வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

GMT-UTநேரம்

புரோகித மவ்லவிகளிடமும், அவர்களின் மூடக் கொள்கைகளை இறைவாக்காக ஏற்றிருக்கும் உலகியல் அறிஞர்களிடமும், சந்திர மாதத்தின் முதல் நாள் – தலைப்பிறை இரு நாள் – 48 மணி நேரம், மூன்று நாள் – 72 மணி நேரம் வர முடியும் என்ற அறிவீனமாக கூற்றினால் ஏற்படும் ஒன்பது ஐயங்களுக்கு சரியான விடையளிக்கும்படி கேட்டிருந்தோம். இதுவரை பதில் இல்லை; இதன் பின்னரும் தவ்ஹீத் மவ்லவிகளாலும், தக்லீத் மவ்லவிகளாலும், ஸலஃபிகளாலும், உலகியல் அறிஞர்களாலும் பதில் தரவே முடியாது. காரணம் தலைப்பிறை ஒருநாள் மட்டுமே இருக்க முடியும் என்ற உண்மையை அவர்கள் தங்களின் பிள்ளைகளை அறிவதுபோல் அறிவார்கள்.(பார்க்க. 2:75,109,146, 3:187, 4:44, 6:20)

ஆனால் சத்தியத்தை உள்ளது உள்ளபடி சொன்னால் சொர்க்கம் நுழையும் மிகமிக சொற்பமானவர்களே அந்த சத்தியத்தை ஏற்பார்கள். அந்த சொற்பமானவர்களும் குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக இவர்கள் மார்க்கத்தைப் பிழைப்பாக்குவதை அனுமதிக்க மாட்டார்கள். சத்தியத்திற்கு முரணான வழிகேடுகளை மார்க்கமாகச் சொன்னால்தான் நரகம் நுழையும் பெருங்கூட்டத்தினர் அவர்கள் பின்னால் அணி வகுப்பார்கள். காசு, பணத்தை அள்ளி அள்ளி இப்புரோகிதர்களுக்குத் தருவார்கள். இப்புரோகிதர்கள் அழிந்துபடும் அற்ப இவ்வுலக ஆதாயங்களைப் பெற முடியும். இந்த உண்மையை 2:41,79, 3:78, 187, 4:44, 9:9, 34, 11:19, 31:6 இறைவாக்குகளை அனைத்தும் உறுதிப்படுத்துகின்றன.

எனவே முஸ்லிம்களை ஒரே நேர்வழியை விட்டு பல கோணல் வழிகளில் செல்ல வைக்கும் கெட்ட நோக்கத்துடன், அன்றைய மக்களிடையே ஏற்பட்ட சச்சரவைத் தீர்த்து வைக்க சொல்லப்பட்ட மூன்றாம் பிறை, இரண்டாம் பிறை சச்சரவு, மேக மூட்டத்தின் போது பிறை இருக்கிறது. பிறை இல்லை என்ற சச்சரவ, மாதம் 29-ல் முடிகிறது; இல்லை 30-ல் முடிகிறது என்ற சச்சரவு, சிரியாவில் ரமழானில் கண்ட பிறை, ரமழான் மாதம் முடியும் தருவாயில் ஷவ்வாலுக்கு நெருக்கமாக மதீனாவுக்குக் கிடைத்து மதீனாவாசிகள் விடுபட்ட ரமழான் மாத தலைநோன்பை கழா செய்வதா? இல்லையா? என்ற சச்சரவு இப்படிப்பட்ட சச்சரவுகளைத் தீர்த்து முஸ்லிம்களிடையே ஒற்றுமைக் காத்த ஹதீஸ், அஃதர்களை பிறைறைப் புறக்கண்ணால் பார்ப்பது (ரஃயல்ஐன்) கட்டாயம் – பர்ழ் என்ற கருத்தில் மக்களிடையே திரித்து வளைத்துக் கூறி, மக்களை நம்பவைத்து வழிகேட்டில் இட்டுச் செல்ல முற்படுகிறார்கள். இந்தப் புரோகித மவ்லவிகள். இந்த உண்மையை நன்கு தெரிந்த நிலையில்தான் மக்களை வழிகெடுத்து மக்களிடையே சச்சரவையும், பிளவையும் ஏற்படுத்தி விட்டு, அந்த பழியை வெள்ளிக்கிழமை ஜும்ஆ உலகம் முழுக்க ஒரே நாளில் – 24 மணி நேரம் மட்டுமே இருப்பதுபோல், மாதத்தின் தலைப்பிறை ஒரே நாளில் – 24 மணி நேரம் மட்டுமே இருக்க முடியும்; ஈதுல் ஃபித்ர், ஈதுல் அழ்ஹா தொழுகைகளும் முறையே ஒரே நாளில் – 24 மணி நேரம் மட்டுமே இருக்க முடியும் என்ற சத்தியத்தை – நேர்வழியை உரக்கச் சொல்பவர்கள் மீது போட்டு மக்களை ஏமாற்றி வஞ்சிக்கிறார்கள். (பார்க்க : 3:188, 4:112)

இந்த நிலையில் நாம் கேட்டிருந்த அந்த ஒன்பது கேள்விகளுக்கும் அவர்களால் பதில் தர முடியுமா? ஒருபோதும் முடியாது.

மக்களிடையே குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரண்பட்டக் கருத்துக்களை மார்க்கமாகச் சொல்லி, மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பதால், மக்கள் குர்ஆனை நேரடியாகப் படித்து விளங்கிவிட்டால் தங்களுடைய பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடும் என்ற அச்சத்துடனும் – கெட்ட நோக்கத்துடனும் மவ்லவி அல்லாத பாமர மக்களுக்கு குர்ஆன் விளங்காது என்ற காதில் பூ சுற்றுகிறார்கள். மார்க்கத்தை மக்களுக்கு குர்ஆன் விளங்காது என்று காதில் பூ சுற்றுகிறார்கள். மார்க்கத்தை மக்களுக்கு விளக்குவதில் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட நாங்களே ஆற்றல் பெற்றவர்கள் என ஆணவம் பேசுகிறார்கள். மேலும் நூற்றுக்கு நூறு உண்மை என நிலை நாட்டப்பட்ட விஞ்ஞான தொழில் நுட்பங்கள் அல்லாஹ்வின் ஃபிஅல்-செயலாக இருப்பதால், அல்லாஹ்வின் கலாமான குர்ஆன் கூறும் உண்மைகளையே அவை நிரூபிக்கின்றன என்ற உண்மையை – நேர்வழியை இப்புரோகிதர்களும் அறிந்து வைத்திருப்பதால், அந்த உண்மைகள் தங்களின் வயிற்றுப் பிழைப்புக்குரிய பித்தலாட்டங்களை அம்பலபடுத்தி விடும் – தங்களின் பிழைப்பிற்கு ஆபத்து வந்து விடும் என்ற அச்சம் காரணமாகவே விஞ்ஞான தொழில் நுட்பங்கள் மூலம் கண்டறியப்படும் உண்மைகளை கச்சையைக் கட்டிக் கொண்டு அறிந்த நிலையில் தான் மறுக்கிறார்கள்.

முதன் முதலில் சூரியனின் ஓட்டத்தைப் பார்த்து (ருஃயத்) முடிவு செய்த ஐங்கால தொழுகைகளை நேரத்தையும், ஸஹர், இஃப்தார் நேரத்தையும் கடிகாரத்தைப் பார்த்து(ருஃயத்) முடிவு செய்யும் போது இப்படித்தான் கூக்குரலிட்டார்கள். மக்களை வழிகேட்டில் இட்டுச் சென்றார்கள். மரணச் செய்தியை நேரில் வந்து சொன்னதன் பின்னர் அறிந்து செயல்பட்டதற்கு மாறாக தொலைபேசி தகவல் மூலம் அறிந்து செயல்பட முற்பட்டபோதும் இதேபோல் தான் கூக்குரலிட்டார்கள். ஷைத்தானின் சூழ்ச்சி, யூதர்களின் சூழ்ச்சி என்று அலறினார்கள். இதேபோல் ஒலி பெருக்கி, ஒளி காட்சி போன்ற நவீன கண்டு பிடிப்புகளின்போது இவை எல்லாம் ஷைத்தானின் மாயை, யூதர்களின் சூழ்ச்சி என்று கூறி மக்களை வழி கெடுத்தார்கள். இப்படி ஒவ்வொரு புதிய விஞ்ஞர்ன தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளின் போதும் தங்களின் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடுமே என் அஞ்சியே யூதர்களின் சதி என்றும், ஷைத்தானின் சூழ்ச்சி என்றும் ஒப்பாரி வைத்தார்கள்.

ஆனால் இப்புரோகித மவ்லவிகள் மார்க்கமாக மக்களிடம் சொல்லி, அவர்களை ஏமாற்றி வருவதுதான் யூதர்களின் சதி, ஷைத்தானின் சூழ்ச்சி என்பதை அறிந்து கொண்டே அந்தப் பழியை ஒரே நேர்வழியைச் சொல்லும், குர்ஆன், ஹதீஸ்படி மட்டுமே நடக்கும் சிறு கூட்டத்தின் மீது மிக எளிதாகச் சுமத்தி விடுகிறார்கள் (பார்க்க 3:188, 4:112) பெருங்கூட்டம் அவர்கள் பின்னால் இருப்பதால் இந்த அவதூறை எளிதாக பரப்ப முடிகிறது. கழுதை உழவுக்கு வந்தாலும் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்கள் நேர்வழிக்கு வரமாட்டார்கள் என்பதை அவர்களே நிலைநாட்டிக் கொண்டிருக்கிறார்கள். சுவர்க்கம் செல்ல விரும்பும் மக்கள் இப்புரோகிதர்களின் வசீகர மாய வலையில் சிக்கி சீரழியாமல், அவர்களைப் புறக்கணித்துவிட்டு குர்ஆன், ஹதீஸை அவர்களுக்குத் தெரிந்த மொழியில் படித்து சுயமாக சிந்தித்து விளங்கினால் மட்டுமே வெற்றியடைய முடியும். இந்த உண்மையை 7:3, 33:36,66,67,68 இறைவாக்குகளைப் படித்து விளங்கலாம்.

ரமழான் தலைப்பிறையைக் கண்ணால் பார்த்த பின்னர் அல்ல. ரமழான் மாதத்தை அடைந்துவிட்டால் நோன்பு நோற்பது கடமை என அல்லாஹ் 2:185ல் கட்டளையிடுகிறான். தக்க காரணமின்றி ஒரு ரமழான் நோன்பை தவற விடுவது. குற்றமென நபி(ஸல்) எச்சரித்துள்ளனர். ரமழான் மாதம் பிறந்துவிட்டது என்பதை திட்டமாக அறிந்த பின்னரும் பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் எனக் கூறி கடமையான ஒரு நோன்பையோ இரு நோன்பையோ தவறவிடும் குற்றத்திற்கு முஸ்லிம்களை ஆளாக்குகிறார்கள். ஷஃவால் முதல் நாள் பெருநாள் அன்று நோன்பு நோற்பது தடுக்கப்பட்டுள்ளது. (புஹாரீ(ர.அ.) 1990, 1991, 1992, 1993) மற்றும் முஸ்லிம் திர்மிதி அபூதாவூது.

இவை அனைத்தையும் புறக்கணித்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்ய வைக்கும் இப்புரோகித மவ்லவிகள் எவ்வளவு பெரிய மாபாவிகள், கொடியவர்கள்; அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரின் சாபத்திற்குரியவர்கள் (2:159,161,162) என்பதை நேர்வழி நடக்க விரும்பும் ஒவ்வொரு முஸ்லிம் ஆணும் பெண்ணும் விளங்கிச் செயல்பட முன்வருவார்களாக!

இப்புரோகித மவ்லகிளுக்குரிய சாதகமான சூழ்நிலை அதாவது பிளஸ் பாய்ண்ட் ஷைத்தானின் தூண்டுதலால் நாளை மறுமையில் நரகை நிரப்ப இருக்கும் மிக மிக பெரும்பான்மையான மக்கள் இப்புரோகித மவ்லவிகளின் பின்னால் கண்மூடிச் செல்வதேயாகும்; அணி வகுப்பதேயாகும். (பார்க்க 32:13, 11:118,119, 50:30)

இப்புரோகித மவ்லவிகளின் இரக்கமற்ற, நாணயமற்ற, பொய்கள் நிறைந்த, உண்மைக்குப் புறம்பான, குர்ஆன் ஹதீஸுக்கு முரணான, கோணல் வழிகளை துணிந்து மக்களுக்கு போதித்து வருவதின் நோக்கம், அவர்கள் அல்லாஹ்வுடைய எண்ணற்ற கட்டளைகளுக்கு முரணாக மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டு வயிறு வளர்ப்பதுதான். இந்த உண்மையை நீங்களே இறுதி வழிகாட்டி நூல் அல்குர்ஆனின் இந்த இறைவாக்குகளைப் படித்துப் பார்த்து விளங்க முடியும். 2:க41,75,78,79,109,146,159,161,162,174, 3:78,187, 4:44,46, 5:13, 41,63, 6:20,21,25,26,125, 9:9,34, 11:18,19, 31:6, 6:90, 10:72, 11:29,51, 25:57, 26:109,127,145,164,180, 34:47, 38:86, 42:23.

குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதில் உள்ளது உள்ளபடி எடுத்து நடக்கும் மிக மிகச் சிறிய கூட்டத்திற்கே நல்வாழ்த்துக்கள்!

1429 ஷஃபான் மாதம் முடிவுற்று ரமழான் மாதம் ஆரம்பித்தபோது கன்ஜங்ஷன் ஏற்பட்ட நாள் கிழமை நேரம் பற்றிய விபரங்களும்

GMTக்கும் UTக்கும் உள்ள வேறுபாடும்

உலகின் கிழக்கு எல்லை, ஞாயிற்றுக்கிழமையை (31.08.08) அடைந்து 24 மணி நேரத்திற்குப் பிறகே உலகின் மேற்கு எல்லை சனிக்கிழமையிலிருந்து (30.08.2008) ஞாயிற்றுக்கிழமைக்கு (31.08.208) மாறும் என்ற அடிப்படையில் கணக்கிடப்படுவதே UT நேரம் ஆகும்.

கன்ஜங்ஷன் (புதிய பிறை பிறக்கும்) நேரம் 19.58UT என்றால் கன்ஜங்ஷன் இடம் பெறும் இடம் சனியிலிருந்து ஞாயிறுக்கு மாற இன்னும் 19.58 மணி நேரம் இருக்கிறது என்பதேயாகும். 6UTயும் 6.p.m.மும், 12UTயும் 12p.m.மும்(G.M.T.) ஓரே நேரம்போல் தெரிவதைத் தவிர, இதர அனைத்து UT,GMT நேரங்களும் வேறுபடுவதைக் கவனிக்கவும். எனவே UT நேரமும், GMTநேரமும் ஒன்றே என்போர் தவறிழைக்கின்றனர் என்பதைப் புரியவும், UT 1லிருந்து UT11 வரை அவற்றிற்கு நேரான GMT நேரத்தையும் கூட்டினால் 12 வருவதையும் UT 12 லிருந்து 23 வரை அவற்றிற்கு நேரான GMT நேரத்தைக் கூட்டினால் 24 வருவதையும் கவனிக்கவும். தேதிக் கோட்டில் சனிக்கிழமை (30.08.2008), ஞாயிற்றுக்கிழமையாக (31.08.2008) மாறும் அதே நொடியில் கன்ஜங்ஷனில் (19.58UT) ஷஃபான் மாதம் ரமழான் மாதமாக மாறுகிறது. இப்படி தேதி, கிழமை மாறும் தேதிக் கோட்டிலிருந்து கணக்கிட்டால் ஒரே நொடியில் தோன்றி மறையும் கன்ஜங்ஷன் (19.58UT) இடம் பெறும் இடத்திற்குக் கிழக்கேயும், மேற்கேயும் ஒரே நாள் ஒரே கிழமையில் (சனிக்கிழமை 30.08.2008) இருப்பதையும், சந்திர மாத கணக்குப்படி முடியும் ஷஃபான் மாதத்தின் கடைசிப் பகுதியும், புதிய ரமழான் மாதத்தின் ஆரம்பப் பகுதியும் இருப்பதையும் அவதானிக்கலாம். எனவே கன்ஜங்ஷன் (19.58UT 30.08.2008) இடம்பெறும் நாளிற்கு அடுத்த நாள் புதிய மாதத்தை (ரமழான்) கணக்கிட்டு தேதிக்கோட்டிற்கு மேற்கிலிருந்து அதாவது டோங்கா, நியூஜிலாந்து போன்ற நாடுகளிலிருந்து நோன்பு ஆரம்பிக்கிறது. அதிலிருந்து நேரம் ஆகஆக பக்கத்துப் ஊர் என உலகின் அனைத்து நாடுகளும் நோன்பு நோற்க ஆரம்பித்து விடும். இறுதியாக 24 மணி நேரத்திற்குப் பிறகே தேதிக் கோட்டிற்கு கிழக்கே இருக்கும் அலாஸ்கா, சுமோவா போன்ற நாடுகள் நோன்பு நோற்பதை ஆரம்பிக்கும். இந்த 24 மணி வேறுபாட்டையே அல்லாஹ் 2:185-ல் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும் என்று கட்டளையிடுகிறான். மற்றபடி ரமழான் தலைப்பிறை இரண்டு நாள் மூன்று நாள் வருவதையே இந்த 2:185 இறைவாக்கு உறுதிப்படுத்துகிறது என்போர் அறிவீனர்களாக மட்டுமே இருக்க முடியும். இஸ்லாமிய மாதங்களின் முதல் பிறை – முதல் தேதி – முதல் நாள் 24 மணி நேரத்திற்குள் மட்டுமே இருக்க முடியும் என்பதை எளிதாக விளங்கிக் கொள்ள இந்த சர்வதேச நேரத்தையும் தேதிக் கோட்டையும்மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். UT நேரமும் GMT நேரமும் ஒன்று என்ற தவறான கணக்கீட்டிலும் அந்தந்தப் பகுதிகளின் மைய நேரத்தையும் (Local Mean Time) கணக்கில் கொண்டு பார்த்தால் முதல் பிறை 2 நாள், மூன்று நாள் ஏற்பட முடியும் என்ற தடுமாற்றமே மிஞ்சும். காரணம் அந்தந்த பகுதிகளின் மைய நேரமும் (Local Mean Time) UT நேரமும் வித்தியாசப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும். இந்திய IST நேரப்படி கல்கத்தாவின் பஜ்ருடைய நேரத்திற்கும் மும்பையின் பஜ்ருடைய நேரத்திற்கும் சுமார் 1 மணி நேரம் வித்தியாசம் இருப்பதை அறிந்தவர்கள் UT நேரமும் இந்தியாவின் IST (Local Mean Time) நேரமும் வித்தியாசப்படுவதை புரிந்து கொள்ளலாம். அதாவது கல்கத்தாவின் UTநேரத்திற்கும் மும்பையின் நேரத்திற்கும் சுமார் 1 மணி நேரம் வித்தியாசம் இருக்கும் என்பதே அதன் பொருளாகும். எனவே புதிய மாதம் பிறக்கும் நேரத்தில், தேதிக்கோட்டில் நாள் சனிக்கிழமையிலிருந்து (30.08.2008) ஞாயிற்றுக்கிழமைக்கு (31.08.2008) மாறுமபொழுது உள்ள அதே நொடியில் உலகம் முழுவதும் சனிக்கிழமையிலேயே (30.08.2008) இருக்கும் என்பதை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். உலகின் வேறு எந்த இடத்திலிருந்து கணக்கிட்டாலும் இரண்டு தேதி, இரண்டு நாள், இரண்டு கிழமை (சனி, ஞாயிறு) வரவே செய்யும். இதைக் கவனத்தில் கொண்டால் மட்டுமே இஸ்லாமிய மாதங்களின் முதல் தேதி – முதல் பிறை- ஒரு நாள் 24 மணி நேரம் மட்டுமே இருக்க முடியும். 2 நாள் 48 மணி நேரம், 3 நாள் 72 மணி நேரம் ஒருபோமு் வரமுடியாது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

புரோகித மவ்லவிகள் முஸ்லிம்களை வழிகேட்டில் இழுத்துச் செல்லும் கெட்ட நோக்கத்தோடு இந்தியாவில் IST நேரம் பகல் 10 மணி ஞாயிற்றுக்கிழமை என்றால் அமெரிக்காவில் இரவு 10 மணி சனிக்கிழமையாக இருக்கும்பொழுது நோன்பு ஒரே நாளில் எப்படி ஆரம்பிக்கும்? நீங்கள் நோன்பு நோற்க ஆரம்பிக்கும்பொழுது அமெரிக்காவில் நோன்பு ஆரம்பிக்க முடியுமா? நீங்கள் நோன்பு துறப்பார்களா? என்றெல்லாம் மூடத்தனமாக கேள்விகளைக் கேட்டு முஸ்லிம்களை குழப்பத்தில் ஆழ்த்துவார்கள். இவர்கள் பூமியின் சுழற்சி அறியா மூடர்களா? எனவே அவர்களின் மாய வசீகர வலையில் சிக்காமல் சுயமாக சிந்தித்து சரியான முடிவுக்கு வரும்படி அன்புடன் வேண்டுகிறோம். புரோகித மவ்லவிகளைப் புறக்கணித்து இறுதி வழிகாட்டி நூல் அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன்படி நடப்பவர்களே வெற்றியாளர்கள் அவர்களுக்கே நன்மாராயம் உரித்தாகுக!

1 கருத்து: