரி காண்கிறோம் . எந்தச் சாராரும் குற்றம் என்று சொல்லவில்லை. ஆனால் தனித்தனிப் பெயர்களில் தனித்தனித் தலைமைகளில் முஸ்லிம் சமுதாயம் சிதறுண்டு -பிளவுபட்டு – செயல்படுவது பெருங்குற்றம் – வழிகேடு – நாளை மறுமையில் நரகில் கொண்டு சேர்க்கும் என்று இரண்டு சாரார்களில் ஒரு சாராராகிய நாங்கள் உறுதியாகக் கூறுகிறொம். அதாவது முஸ்லிம் என்ற பெயரில் செயல்படுவது இரு சாரார் பார்வையிலும் குற்றமற்ற செயல் ஆகும்.
சிதறுண்டு பல பெயர்களில் பல பிரிவுகளாகச் செயல்படுவது ஒரு சாரார் பார்வையில் பெரும் குற்றச் செயலாகும். இப்போது அவர்கள் சொல்லட்டும்; அவர்களே கூறியுள்ளபடி “மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்ட ஒரு முஸ்லிம் இருசாராரின் கருத்துப்படியும் எது குற்றமற்றதோ எவரது கருத்துப்படியும் எது குற்றமில்லையோ அதைத்தான் செய்வார்; செய்ய வேண்டும்.
என்று முடித்திருக்கிறார்களே அந்த அவர்களது கூற்றுப்படியே இருசாராரின் கருத்துப்படியும் குற்றமில்லாத முஸ்லிம் என்ற நிலையில் ஒரே தலைமையில் ஓரணியில் ஒன்றுபட்டு செயல்பட அவர்கள் தயாரா? அவர்களே உறுதிப்படுத்தியுள்ள உண்மை முஸ்லிம்களின் அடையாளம் அவர்களிடமிருக்கிறதா? நேரடியான பதிலை எதிர்பார்க்கிறோம்.
இப்போது பிறை விஷயத்தில் அவர்கள் எடுத்து வைத்துள்ள இது போன்ற வாதத்தைப் பார்ப்போம்.
பிறையைப் பார்த்து நோன்பைத் தீர்மானிப்பது பாவமான காரியமல்ல. ஆனால் வானியல் ஆய்வுப்படியோ, அல்லது வெளிநாட்டுச் செய்திகளின்படியோ பிறை பிறந்த செய்தி ஆதாரப்பூர்வமாகக் கிடைத்த பின்னரும் அதை ஏற்காமல், எங்கள் ஊரில் பிறை பார்த்தால்தான் ஏற்றுக் கொள்வோம் என்று கூறி ரமழான் முதல் நோன்பை தவற விடுவதும், ஷவ்வால் முதல் பிறையில் – பெருநாளில் நோன்பு நோற்பதும் பெருங்குற்றமாகும்; ஹராம் – பாவம் என்றே நாங்கள் கூறுகிறோம். செய்தித் தொடர்புகள் மிக அதிகமாக ஏற்பட்டுள்ள இந்தக் காலத்தில் நாங்கள் பிறை பார்த்தே செயல்படுவோம் என்று கூறுவது, ஹஜ்ஜுக்கு சென்ற தனது கணவன் இறந்து போன செய்தியை போன் மூலம் உறுதியாகத் தெரிந்து கொண்ட பின்னரும், “இத்தா” இருப்பேன் என்று நாள் தவறி செயல்பட்டிருந்தாலும் அல்லாஹ் மன்னித்திருப்பான்.
ஆனால் இன்று பிறை பிறந்தததை உறுதியாகத் தெரிந்த நிலையில் பிறையைப் பார்த்தே செயல்படுவேன் என்று அடம் பிடிப்பதை அல்லாஹ் நிச்சயமாக மன்னிக்கவே மாட்டான் என்றே கூறுகிறோம்.
இரண்டு சாராரின் கருத்துப்படியும் பிறை பார்த்தும் நோன்பைத் தீர்மானிப்பது குற்றச் செயல் அல்ல. ஆனால் பிறை பார்ப்பதே அசல் இபாதத் அல்ல; வெளியிலிருந்து பிறைச் செய்தி கிடைத்ததும் மறுப்பது இன்றையக் காலக்கட்டத்தில் குற்றச் செயல் என்று ஒரு சாரார் ஆகிய நாங்கள் கூறுகிறோம். பிறை பார்த்து செயல்படுவதற்கு எந்த அளவு முக்கியத்துவம் நபி(ஸல்) அவர்கள் கொடுத்தார்களோ, அதே அளவு முக்கியத்துவம் தகவல் தெரிந்தும் செயல்படுவதற்கு கொடுத்தார்கள் என்கிறோம். மறுசாராரோ பிறைச் செய்தி கிடைத்தாலும் அது 100க்கு சரியாக இருந்தாலும் நமது ஊரில் பார்க்காவிட்டால் ஏற்க முடியாது. தகவலை ஏற்க முடியாது என்று நிராகரிக்கிறார்கள். எனவே பிறை விஷயத்தில் இரு சாராரும் ஒருமித்து ஒப்புக் கொள்ளும் கருத்து இல்லவே இல்லை. எனவே பிறை விஷயத்தில் அவர்களின் இந்த முக்கிய கோட்பாடு தவறாகிவிடுகிறது. ஆனால் பிரிவுப் பெயர்கள் விஷயத்தில் அருமையாகப் பொருந்திப் போகிறது. எனவே இக்கோட்பாட்டை அறிவித்த அவர்களுக்கு அதில் உண்மையிலேயே நம்பிக்கையும் விசுவாசமும் இருந்தால் உடனடியாக அவர்களது எல்லா அமைப்புகளையும் கலைந்து விட்டு, முஸ்லிம் என்ற நிலையில் ஓரணியில் ஓரே தலைமையில் ஒன்றுபட நடக்கும் மனச்சாட்சியுள்ள உண்மை முஸ்லிம்களின் செயலாக இருக்கும். இதை நாங்கள் கூறவில்லை. அவர்களே ஒப்புக்கொண்டு அறிவித்துள்ள உண்மையாகும்.
சாட்சிகள்:
சாட்சிகள் என்ற தலைப்பின் 88-ம் பக்கத்தில் சில விஷயங்களை எழுதியுள்ளார்கள். அதன் உண்மை நிலவரம் நமக்குத் தெரியாது. அந்த சம்பவத்தில் அந்தந்த ஊரில் பிறை பார்த்தே செயல்பட வேண்டும் என்ற கருத்துடையவர்களுக்கு ஒரு உபதேசம் இருக்கிறது. அதை தெளிவு படுத்துவதே நமது நோக்கம். பிறை பார்த்து செயல்பட்ட நபி(ஸல்) அவர்களது காலத்தில், முஸ்லிமான நம்பகமான இரு சாட்சிகள் பிறை பார்த்ததாக உறுதியாகச் சொன்னால் அதை ஏற்றுக் கொண்டதற்குரிய ஆதாரங்களையே பார்க்கிறோம். அமாவாசையா? அப்பாவாசையா? என்று அன்று யாரும் ஆராய்ந்து பார்த்த பின்னர் ஏற்றுக் கொண்டதாக இல்லை.
29-ம் நாளில் பிறை பார்த்து இரு முஸ்லிம்கள் சாட்சி சொன்னால் அது உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் இன்று அப்படி ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதை அவர்களே ஒப்புக் கொண்டு எழுதி இருக்கிறார்கள். அன்றைய நிலவரப்படியே நடப்போம் என்று சூளுரைத்துள்ளவர்கள், சாட்சிகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்? ஏன் இந்த தடுமாற்றம்? அமாவாசையா? அமாவாசை எப்போது முடிந்தது? பிறை தெரிய சாத்தியமுண்டா? என்ற ஆராய்ச்சி எல்லாம் அந்தக் காலத்தில் இல்லையே? இந்தக்காலத்தில் மட்டும் ஏன்? இதை முறையாகச் சிந்தித்தாலே உண்மையை அவர்கள் புரிந்து கொள்ள முடியும். பார்த்தல், கேட்டல், ஆய்தல், கவனித்தல் அறிந்து கொள்ளத்தான். அன்று அப்படிப்பட்ட வாய்ப்புகள் இல்லை. அதனால் உள்ளதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம். இன்றோ வாய்ப்புகள் அதிகம். எனவே அவற்றைப் பயன்படுத்துவதிலும் தப்பில்லை. அந்த அடிப்படையில்தான் இன்று அமாவாவசை எப்போது? பாட்டிமை எப்போது? பிறை தோன்ற வாய்ப்புண்டா? போன்ற ஆய்வுகள் தொடர்கின்றன. இந்த நிலையில் இரு மனித சாட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சாத்தியக் கூறை அலசுகிறோம். இது சரியான அணுகுமுறைதான். இதை எல்லாம் சரி கண்டு எழுதியுள்ள தவ்ஹீத் மவ்லவிகள் மிக துல்லியமாக ஆய்வின் மூலம் மிகச் சரியாக கிடைக்கும் பிறைத் தகவலைவிட மனிதக் கண்ணால் பார்க்கும் பிறைத் தகவலைவிட மனிதக் கண்ணால் பார்க்கும் பிறைத் தகவலுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? நபி(ஸல்) அவர்கள் அப்படித்தான் கட்டளையிட்டிருக்கிறார்கள் என்று வேதாளம் முருங்கை மரம் ஏறிய நிலைக்குப் போக வேண்டாம். நீங்கள் உங்களது கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் அதே போல் சாட்சிகள் விஷயத்திலும் நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படியே தான் செயல்பட வேண்டும். இன்றைய ஆய்வுகளுக்குப் போகவே கூடாது. இதில் மட்டும் எப்படி மாற்றுக் கருத்தில் இருக்கிறீர்கள்? தவ்ஹீத் மவ்லவிகளாகிய உங்களது தடுமாற்ற நிலை இப்போதாவது புரிகிறதா?
அந்நஜாத்: ஜனவரி, 2000 – ரமழான், 1420
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக