வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

பிறை பார்த்தல்!

சந்திர மாதத்தை முடிவு செய்ய பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது அவசியம்-கட்டாயம் என்று சுன்னத் ஜமாஅத்தினரும், த.த.ஜமாஅத்தினரும் அடம் பிடித்து வருகின்றனர். எனவே பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது ஷரீஅத்தில் (மார்க்க விதிமுறைகளில்) எந்த நிலையிலுள்ளது என்பதை ஆராயும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மார்க்கத்தில் பர்ழ்-கட்டாயக்கடமை, சுன்னத் – நபி நடைமுறை என இரண்டு வகை இருக்கிறது. அல்குர்ஆனின் எண்ணற்ற வசனங்கள் இந்த இரண்டையும் வலியுறுத்துகின்றன. அடுத்து ஒரு கடமையை நிறைவேற்ற சில விதிகளை நிறைவேற்றியாக வேண்டும். உதாரணமாக கடமையான, சுன்னத்தான தொழுகைகைளை நிறைவேற்ற அங்க சுத்தி ஓளூ அவசியமாக இருக்கிறது. இன்ன தொழுகையை நிறைவேற்றுகிறேன் என்ற நிய்யத் – எண்ணம் அவசியமாக இருக்கிறது. மேலும் தொழுகையின் நிலை, ருகூஃ, சுஜுது, இருப்பு, அவை ஒவ்வொன்றிலும் ஓத வேண்டியவைகள் இவற்றை முறைப்படி நிறைவேற்றினால்தான் தொழுகை நிறைவேறும். இவை அனைத்தையும் தொழக் கூடிய ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நிறைவேற்றியே ஆக வேண்டும் ஒருவர் செய்தால் போதும்; அனைவருக்கும் அது போதுமானது என்ற நிலை இங்கு இல்லை.

இதுபோல் நோன்பை எடுத்துக் கொள்ளுங்கள். ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை. நோன்பு நோற்கும் ஆணோ, பெண்ணோ அதிகாலை பஜ்ரிலிருந்து சூரியன் மறைவு மஃரிபு வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருப்பது கடமை. கடமையான நோன்பை நிறைவேற்றுகிறேன் என்ற நிய்யத் – எண்ணம் அவசியம். பாவமான – தீய பேச்சு, செயல்களிலிருந்து விடுபட்டு இருப்பது கொண்டே நோன்பு அங்கீகரிக்கப்படும். இல்லை என்றால் அது வெறும் பட்டினி கிடந்த நிலையையே பெற்றுத் தரும்.

இப்போது நமது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய விசயம் ரமழான் பிறையைக் கண்ணால் பார்ப்பது, பர்ழ்-கட்டாயக் கடமையில் வருகிறதா? சுன்னத்-நபி நடைமுறையில் வருகிறதா? நோன்பின் ஷர்த்-விதிகளுக்குள் வருகிறதா? என்பதே! அப்படி ஆய்வு செய்யும்போது பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது பர்ழாகவும் இல்லை; சுன்னத்தாகவும் இல்லை. நோன்பின் விதிகளிலும் இல்லை. பர்ழாக இருந்தால் அனைவரும் கண்டிப்பாகப் பார்த்தாக வேண்டும். சுன்னத்தாக இருந்தாலும் நபி வழியில் நன்மை தரும் செயலே! ஆனால் நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் அனைவரும் பார்த்தாக ஆதாரமில்லை. இதிலிருந்து என்ன விளங்குகிறது? பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது பர்ழும்-கடமையும் இல்லை; நோன்புக்கு உட்பட்ட ஷர்த்தும்-விதியும் இல்லை. பிறையைப் புறக்கண்ணால் பார்க்காமல் அதே சமயம் ரமழான் மாதம் ஆரம்பித்து விட்டது என்பதைத் திட்டமாக அறிந்த நிலையில் ஒரு முஸ்லிமான ஆணோ, பெண்ணோ நோன்பு நோற்று அதன் வரையறைகளைப் பேணி நடந்தால் நிச்சயமான அவர்கள் நோன்பின் முழுப் பலனையும் அடைய முடியும். பிறையைப் புறக்கண்ணால் பார்க்கவில்லை என்பதற்காக அவர்களுக்கு அளிக்கப்படும் நோன்பிற்கான நன்மையில் ஓர் அணுவளவும் குறைக்கப்படாது. 1400 ஆண்டுகளுக்கு முன்னர் பிறையைப் பார்த்தார்கள் என்றால், அன்று சந்திர மாதம் தொடங்குவதை அறிய கணினி கணக்கீடோ, வேறு வழிமுறை எதுவுமோ இல்லாத ஒரே காரணம்தான். இதை சுனனத் ஜமாஅத் மவ்லவிகளோ, த.த.ஜ. மவ்லவிகளோ மறுக்கவோ முடியாது.

இந்த நிலையில் மார்க்கத்தில் விதிக்கப்படாத ஒன்றை விதியாக்கும் இந்த மத்ஹப் மவ்லவிகளின், த.த.ஜ. மவ்லவிகளின் நிலை அல்குர்ஆன் அஷ்ஷுறா 42:21 இறைக் கட்டளைப்படியும், அஹ்ஜாப் 33:36 இறைக் கட்டளைப்படியும் இறைவனுக்கு இணை வைக்கும், பகிரங்கமான வழிகேட்டில் கொண்டு செல்லும் குற்றமா?இல்லையா? ரமழான் ஆரம்பித்துவிட்டால் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை(பர்ழ்), ஷவ்வால் முதல் நாளில் நோன்பு நோற்பது கண்டிப்பாகத் தடுக்கப்பட்டது(ஹராம்). பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது பர்ழும் இல்லை; சுன்னத்தும் இல்லை. நோன்பிற்குதிய ஷர்த்தும் இல்லை. இந்த நிலையில் பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதை ஷர்த்தாக்கி-விதியாக்கி பர்ழான நோன்பை விடச் செய்பவர்களும், ஹராமான நாளில் நோன்பு நோற்கச் செய்பவர்களும் இறை நேசர்களாக இருக்க முடியுமா? அல்லது ஷைத்தானின் நேரடி ஏஜெண்டுகளாக – ஷைத்தானின் தோழர்களாக இருக்க முடியுமா? சொல்லுங்கள். இறைவனால் அவனது கலாமான அல்குர்ஆன் மூலம் நேரடியாக ஏவப்பட்டதை விடுவதும், விலக்கப்பட்டதை எடுத்து நடப்பதும் முகல்லிது மவ்லவிகளின் வாடிக்கை; மார்க்கமில்லாததை மார்க்கமாக்குவதிலும் பிடிவாதமாக இருப்பார்கள்.

உதாரணமாக பாங்கு ஒலிபெருக்கியில் சொல்லப்பட்டாலும் உயரமான இடத்தில் நின்றுதான் சொல்ல வேண்டும், இடையில் வலது பக்கமும், இடது பக்கமும் திரும்ப வேண்டும் ஜும்ஆ உரை நிகழ்தும் போது கையில் ஒரு தடியையோ, வாளையோ பிடித்திருக்க வேண்டும்; எதிரே உள்ள மக்களுக்கு ஜும்ஆ உரை விளங்காவிட்டாலும் அரபபு மொழியில் தான் உரை நிகழ்த்த வேண்டும்; அதே போல் திருமண உரை அங்கு வந்திருக்கும் முஸ்லிம் மற்றும் மாற்று மத, நாத்திக மக்களுக்கு விளங்காவிட்டாலும் அந்த உரையை ஒரு வெற்றுச் சடங்காக அரபியில் தான் செய்ய வேண்டும் என்பதெல்லாம் முகல்லிது மவ்லவிகளின் பிடிவாதம். “தாடியை விடுவது எனது எஜமானனின் கட்டளை” என்ற நபி(ஸல்) அவர்களின் அறிவுறுத்தலுக்கு மாறாக தாடியை சிறைப்பது முகல்லிது மவ்லவிகளிடம் குற்றமில்லை. ஆனால் தொழுகையில் ஏவப்படாத தொப்பி போடுவது கட்டாயக் கடமை – பர்ழ் என வலியுறுத்தும் இமாம்கள், கசகசா தாடியுடன் தொப்பி தலைப்பாகைக் கட்டுவது அவர்களின் வெளி வேஷத்தை அம்பலப்படுத்தும். அந்த வரிசையில் பிறையைப் புறக்கண்ணால் பாாக்க வேண்டும், அதுவும் தத்தம் பகுதியில் பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதில் ஓரளவாவது நியாயம் இருக்கிறது.

ஆனால் இந்த த.த.ஜ. மவ்லவிகளுக்கு நேர்ந்தது என்ன? கரையேறி வந்த நாற்றக்குட்டையில் மீண்டும் போய் விழுகிறார்களே? குர்ஆன், ஹதீஸ் என தம்பட்டம் அடிக்கும் இவர்கள், முகல்லிது மவ்லவிகளைப் போல் சொந்த சுய விளக்கம் எதுவும் கொடுக்காமல், நேரடியாகச் சொல்லும் அதாவது பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே மாதத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்று சொல்லும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல; இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸையாவது இந்த த.த.ஜ. மவ்லவிகளால் காட்ட முடியுமா? இவர்களின் ரசிகர்களை மயக்க இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸையும் இவர்களால் காட்ட முடியாது. அல்லது 53:32 இறைக் கட்டளையைப் புறக்கணித்துவிட்டு – நிராகரித்து விட்டு (குஃபர்) தங்களைத் தாங்களே பரிசுத்தவான்கள்- தவ்ஹீத்வாதிகள்- ஏகத்துவவாதிகள் என பீற்றிக் கொண்டு 3:103,105, 6:153,159, 30:32, 42:13,14 போன்ற எண்ணற்ற இறைக் கட்டளைகளைப் புறக்கணித்து -நிராகரித்து (குஃப்ர்) 21:92,93, 23: 52,53 இறைக் கட்டளைகளை நிராகரித்து குஃப்ரில் த.த.ஜ. என பிளவுபடுத்தி-பிரித்து இத்தனை இறைக் கட்டளைகளை நிராகரித்து குஃப்ரில் வீழ்ந்து விட்டதால், அல்பகரா 2:39-ல் அல்லாஹ் கூறுவது போல் நரகவாசிகளாகி, அதிலேயே தங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளதால், தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜான் போனால் என்ன? முழம் போனால் என்ன? என்ற எண்ணத்தில் பிறை விவகாரத்தில் தங்களின் மூடத்தனமான வரட்டு கெளரவத்தை நிலை நாட்ட இப்படி பிடிவாதம் பிடிக்கிறார்களா?

அல்குர்ஆன் அல்ஹஜ் 22:27-ல் தூர நாடுகளிலிருந்து மெலிந்த ஒட்டகங்களில் ஹஜ்ஜுக்கு வருவார்கள் என்று நேரடியாகச் சொல்லப்பட்டிருந்தும், இன்று தூர நாடுகளிலிருந்து ஒட்டகம் அல்லாத ஆகாய விமானம் போன்ற நவீன வாகனங்களில் போவது குர்ஆனின் கட்டளைக்கு விரோதமானது அல்ல; ஹஜ் கடமையில் ஓர் அணுவளவும் குறைவு ஏற்படாது என்பது போல், பிறையைப் புறக்கண்ணால் பார்த்து மாதத்தை தீர்மானிக்க வேண்டும் என்று ஹதீஸில் நேரடியாகச் சொல்லப்பட்டிருந்தாலும் (அப்படியொரு பலவீனமான ஹதீஸும் இல்லை என்பது தனி விசயம்) இன்றைய நவீன கணினி கணக்கீட்டை ஏற்று மாதம் பிறப்பதை கண்ணால் பார்ப்பதைவிட மிகத் துள்ளியமாக அறிந்து அதன்படி நடப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே என்ற நிலை தெளிவாக இருக்கும் போது, புறக்கண்ணால் பிறையைப் பார்க்க வேண்டும் என்று ஓர் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் கூட இல்லாத நிலையில், அன்று போல் இன்றும் பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே தீர்மானிக்க வேண்டும் என்று அடம்பிடித்து பர்ழான ஆரம்ப நோன்பை விடச் சொல்கிறவர்கள், ஹராமான முறையில் ஷவ்வால் முதல் நாள் நோன்பு நோற்கத் தூண்டுகிறவர்கள் ஷைத்தானின் தோழர்களா? இல்லையா?

நபி காலத்து நடைமுறைகளை அதுவும் மார்க்க வரம்பிற்கு உட்படாத நடைமுறைகளை ஓர் அனுவளவும் பிசகாது, ஜானுக்கு ஜான் முழத்துக்கு முழம் அப்படியே பின்பற்றுவதாக நடிக்கும் இவர்கள், மார்க்க வரம்பிற்கு உட்பட்ட எத்தனைக் காரியங்களில் சிறிதும் அல்லாஹ்வின் அச்சமின்றி இவர்களின் மனம் போன போக்கில் செயல்படுகிறார்கள்? பட்டியலிடமா?

பிளவுகளோ, பிரிவுகளோ, வேற்றுமைகளோ இல்லாத ஒரே சமுதாயம் (21:92,93, 23:52,53) நடுநிலைச் சமுதாயம் (2:143) என்று தெள்ளத் தெளிவாக நேரடியாக அல்லாஹ் கூறியிருந்தும், இவர்கள் சுன்னத் ஜமாஅத் என்றும் த.த.ஜ. என்றும் ஸலஃபி என்றும் ஒரே சமுதாயத்தை மத்ஹபுகளின் பெயராலும், இயக்கங்களின் பெயராலும் அல்குர்ஆனின் 3:103,105, 6:153,159, 30:32, 42:13-14 என பல வசனங்களைப் புறக்கணித்து பல பிளவுகளாக, பிரிவுகளாக பிரித்து கூறுபோட்டு அற்ப உலக ஆதாயம் அடைந்து வருகிறார்களே, இதுதான் நபி(ஸல்) அவர்களை அணு பிசகாது அப்படியே பின்பற்றும் லட்சணமா?

தூய மார்க்கத்தைப் பிழைக்கும் வழியாகக் கொண்டு அதை மனிதக் கற்பனையிலான மதமாக்கக் கூடாது என்று ஐம்பது(50) இறைவாக்குகளில் எச்சரித்திருந்தும், அல்லாஹ்வின் அந்த எச்சரிக்கைகளை எல்லாம் புறக்கணித்துவிட்டு, மார்க்கத்தை மதமாக்கி தொண்டை தொழிலாக்கி அதையே பிழைப்பாக்கி தொப்பையை நிரப்பி வருகிறார்களே இதுதான் நபிவழியை அணுவளவும் பிசகாது கடைபிடிக்கும் லட்சணமா?

மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொள்ளும் கெட்ட நோக்கத்துடன் இவர்க்ள கற்பனை செய்து உருவாக்கி நடத்திக் கொண்டிருக்கிறார்களே புரோகித மதரஸாக்கள்! இந்த மதரஸாக்கள் எந்த குர்ஆன் வசனப்படி, ஹதீஸ்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது? நபி(ஸல்) மார்க்கத்தைப் பரப்ப இப்படியொரு புரோகித மதரசாவை உருவாக்கி வழிகாட்டி இருக்கிறார்களா? இல்லையே. அப்படியானால் இவர்கள் நபி(ஸல்) அவர்களை அணுவளவும் பிசகாது அப்படியே ஜானுக்கு ஜான் முழத்துக்கு முழம் பின்பற்றும் லட்சணம் இதுதானா? இவை போல் இன்னும் எத்தனையோ!

ஆம்! நாளை மறுமையில் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் முறையிடுவதாக 25:30-ல் சொல்லப்பட்டிருக்கிறதே அதுபோல் அல்குர்ஆனையும், ஆதாரபுர்வமான ஹதீஸ்களையும், இவர்களின் சொந்தக் கற்பனை யூகங்களையும் அல்லாஹ் சொல்வதாக, நபி சொல்வதாக பொய்யாகச் சொல்லி (பார்க்க: 2:79, 174, 31:6) மக்களை ஏமாற்றி அற்ப உலகம் ஆதாயம் அடைந்து வரும் புரோகித வர்க்கம் இந்த முகல்லிது, த.த.ஜ. மவ்லவிகள் வர்க்கம்.

1428 ஆண்டுகளுக்கு முன்னர் நபி(ஸல்) அவர்களது காலத்தில் அன்றிருந்த ஒரே வழியான கணினி கணக்கீடு போன்ற வேறு மாற்று வழியே இல்லாத காலகட்டத்தில் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து மாதத்தைத் தீர்மானிப்பது போல் இன்றும் இந்த கணினி யுகத்திலும் பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே மாதத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்று அடம் பிடிக்கும் முகல்லிது, செமி முகல்லிது த.த.ஜ. மவ்லவிகள், அன்றிருந்தது போல் வானத்தையும் எவ்வித மாசு மருவற்றதாக(Pollution) ஆக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். கண்களையும் அன்றிருந்து போல் மிகக் கூர்மையானதாக ஆக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

இன்றைய நவீன யுகத்தில் புகையைக் கக்கும் எண்ணற்ற வாகனங்கள், வாயுக்களை வெளியாக்கும் எண்ணற்ற வாகனங்கள், வாயுக்களை வெளியாக்கும் மின் கருவிகள், காசைக் கரியாக்கி புகையைக் கக்கும் பட்டாசுகள், வான வேடிக்கைகள் இன்ன பிற வானத்தை புகை மண்டலமாக்கும் எண்ணற்ற செயல்கள் மூலம் வானம் ஒரே புகைமண்டலத்தால் நிரம்பி வழிகிறது. ஓஜோனில் ஓட்டை விழும் அளவில் வானம் பகை மண்டலமாக்கியுள்ளது (Pollution) என்று விஞ்ஞானிகள் அலறுகிறார்கள். எனவே இந்த முகல்லிது, த.த.ஜ. மவ்லவி மேதாவிகள் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து தீர்மானிக்க அன்று போல் இன்றும் புகை வாயு மூட்டமில்லாத (Pollution) தூய வானத்தை ஏற்படுத்தித் தரட்டும்.

நூறு வருடங்களுக்கு முன்னிருந்த மனிதர்களின் உடல் ஆரோக்கியம், நடக்கும் தெம்பு, ஜீரண சக்தி, மனன சக்தி, பார்க்கும் கூர்மை இன்று இல்லை. அப்படியானால் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நபி காலத்தில் வாழ்ந்த மக்களின் மேலே கண்ட நிலைகள் எப்படி இருந்திருக்கும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். மேலும் இந்த நவீன யுகத்தில் உணவுப் பழக்கம், நடையற்ற நிலை, உடலில் பல கோளாறுகள், சினிமா, சின்னத்திரை, பெரிய திரை இப்படி பல என மக்களின் கண் பார்வையை மங்கச் செய்த நிலை, அன்றைய மக்களோடு ஒப்பிட்டால் இவர்கள் அரைக் குருடர்களே. எனவே இந்த நிலையையும் மாற்றி அன்றிருந்து மக்களுக்கு இருந்த கூர்மையான பார்வைக்கும் ஏற்பாடு செய்ய இந்த முகல்லிது, செமி முகல்லிது த.த.ஜ. மவ்லவிகள் கடமைப் பட்டிருக்கிறார்கள். இவை இரண்டையும் செய்து விட்டு பிறையை அன்று போல் இன்றும் புறக்கண்ணால் மட்டுமே பார்க்க வேண்டும் என அடம் பிடிக்கட்டும்.

**********************************

குற்றங்களில் கணவனுக்குக் கட்டுப்படாதே!

ஒரு பெண் தன் மகளை அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு இடத்தில் மணமுடித்துக் கொடுத்த பின் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என் மகளுக்கு தலைமுடி குறைவாக உள்ளதால், ஒட்டு முடி வைக்கும்படி என் மருமகன் வற்புறத்துகின்றார். (செய்யலாமா?) ” என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “கூடாது” என்று கூறினார்கள். (மார்க்கம் அனுமதிக்காதவற்றில் கணவனுக்கு மனைவி கட்டுப்படக் கூடாது என்பதை இதிலிருந்து தெரியலாம்)

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) ஆதார நூல்: புகாரி

உங்களில் யாரேனும் நீண்ட நாட்கள் வெளியூரில் இருந்துவிட்டு, முன்னறிவிப்பின்றி இரவில் திடீரென வீட்டிற்கு வரக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ரழி) நூல்: புகாரி

முகீரா(ரழி) என்பவர் ஒரு பெண்ணை மணமுடிக்க எண்ணியபோது, நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி,” நீ சென்று (நீ மணமுடிக்கப் போகும்) பெண்ணைப் பார்த்துக் கொள்! உங்களிருவரிடையே அது அன்பை ஏற்படுத்தத் தகுந்ததாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்(ரழி) நூல்: இப்னுமாஜா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக