வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

பிறை வாதம்

வாதம்
1) குர் ஆன் வசனம் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறுகிறது இதிலிருந்து அடைபவர்கள் என்றும் அடையாதவர்கள் என்றும் இரு சாரார் பற்றி குறிப்பிடப்படுகிறது. இதற்கு மாற்று கருத்துடையவர்கள் பல முறை இதில் வரும் வார்த்தை ஷஹித என்பதற்கு அடைந்தார்கள் என்று பொருள் செய்வதை விட பெறுவார்கள் (கேள்விபடுதல், சாட்சியாக இருத்தல் செய்தி மூலம் அறிய பெறுவது) என்பது பொருந்தும் இவ்வாரு இந்த வார்த்தைக்கு பொருள் செய்வது குர் ஆன் ஹதீஸில் கையாளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இரண்டாவதாக இதை அடைவார்கள் என்று கருத்து கொண்டாலும் அந்த அடைவார்கள் என்பதற்கு செய்தி மூலம் அடைவது உட்பட்ட பொருளும் உள்ளதால் செய்திமூலமோ பார்ப்பதின் மூலமோ அடைந்தவர்கள் அறிந்தவர்கள் நோன்பு நோற்க வேண்டும், அல்லாதவர் நோற்க வேண்டாம் என்றும் இதை புரிந்து கொள்ள இயலும். ஆக இந்த வசனம் அவர்கள் கூறும் கருத்தைபோன்றே அவர்களுக்கு மாற்று கருத்தையும் கூறும் விதமாக உள்ளது. இன்னும் சில ஆங்கில மொழிப்பெயர்ப்புகள் அந்த 2:185 வசனத் தொடர் பிரயாணிகள் நோயாளிகள் தவிற என்று தொடருவதால் (பிரயாணத்திலும் நோயாளிகளுமாக அல்லாத நிலையில்) ஊரில் உள்ளவர்கள் என்றும் மொழி பெயர்த்துள்ளனர்.

வாதம்
2) இரண்டாவது வைக்கப்பட்ட ஹதீஸ் அதாவது பிறை பார்த்து நோன்பு வையுங்கள் பிறை பார்த்து நோன்பு விடுங்கள் மேகம் இருந்தால் ஷஃபானை முப்பதாக கணக்கிடுங்கள். இந்த ஹதீஸின் அடிப்படையில் பிறை பார்த்து தான நோன்பு வைக்கவோ விடப்படவோ வேண்டும் என்றும் 'கணிக்க தடைவுள்ளது' என்றும் ஆணித்தரமாக கருத்து கூறப்பட்டது. பிறை பார்ப்பது இங்கு ஏவப்பட்டாலும், ஒவ்வொரு முஸ்லிமும் பிறையை பார்த்துவிட்டு பின்னர் தான் நோன்பு வைக்க வேண்டும் பிறையை பார்க்கவில்லையென்றால் நோன்பு வைக்கக் கூடாது என்று இது கூறுகிறது என்று யாரும் கூற மாட்டார்கள். ஆக பிறையை பார்க்க வேண்டியதை பிறையின் செய்தியை அறிவிப்பை அறிய வழியில்லாத ஒரு சூழ்நிலையில், இடத்தில் முஸ்லிம்கள் இருக்கும் போது, எக்காலத்திற்கும் பொருந்தும் இஸ்லாம் வகுத்துள்ள ஒரு வழிமுறையே இது என்று விளங்கினால் இதுவும் முரணாகாது என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். அ ல்லாஹ் மிக அறிந்தவன்.


வாதம்
3) எங்கு பிறை கண்டாலும் அதை கருத்தில் கொள்ள வேண்டும் என்பவர்கள் அந்த கருத்தில் உறுதியாக இருந்தால் உலகில் எங்கு தெரிகிறதோ அப்போதே அவர்கள் (அதாவது சில பகுதிகளில் இரவாக இருப்பதால்) நோன்பு நோற்குமாரு வரும் இரவில் நோன்பு நோற்க இயலாது இவர்களும் அவ்வாரு செய்வதில்லை ஆகையால் இவர்கள் தெளிவில்லாமல் ஏமாற்றுகிறார்கள் என்று விளங்கலாம். இங்கு இவர்கள் தமது கருத்தை வைக்க அடுத்தவர்கள் கருத்தை நிராகரிக்க நையாண்டி செய்யும் விதமாக இது உள்ளது மேலும் நோன்பு என்பது ஸஹர் நேரம் முடிந்தது முதல் சூரிய அஸ்தமனம் வரை என்ற வகுக்கப்பட்ட அடிப்படையை மறந்து மாற்றமாக பேசுவதாக உள்ளது. மாதத்தின் துவக்கம் என்பது வேறு நாளின் துவக்கம் என்பது வேறு என்பதை கவனிக்க தவறுகின்றனர். மேலும் சந்திரன் மாத்த்தின் துவக்கத்தையும் சூரியன் நாளின் துவக்கத்தையும் அறிவிக்கும் அல்லாஹ்வின் ஏற்பாடு என்பதையும் மறக்கின்றதாகும்.

வாதம்
4) சூரியனுடைய நேரத்தை கணித்து தொழுகையை நிறைவேற்றுவது என்பது வேறு ஆனால் சந்திரனை அவ்வாரு கணக்கிட இயலாது ஏனென்றால் சந்திரன் உதயம் நேரம் மாறு படும் அது சில நெரங்களில் பகல் பத்து மணிக்கு உதிக்கும் ஆகையால் அந்த நேரம் முதல் அந்நாளை கணக்கிட்டால் பகல் 10 மணி என்றும் இரவு பத்து மணியென்றும் நாளை துவக்க வேண்டி வரும் இதுவும் இயலாது, மேலும் இவர்கள் கருத்துப்படி ஸவூதியில் ஒரு தொழுகையின் நேரம் இருப்பதால் உலகெல்லாம் அந்த தொழுகையின் நேரம் என்று கூறி தொழ இயலாது சில பகுதிகளில் அது நள்ளிரவாகவும் பகலாகவும் என்று மாறி மாறி இருக்கும் போது இது சாத்தியப்படாது. மக்ரிப் நேரம் ஆகி நோன்பு திறக்கும் நேரத்தில் உலகெல்லாம் நோன்பு திறக்க சொன்னால் சில பகுதியுல் பகலாக இருக்கும் பகலில் நோன்பை திறக்க வேண்டி வரும்….. இதுவும் முக்கிய அடிப்படையான நோன்பின் நேரத்தை ஸஹ்ர் முடிவு சூரிய அஸ்தமம் போன்றவை அந்த அந்த இடத்தின் சூரிய ஓட்டப்படி அறியும் நேரப்படி செயல் படுத்தப் பட வேண்டும் என்று புரிந்தால் சிறிதும் முரண்படாது. அதே போல் சந்திரன் உதயம் அஸ்தமத்தையும் துல்லியமாக உலகின் எல்லாப்பகுதிகளுக்கும் முன் கூட்டியே அறிய அறிவிக்கவும் இயலும் அறிவிக்கவும் படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாதம்
5) மக்காவில் தொழும் போது கஃபாவை சுற்றிலும் தொழுகிறோம் அவ்வாரு நம்மூரில் தொழ முடியாது நாம் அவ்வாரு தான் அனைவரும் தொழ வேண்டும் என்று சொல்ல மாட்டோம். இதுவும் கஃபாவை நோக்கி தொழ வேண்டும் என்ற அடிப்படைக்கு மாற்றமாக அதை மறந்து பேசுவதாக உள்ளது. ஆக தொழுகையின் நேரம், துருவ பிரதேசத்தில் ஆறு மாதம் பகல் ஆறு மாதம் இரவு எனும் விஷயத்தில் ஆய்வு செய்து கணித்து தொழுகையில் நேரத்தையும் நோன்புன் நேரத்தையும் முடிவு செய்ய வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக