உலகத்தின் எதாவதொரு பகுதியில் என்ன பிறையோ என்ன தேதியோ என்ன கிழமையோ என்ன நேரமோ அதே போல் உலகின் எல்லா பகுதிகளிலும் அதே பிறை, அதே தேதி, அதே கிழமை, அதே நேரம் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இந்த தடுமாற்றம் காரணமாகத்தான் ஷஃபான் மாதத்தின் கடைசிப்பகலில் இருக்கும் லண்டன், அங்காரா (அமெரிக்கா) போன்ற இடங்களிலும் நோன்பு நோற்க வேண்டும் என்று எழுதி இருந்தார்கள். அதே போல் கடலில் பிரயாணம் செய்யும் பிரயாணிகளின் வசதிக்காக ஊர்களில்லாத கடல் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சர்வ தேச தேதிக் கோட்டை (International Date Line) தங்கள் தங்கள் ஊரிலிருக்கும் (முகீம்) மக்களுக்குரிய தேதிக் கோடாக கணித்து குழப்பி இருக்கிறார்கள். ஊரிலிருப்பவர்களுக்கும் அந்த தேதி கோட்டிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. பூமி சுழலும் போது அந்த சர்வதேச தேதி கோடும் பூமியோடு சுழன்று கொண்டு தான் இருக்கும். இரவு, பகலை நிர்ணயிப்பது இந்த தேதி கோடு அல்ல.
கடலில் பிரயாணம் செய்யும் கப்பல்கள் அந்த சர்வதேச தேதிக் கோட்டை தாண்டும் போது அவர்கள் செல்லும் திசையை வைத்து வெள்ளியை சனியாகவோ, சனியை வெள்ளியாகவோ மாற்றிக் கொள்வார்கள் என்பது உண்மையே! அதுவும் திடுதிடுப்பென அப்படி மாற்றமாட்டார்கள். அவர்கள் கடலில் பிரயாணம் செய்யும் போது பிரயாண தூரத்தைப் கணக்கிட்டு டிகிரிக்கு 4 நிமிடம் என்று போகும் திசையை வைத்து கூட்டியோ குறைத்தோ கடிகாரத்தைத் திருப்பிக் கொள்வார்கள். உதாரணமாக இந்தியாவிலிருந்து புறப்பட்டு மேற்கே சவூதி செல்கிறவர்கள் அங்கு போய் இறங்கியவுடன் தங்கள் கடிகாரத்தில் 2.30 மணி குறைத்து வைத்துக் கொள்வார்கள். துபை சென்று இறங்குபவர்கள் 1.30 மணி குறைத்து வைத்துக் கொள்வார்கள். அதற்கு மாறாக கிழக்கே சிங்கப்பூர், மலேசியா செல்பவர்கள் அதுபோல் கணக்கிட்டு கூட்டி வைத்துக் கொள்வார்கள். இதுவெல்லாம் கப்பலிலோ, ஆகாய விமானத்திலோ அல்லது வேறு வாகனங்களிலோ கிழக்கேயோ, மேற்கேயோ பிரயாணம் செய்கிறவர்களுக்கேயன்றி தங்கள் தங்கள் ஊரில் இருப்பவர்களுக்கு அல்ல.
அவர்கள் கையிலுள்ள கடிகாரம் பூமியின் சுழற்சிக்கேற்றவாறு சரியாக நேரம் காட்டிக் கொண்டே இருக்கும். இப்போது ஒவ்வொரு நாட்டிலும் தங்கள் நாட்டின் பரப்பளவு அந்த நாட்டின் கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடையேயுள்ள தூரம் இதையெல்லாம் கணக்கிட்டு பொதுவாக ஒரு நேரத்தை அந்த நாட்டின் ஸ்டாண்டர்ட் டைம் என்று நெறிப்படுத்தி இருப்பார்கள். அந்த அடிப்படையிலேயே IST இந்தியன் ஸ்டாண்டார்ட் டைம் அமைந்துள்ளது. இதனால்தான் கல்கத்தாவின் சூரிய உதய நேரமும், பம்பாயின் சூரிய உதய நேரமும் வேறுபடுகிறது. ஒரு டிகிரிக்கு 4 நிமிடங்கள் என்று கணக்கிட்டு நேரம் குறிப்பதாக இருந்தால் இந்தியாவிலேயே பல நேரங்களை குறிப்பிட வேண்டி வரும். அப்படி அமைந்தால் இந்தியாவில் எல்லா இடங்களிலும் சூரிய உதயம் ஒரே நேரத்திலும், அஸ்தமனம் ஓரே நேரத்திலும் இருப்பதைக் காணலாம். காரணம் பூமியின் ஓட்டத்திற்கேற்றவாறு நேரம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. சரியாகச் சொல்வதாக இருந்தால் பூமியின் கிழக்கு மேற்கு வாக்கில் எந்த ஊரும் ஒரே நேரத்தில், இருக்காது. நேர வித்தியாசம் இருக்கும். தெற்கு வடக்கில் ஓரே நேரம் இருக்கும்.
ஆனால் ஒன்றை இங்கு மிகக் கவனமாக கவனித்தாக வேண்டும். இந்த நேர வித்தியாசம் உலகம் முழுவதும் இரவு +12 பகல் + 12 ஆக 24 மணி நேரத்திற்கு மேல் அதாவது ஒரு நாளைக்கு மேல் போகவே போகாது. போக முடியாது.
எனவே அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல் இந்தியாவில் வெள்ளி மாலை 6 மணியாகி சூரியன் மறைந்து விட்டால் சனிக்கிழமை பிறந்து விடும். ஆனால் சவூதியில் 3.30க்கு வெள்ளியாகத்தான் இருக்கும். அதாவது சவூதிக்காரர்கள் சனிக்கிழமையை அடைய இன்னும் 2.30 மணி நேரம் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் உலகம் பூராவும் ஒரே நாள் தான் என்பதை அவர்கள் விளங்குவதிலுள்ள கோளாறுதான் தலைப்பிறை இரண்டு நாட்களுக்கு இருக்க முடியும் என்ற தவறான வாதம். உலகம் பூராவும் ஒரு நாள்தான் என்பதை எப்படி விளங்க வேண்டும்? இந்தியாவில் மாலை 6மணி சூரிய அஸ்தமன நேரம் என்று வைத்துக் கொள்வோம். இந்தியாவில் இஸ்லாமிய பிறைக் கணக்குப்படி வெள்ளிக்கிழமை மாறி சனிக்கிழமை ஆகிவிட்டது. இந்தியாவிற்கு மேற்கிலுள்ள நாடுகள் அனைத்தும் வெள்ளிக் கிழமை பகலில் இருக்கின்றன. அதற்கு மாறான இந்தியாவுக்கு கிழக்கிலுள்ள நாடுகள் வெள்ளிக் கிழமையிலிருந்து சனிக்கிழமை இரவில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் சனிக்கிழமை இரவு 6மணி என்றால் கிழக்குப் பகுதிகளிலுள்ள நாடுகள் அதிகாலை 6 மணி வரையிலுள்ள சனி இரவிலும் (+6p.m. to +6 a.m.) மேற்குப் பகுதிகளிலுள்ள நாடுகள் வெள்ளிக்கிழமை பகல் 12 மணி அவகாசத்திலும் (+6 a.m. to +6 p.m.) சஞ்சரிக்கின்றன. இந்தியா வெள்ளி மாலை சனி இரவைச் சந்தித்து 12 மணி அவகாசத்திற்குள் அதாவது இந்தியா சனி இரவைக் கடந்து சனி பகலை அடையும் போது அவை வெள்ளியைக் கடந்து சனி இரவுக்குள் பிரவேசித்துவிடும். ஆக 24 மணி அவகாசத்தில் அதாவது 1 நாள் அவகாசத்தில் உலக நாடுகள் அனைத்திலும் வெள்ளி சனியாகிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக